ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை வழக்கம் போலவே அதிகமாக வாய்ச் சவடால் விடும் பாஜகவின் நிதிநிலை அறிக்கைதான். 2014ஆம் ஆண்டில் இருந்து பாஜக போட்ட நிதிநிலை அறிக்கைகளில் இவ்வாண்டும் புதிய விசயம் என்று சொன்னால், 'அமுத காலத்தில் 'சப்தரிஷிகள்' நம்மை வழிநடத்துகிறார்கள் என்ற வாக்கியம்தான். நிர்மலா சீதாராமன் வழக்கமாக வாசிக்கும் திருக்குறளையும் இந்த ஆண்டு காணவில்லை. 'அனைவருக்கும் வீடு', 'விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு', 'உள்கட்டுமானத்தில் ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு' '2024க்குள் ஐந்து டிரிலியன் டாலர் பொருளாதாரம்' போன்ற இதுவரை எதுவும் நிறைவேற்றப்படாதவை, மீண்டும் காணப்பட்டன.