முக்கியத்துவம் வாய்ந்த 2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மே 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, இந்த ஆண்டு மேலும் ஆறு சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கடந்த இரண்டு பத்தாண்டுகளாக, பாசிசப் படை யணியின் தெற்கு நோக்கிய பயணத்திற்கான முக்கிய ஆய்வகமாக கர்நாடகம் உருவாகி யுள்ளது. 2014ல் மத்தியில் மோடி ஆட்சி அரியணை ஏறியதன் மூலம் அதிகாரம் பெற்ற பாசிச சக்திகள், புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர் எம்.எம்.கல்புர்கி, சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலையின் மூலம் தங்கள் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத் தினர்.