ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா வாக்காளர்களைப் பார்த்து காங்கிரஸ் வெற்றி பெற்றால், மாநிலத்தில் கலவரங்கள் வெடிக்கும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தபோது, பாஜக ஆளும் மணிப்பூரில் மோசமான இன வன்முறை வெடித்தது. அது திட்டமிடப்பட்ட கலவரம் என்பதற்கான அனைத்து அடையாளங் களையும் கொண்டிருந்தது. ஒன்றிய அரசு, பாஜக ஆளும் மாநிலங்களில் 'இரட்டை இயந்திர அரசாங்கம்' உள்ளது என்றது. மணிப்பூரில் அரசிலமைப்புச் சட்டப் பிரிவு355ஐ பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய இரட்டை இயந்திர ஆட்சி, கண்டதும் சுட உத்தரவிட்டது. இறந்தவர்கள் எண்ணிக்கை 50ஐத் தாண்டியது.