சந்திராயன்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கியிருப்பது நிச்சயமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் வரலாற்று சாதனையாகும். நிலவுப் பயணம் ஒன்று, நிலவின் தெற்கு முனையில் கால்பதித்திருப்பது முதல் முறையாகும். நிலவின் உண்மை நிலை குறித்து மேலதிக படிப்புக்கும் கண்டு பிடிப்புகளுக்குமான வாய்ப்புகளைத் இது திறந்து விடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அறிவியல் வல்லமையில் இது போன்றதொரு மைல்கல் பொதுவாக அறிவியல் தொழில் நுட்பத்திலும் குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னோக்கிய பயணத்தை உந்திச் செலுத்தும் ஆற்றல் கொண்டதாகும்.