சீமானின் அரசியல்

ஸ்ரீலங்காவில்  அந்த நாட்டின் அரசின் வெளிப்படையான ஆதரவுடன் 1983ஆம் ஆண்டு  ஜூன், ஜூலை மாதங்களில் தமிழர்களுக்கு எதிராக நடந்த  இனக்கொலையை அடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். அதற்கு முன்பே தமிழர்கள் மீது சிங்களர்கள் நடத்திய தாக்குதல்கள் இருந்தபோதிலும் மேற்சொன்ன நிகழ்வுதான்  தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கான ஆதரவு பெருகச் செய்தது. அந்த ஆண்டு முதலே பல்வேறு தமிழீழப் போராளிக் குழுக்களும் தமிழகம் வந்தன.