ஏப்ரல் 22, 2023 இகக(மாலெ) தோற்று -விக்கப்பட்டதன் 54வது ஆண்டு. இந்த தருணத்தில், தோழர் சாருமஜும்தாருக்கும் கட்சியை தோற்றுவித்த மற்ற தலைவர்களுக்கும் கட்சியை வலுப்படுத்தவும் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் கடந்த 54 ஆண்டு களாக தங்களது அனைத்தையும் தியாகம் செய்தவர்களுக்கும் புரட்சிகர அஞ்சலியை செலுத்துகிறோம். ஏப்ரல் 22, உலகின் முதல் சோசலிச புரட்சியின் முதன்மை சிற்பியும் மார்க்ஸ் எங்கல்சுக்குப் பிறகு மார்க்சிய தத்துவம், நடைமுறையின் ஆகச் சிறந்த பிரதிநிதியுமான தோழர் லெனினது பிறந்த நாளுமாகும்.

தோழர் லெனினுக்கு வணக்கம் செலுத்து கிறோம், அவரின் மாபெரும் புரட்சிகர மரபை உயர்த்திப் பிடிக்க உறுதி கொள்கிறோம்.

பாட்னாவில் வெற்றிகரமாக நடைபெற்ற கட்சியின் 11வது காங்கிரசைத் தொடர்ந்து, 'பாசிசத்தை தோற்கடிப்போம்; தியாகிகள் கனவு கண்ட இந்தியாவைக் கட்டமைப்போம்' எனும் காங்கிரசின் எழுச்சி முழக்கத்தை செயல்படுத்தும் கடமை ஒட்டு மொத்த கட்சியின் முன் உள்ளது.

கட்சி துவக்க நாளில், ஒவ்வொரு கட்சிக் கிளையின் பாத்திரத்தை அதிகரிப்பதன் மூலமும் அனைத்து முனைகளிலும் கட்சியை விரிவுபடுத் துவதன் மூலமும் கட்சியை வலுப்படுத்த உறுதி கொள்கிறோம். ஒவ்வொரு கட்சிக் கிளை, உள்ளூர் கமிட்டியின் அதிகரித்த வலுவும் பாத்திரமும்தான் பாசிச தாக்குதலை எதிர்த்துப் போராடும் கட்சியின் திறனை உயர்த்துவதற்கான திறவுகோலாகும்.

மோடி -அதானி கூட்டு அம்பலப்பட்டு வருவதாலும் விலை உயர்வுக்கு எதிராக, வேலையின்மை, ஒடுக்குமுறை புல்டோசர் ஆட்சிக்கு எதிராக மக்களது கோபம் அதிகரித்து வருவதாலும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் மோடி அரசாங்கமும் சங்க் பரிவாரமும் அதிகரித்த அளவில் மூர்க்கமடைந்து வருகின்றன. இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர, மீண்டும் ஒருமுறை மதவாத வெறியை உசுப்பி விடுவதன் மூலம், பாஜக தனது பாசிச பயணத்தில் இளைஞர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது காலாள் படையாக்கிக் கொள்ள முயன்று வருகிறது. இந்த பிரித்தாளும் ஆட்டத்தின் கேடுகெட்ட முகத்தை சமீபத்திய ராம் நவமியின் போது பார்த்தோம். அதே சமயம், மோடி ஆட்சி எதிர்க்கட்சியை ஒடுக்கவும் நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களையும் கடத்திச் செல்லவும் குடிமக்களின் ஒவ்வொரு அரசமைப்புச்சட்ட உரிமைகளைக் கட்டுப்படுத்தி டவும் முழுமூச்சாக இறங்கியுள்ளது.

எனவே, அனைத்து பிரிவு மக்கள் மத்தியிலும் மத, மொழி வேறுபாடுகளையும் ஊடறுத்து, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஒருமைப்பாடு பிணைப்புகளை வலுப்படுத்த வேண்டியது மிக முக்கியமானது.

தொழிலாளர், விவசாயிகள், ஆண்கள், பெண்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் அனை வரும் ஒருவரோடு ஒருவராக ஒன்றாக சேர்ந்து நின்று, பாசிசத்தை தோற்கடிக்க, ஒன்றுபட்டுப் போராடி, ஜனநாயகத்தை பாதுகாக்க, இந்தியாவை பாதுகாக்க முன்வர வேண்டும். 2023 நெடுக, தொடர்ச்சியான, முக்கியமான சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் மிக முக்கியமான மக்களவைத் தேர்தலும் நடக்க உள்ளன. இந்த அனைத்து தேர்தல்களிலும் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும், வலுவிழக்கச் செய்யப்பட வேண்டும். அடுத்த மக்களவையில் புரட்சிகர இடது இடம் பெறுவதை உறுதி செய்திட தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப் படவும் வேண்டும்.

நமது தியாகிகள், மறைந்த தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கம்.

இகக(மாலெ)வை வலுப்படுத்துவோம்; பாசிச எதிர்ப்பு பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையைக் கட்டமைப்போம்.

போராடுவோம், வெற்றி பெறுவோம்!