கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்களை ஒன்றிய பாஜக அரசு சீர்குலைப்பதை கண்டித்தும் அதற்கு துணை போகும் ரங்கசாமி நமச்சிவாயம் இரட்டை எஞ்சின் ரியல் எஸ்டேட் கூட்டணி ஆட்சியை அம்பலப்படுத்தியும் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் புதுச்சேரி மாநில கமிட்டி சார்பில் பரப்புரை இயக்கம் செப்டம்பர் 6, 7 தேதிகளில் ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. பரப்புரை இயக்கத்தை அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன தேசிய தலைவர் சோ.பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐசிசிடியு மாநிலச் செயலர் புருஷோத்தமன், ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அருள், பொருளாளர் விஜயா, ஏஐசிசிடியு துணைத் தலைவர் கோ.பழனி, இகக(மாலெ) மாநில கமிட்டி உறுப்பினர் மல்லிகா, புரட்சிகர இளைஞர் கழகம் சுவாதி மார்த்தாண்டன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு பேசினர்.