இந்த ஆண்டின் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேச மோடி நாடாளுமன்றத்திற்குள் வரும்போதே, பாஜகவினர் மேசையைத் தட்டி மோடி மோடி என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். இது மோடி 2.0 வின் கடைசி நாடாளுமன்ற உரை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மோடி அரசு, திட்டமிட்டு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மாநில முதல்வர்களைக் கைது செய்தும் வஞ்சித்து கொண்டிருக்கிறது. இதைக் கண்டித்து, பிப்.7 அன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில், மோடி அரசின் ஓர வஞ்சனையைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம், பிப்.8 அன்று டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் என மோடியின் ஒன்றிய அரசு மாநில அரசுகளின் எதிர்ப்புகளை நேரடியாகச் சந்தித்துக் கொண்டி ருக்கிறது. தன்னுடைய கடைசி உரையிலும், வழக்கம்போல் தாங்கள் மக்களுக்கு என்ன செய்தோம் என்று சொல்வதைக் காட்டிலும் முந்தைய ஆட்சியை, எதிர்க் கட்சிகளைக் குறை சொல்லியும் குற்றம் சொல்லியுமே பேசினார். ஆனால், இம்முறை அதில் விசமத்தனம் இருந்தது. வடக்கு-தெற்கு என்று பிரித்துப் பேசும் வேலையை தேசியக் கட் செய்கிறது என்றும், 'எங்கள் வரி-எங்கள் பணம்' என்று கேட்கிறீர்களே, நிலக்கரியை அதிகம் உற்பத்தி செய்யும் கிழக்கு மாநிலங்கள், நிலக்கரியை மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்காமல் நிறுத்திவிட்டால், இமய மலையில் உற்பத்தியாகும் தண்ணீர் தங்களுக்கு மட்டுமே என்று அம்மாநிலங்கள் சொன்னால், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் கிழக்கு மாநிலங்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதை மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்க மறுத்திருந்தால், என்ன நடக்கும் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் என்று மாநிலங்களுக் கிடையே மோதல்களை உருவாக்க நினைக்கிறார் நாட்டின் பிரதமர். இந்தியாவின் இயற்கை வளங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை, மாநிலங்களின் வரியை யெல்லாம் ஒன்றிய அரசு வாங்கி வைத்துக் கொண்டு, தனது பாஜக ஆட்சி உள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகமாக ஒதுக்கி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஓர வஞ்சனை செய்வதோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். மணிப்பூரில், குர்தி மக்களுக்கும் மெய்டி மக்களுக்கும் இடையே பகையை மூட்டிவிட்டு அதில் குளிர் காய்வதுபோல், மாநிலங்களுக்கிடையே அம்மாநிலங்களின் மக்களுக்கிடையே பகையை மூட்டப் பார்க்கிறார். றார். இந்தியா ஒரே ந ஒரே நாடு என்று சொல்லிக் என்று கொண்டு, பல்வேறு இன, மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட நாட்டில் மதங்களுக்கிடையே, இனங்களுக்கிடையே, பெரும்பான்மை, சிறுபான்மை என பிரித்தாளும் வேலையைச் செய்து கொண்டிருக்கும் பாஜக மோடி அரசு, அதில் இன்னுமொருபடி மேலே சென்று மாநிலங்களுக்கிடையே மோதலை உருவாக்கப் பார்க்கிறது. பொதுத் துறை நிறுவனங்களை நாங்கள் விற்கிறோம் என்று சொல்கிறீர்களே, பிஎஸ்என்எல்லை, எம்டிஎன்எல்லை யார் விற்றார்கள்? என்று கேட்கிறார். முந்தைய ஆட்சி கொஞ்சம் விற்றது, நாங்கள் முழு நாட்டையும் விற்கிறோம் என்று வெட்கமில்லாமல் ஒப்புக் கொள்கிறார் மோடி. முந்தைய காங்கிரஸ் அரசு அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது கொடுக்காமல் தன் குடும்பத்தாருக்குக் கொடுத்தது என்கிறார். அப்படி யாருக்குக் கொடுத்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், பாஜக- மோடி அரசு யாருக்குக் கொடுக்கிறது. அத்வானிக்குக் கொடுக்கிறது. இராமர் கோயிலுக்காக பாட பாபர் மசூதியை இடித்த, அதற்காக ரதயாத்திரை நடத்திய அத்வானிக்கு கொடுக்கிறது, ஆங்கிலேயர்களுக்கு அடிமை யாகச் செயல்பட்ட, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கருக்கு கொடுக்க முயல்கிறது. இராமர் கோயிலுக்கு அச்சாரம் போட்ட அத்வானியை கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்காமல், தனக்குத் தானே பட்டாபிஷேகம் நடத்திக் கொண்டார் மோடி. 400 ரூபாய் இருந்த சமையல் எரிவாயு உருளை 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது பற்றி, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது பற்றி வாய் திறக்க மறுக்கும் மோடி, தேர்தல் கமிஷன்,மின்னணு வாக்கு எந்திரத் தில்லுமுல்லுகளுடன் மாநிலங்களுக்கிடையயேயும் மோதல்களை உருவாக்கி ஓட்டு வாங்கிடப் பார்க்கிறார்.