lakhimpur kheri, cpiml, farmers, struggle, teni, minister

விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மத்திய இணை அமைச்சர் டேனி, அவரது மகன் மீது குற்றவியல் நடவடிக்கை எடு! இகக(மாலெ) கோரிக்கை

விவசாயிகள் இயக்கத்தின் மீது மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு சென்று மோடி அரசாங்கம் கொடிய முறையில் தாக்குதலைத் தொடுக்கின்ற போது விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரி வித்து நாம் நிற்கிறோம்.

லக்கிம்பூர் கேரி சம்பவம் மோடி, யோகி அரசாங்கங்கள் மற்றும் பாஜகவின் விவசாயிகள் விரோத வெறுப்பு மற்றும் பகைமையை பறைசாற்றுகின்ற விதமாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நீதி விசாரணை உண்மையிலேயே நீதி வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி யுள்ளது. இழப்பீடு வழங்குவதன் மூலம் விவசாயிகள் இயக்கத்தை அமைதி கொள்ள செய்துவிடமுடியாது. இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சாவுகள் உண்மையிலேயே படுகொலை என்பதையும் அதில் அரசாங்கமும் உடன்பட்டிருக்கிறது என்பதற்கான அங்கீகார மாகவே அதை கருதமுடியும்.

இந்தக் கொடிய சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் மகன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 விவசாயிகள் மீது தனது காரை ஏற்றி கொன்றதோடு, அவர் வாகன அணிவகுப்பில் வந்த வாகனங்கள் மோதியதில் பலர் படுகாயமடைந்திருக்கின்றனர். காரை ஏற்றிக் கொன்றதற்குப் பிறகு அமைச்சரின் மகன் தன் கைத்துப்பாக் கியால் சுட்டு ஒரு விவசாயியை கொன்றதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் இந்தத் தாக்குதலில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைவெறி தாக்குதலுக்கு முன்னர் அமைச்சர் டேனியும் ஹரியானா மாநில முதலமைச்சர் கட்டாரும் விவசாயிகளுக்கு அச்சுறுத் தல் விடுத்திருந்தனர். நில அபகரிப்பு நடவடிக்கையின்போது அஸ்ஸாம் காவல்துறை, விவசாயி மைனல் ஹக் என்பவரை கொடூரமாக கொலை செய்ததைத் தொடர்ந்து லக்கிம்பூர் கேரி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது சிறுவன் ஷேக் பரீத் என்பவரும் கொல்லப்பட்டார். மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் ஹிமந்த பிஷ்வா ஷர்மா இந்த வன்முறை அப்புறப் படுத்தலை, கொலையை இஸ்லாமிய அச்சுறுத்தல் என்று வகைப்படுத் தும் விதம் கொலை செய்யப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், அப்புறப் படுத்தப்பட்டவர்கள் என அனைவரும் 'வங்கதேசத்தவர்' என்று நியாயப் படுத்தினார்.

நரேந்திர மோடி அரசாங்கம், அஜய் மிஸ்ராவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அவர் மகன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இன்னும் அதிக விவசாயிகளின் உயிர் காவு போவதற்கு முன் மோடி அரசாங்கம் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.