இந்துத்துவ பாஜக ஆட்சிக்கு எதிரான உண்மையான மாற்று இடதுசாரிகள்தான்

பஞ்சாபில் நடைபெற்ற 10ஆவது காங்கிரஸிலிருந்து இப்போது நடைபெறும் 11ஆவது காங்கிரஸ் வரை நாங்கள் உங்களோடு இருக்கிறோம். ஒன்றிய மோடி ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் மீதான, குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. தொழிலாளர் வர்க்க விரோத, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை இந்த அரசாங்கம் மிகவும் வெளிப்படையாக அமலாக்கம் செய்து வருகிறது.4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் கடும் போராட்டத்தின் விளைவாக ரத்து செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களுக்கான உதாரணங்களாகும். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வறுமையால் மக்கள் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இகக(மாலெ)யின் 11வது காங்கிரசின் பொது அமர்வில் பொதுச் செயலாளர் தோழர் திபங்கரின் துவக்க உரை

மாநாட்டுத் தலைமை தோழரே, பிரதிநிதித் தோழர்களே, பார்வையாளர்களே, இந்தியாவில் உள்ள பல்வேறு இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களே, வெளிநாட்டில் இருந்து வந்துள்ள சகோதரத்துவ அமைப்புகளின் தலைவர்களே, ஊடக நண்பர்களே, இங்கே கூடியிருக்கும் பாட்னாவின் குடிமக்களே, இகக(மாலெ)யின் 11வது மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாட்டில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து, ஆயிரத்து எழுநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டுள்ளதால், இது நமது கட்சி வரலாற்றில் மிகப்பெரிய காங்கிரஸ் ஆகும்.

‘ஜனநாயகத்தைக் காப்போம், இந்தியாவைக் காப்போம்' பேரணி 15.02.2023 காந்தி மைதானம், பாட்னா

1. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி யின் அரசு சலுகைசார் முதலாளித்துவத்தை ஹிண்டன் பர்க் அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது. பாஜகவை ஆட்சியில் தக்க வைக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பணத்தை வாரி இறைத்தன; பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டன; இதில் நாட்டின் ரயில்வே, எஃகு நிறுவனம், வங்கிகள், எல்ஐசி, மற்ற பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையும் அடங்கும்.

இகக(மாலெ) விடுதலை 11வது அகில இந்திய மாநாடு 2023 பிப்ரவரி 15-20, பாட்னா- பீகார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் 11வது காங்கிரஸ் (அகில இந்திய மாநாடு) 2023 பிப்ரவரி 15-20 தேதிகளில் நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னா செங்கொடிகளாலும் செம்பதாகைகளாலும் சிவப்பு மயமாக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 15 பாட்னாவின் காந்தி மைதானம் மக்கள் திரளால் தினறியது.