திரிபுராவில் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை சரிந்தாலும், பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. குஜராத் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைப் போலவே, திரிபுராவிலும், தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே முதலமைச்சரை மாற்றியதன் மூலம், மாநில ஆட்சிக்கு எதிர்ப்பை பாஜக தெளிவாகக் குறைக்க முடிந்தது. திரிபுராவின் பழங்குடியின மக்களிடையே மக்கள் ஆதரவுடன் பிராந்தியக் கட்சியாக திப்ரா மோதா தொடர்ந்து எழுச்சி பெற்றிருப்பது திரிபுரா தேர்தல்களின் மிக முக்கியமான அம்சமாகும். திப்ரா மோதாவின் எழுச்சி மும்முனைப் போட்டியில் பாஜக தனது அரசாங்கத்தை காப்பாற்ற மிகப்பெரிய உதவியாக மாறியுள்ளது.