தலையங்கம்

ஏப்ரல் 15 அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்க, பிரயாக்ராஜ் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் அகமது இருவரும் தண்டனைக் கைதிகளாக போலீஸார் புடை சூழ கையில் விலங்குடன் அழைத்துச் செல்லப்படும்போது, அவர்களுக்கு மிக அருகில் வந்து சங் பரிவார் குண்டர்கள் அவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். அவர்களைக் கொல்லும் போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறார்கள். அவர்கள் இருவரும் இறக்கும் வரை சுடுகிறார்கள். அதை போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலையங்கம்

தேர்தல் வந்தாலே பாஜக-சங்கிகளின் அட்டூழியங்கள் அதிகமாகத் தொடங்கிவிடும். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இஸ்லாமிய ஓட்டுநரை பசுவைக் கடத்தினார் என்று பசுப் பாச பாஜக குண்டர்கள் அடித்தே கொன்றுவிட்டார்கள். கடந்த ஆண்டு ராம நவமியின் போது சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வாழுமிடங்கள், பள்ளிவாசல்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று, கலவரங்கள் செய்து காவிக் கொடியை பள்ளிவாசல்களில் கட்டினார்கள். வாளை ஏந்திக் கொண்டு, இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்களைக் கத்திக் கொண்டு ஊர்வலம் நடத்தினார்கள். அனுமன் ஜெயந்தியின் போதும் இதுபோன்ற கலவரங்களை கட்டவிழ்த்து விட்டது சங்கிகள் கூட்டம்.