சர்தார் உத்தம் -

மறக்கக் கூடாத வரலாற்று நிகழ்வு

1919 ஏப்ரல் 13 அன்று, பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் நிகழ்த்தப்பட்டது ஜாலியன் வாலாபாக் படுகொலை. அதன் நேரடியான சாட்சி உத்தம் சிங்; கொலையுண்ட தனது மக்கள் மற்றும் தோழர்களின் தாங்கவொண்ணா நினைவுகளைச் சுமப்பவர்; அந்த நினைவுகளில் நிம்மதியையும், தூக்கத்தையும் தொலைத்தவர்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டு மக்கள் விடுதலை பெற வேண்டுமென்ற வேட்கை மிகுந்தவர்; கம்யூனிச லட்சியங்களும், புரட்சி பற்றிய கனவுகளும் கொண்டவர். அவரின் கதைதான், சுஜித் சர்க்கார் இயக்கியுள்ள இந்தி மொழித்திரைப்படம் "சர்தார் உத்தம்".

1931 இல் உத்தம் சிங் (விக்கி கௌஷால்) சிறையிலிருந்து விடுதலையாகும் போது, படம் துவங்குகிறது. அவர், நாட்டு விடுதலைக்காக போராடிய, இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு கழகம் (பிஷிஸிகி) என்ற புரட்சிகர இயக்கத்தின் ஒரு உறுப்பினர். பகத்சிங்கின் நண்பர். பஞ்சாப் போலீஸின் கண்காணிப்பிலிருந்து தப்பி ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக லண்டன் போய் சேருகிறார். அங்கிருந்து, ஐரிஷ் குடியரசு இராணுவம் (மிஸிகி) உள்ளிட்ட, மற்ற பல நாடுகளின் புரட்சிகர இயக்கங்களிடம் நாட்டு விடுதலைக்கு உதவி கேட்கிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலையை நேரடியாக களத்தில் நிகழ்த்தியது ஜெனரல்.ரெஜினாலட் டயர். ஆனால் அவருக்கு ஆணை பிறப்பித்த, அப்போதைய பஞ்சாப் மாநில துணைநிலை ஆளுநராக இருந்தவர் மைக்கேல் 'ட்வயர். லண்டனில் பல நேரங்களில் இந்த படு கொலையை நியாயப்படுத்தி பேசுகிறார். 1940 மார்ச் 13 அன்று மைக்கேல் 'ட்வயர், ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கிறார். அங்கே, உத்தம் சிங் அவரைப் படுகொலை செய்கிறார். கைது செய்யப்பட்டு, சிறைப் படுத்தப் படுகிறார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகிறார். நீதிமன்றத்தில் கொலை குற்றவாளியாக நிறுத்தப்படுகிறார். பாரபட்சமான நீதிமன்றம், அவரைக் கொலைகாரன்  என குற்றம் சுமத்துகிறது. “நான் கொலைகாரனல்ல; என் நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடுபவன்; இது ஒரு எதிர்ப்புப்  போராட்டம்; நீங்கள் எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்; இன்குலாப் சிந்தாபாத்என முழக்கமிடுகிறார். பிறகு, தூக்கு மேடையில் தன் இன்னுயிரை இழக்கிறார்.

நாட்டுப்பற்றை வணிகமயமாக்கி பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலா னவை, பாகிஸ்தானையும் முஸ்லிம்களையும் எதிரிகளாக சித்தரிப்பவை. மதவெறியை, தேசவெறியை ஊட்டி வளர்ப்பவை. இந்தப் படங்களின் கதாநாயகர்கள் மாவீரர்களாக, தன்னொழுக்கம் பேணுபவர்களாக மற்றும் ஆண்மையுள்ளவர்களாக காட்டப்படுகிறார்கள். தேச வெறியை ஊட்டுபவர்களாக உள்ளனர். மறுபுறம் காலனியாட்சி காலகட்ட கதைக்கருவை கொண்ட படங்கள் உள்ளன. இந்தப் படங்கள், ஏகாதிபத்திய அரசுக்கு சம்பந்த மில்லாமல், ஆங்கிலேய அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் கொடூரர்களாக, சித்தரிப்பவை. மாறாக, இந்திய நாட்டு மக்களின் உழைப்பையும், அந்த உழைப்பினால் விளைந்த செல்வத்தையும், உறிஞ்சி எடுத்துச்செல்லும் அட்டைப் பூச்சி போன்ற, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் கொடூர பண்பை, இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. மேலும், எளிய மனிதர்களின் கதாநாயகப் பண்பை வெளிப்படுத்துகிறது

புரட்சியாளர்கள் வன்முறையை நேசிப்ப வர்கள் அல்ல; வாழ்க்கையை நேசிப்பவர்கள்; கொண்டாடுபவர்கள். பகத்சிங்கும் மற்ற தோழர்களும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நாட்டு விடுதலைக்குப் பிறகு என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு, "சார்லி சாப்ளின் படம் பார்ப்பேன்; விலையுயர்ந்த பிரிட்டிஷ் ஒயினை வாங்குவேன்; ஒரு ஆங்கிலேய பெண்ணுடன் நடனமாடுவேன்; இப்படியான வாழ்வை வாழ்வேன்" என்கிறார். அதே காட்சியில் ஒரு புரட்சியாளருக்கும், தீவிரவாதிக்குமான வேறுபாட்டை சிறப்பாக விளக்குகிறார்.

நேர்கோட்டில் கதை சொல்லாமல், முன்னும் பின்னும் மாறி மாறிச் செல்லும், இடம் மற்றும் கால ஓட்டத்தின் காட்சிகளாக, உத்தம் சிங்கின் நினைவுகளிலிருந்து, இந்தக் கதை படமாக்கப் பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, கடும் நெஞ்சுரம் கொண்டவர்களையும் கலங்க வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படுகொலை நடந்த இரவில் காயமுற்றவர்களைத் தேடித்தேடி, அவர்களுக்கு மருத்துவ உதவி ஏற்பாடு செய்கிறார் உத்தம் சிங். அவரது அயராத உழைப்பைக் காட்சிகளாக காணும்போது ஏற்படும் உணர்வை, வார்த்தைகளால் வெளிப் படுத்த இயலாது. சிறையில் உத்தம்சிங்  சித்திரவதைக்குள்ளாகும் காட்சிகளும், எதார்த்தமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மனித உறவுகளின் அடிப்படை உணர்வுகளான காதல், நட்பு போன்றவைகளை வெளிப்படுத்தும் காட்சிகள், ஒட்டுமொத்த படத்திலும் சிறு அளவே இருந்தாலும், கவித்துவமிக்கவையாக உள்ளன.

இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் போட்டிக் கான படத்தைத் தேர்ந்தெ டுக்கும் குழுவினர், இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்கவில்லைஅதற்கு, "இந்தப் படம், இன்றைய உலக மயமாக்க காலகட்டத்திலும் பிரிட்டிஷாருக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த படத்தை நிராகரிக் கிறோம்" என்றனர். ஆனால், உண்மையிலேயே இந்தப் படம் பிரிட்டிஷாருக்கு எதிரான வெறுப் புணர்வைத் தூண்டுவதாக இல்லை. மாறாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடூர பண்பை வெளிப்படுத்துவதாக மட்டுமே உள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து, நூறு ஆண்டுகள் கழிந்த விட்டனஇன்றுவரையிலும், பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து அதிகார பூர்வமான மன்னிப்பு, இந்திய மக்களுக்கு சொல்லப்படவில்லை.

சுதந்திரப் போராட்டத்தில் சங் பரிவாருக்கு, எந்தப் பங்கும் இல்லை. அவர்கள் பிரிட்டி ஷாருடன் கள்ளக் கூட்டில் ஈடுபட்டிருந்தனர். சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் இன்றோ, சங்பரிவார் கூட்டம் காந்தி, அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்ற ஆளுமைகளைக் கூட தங்களது அரசியலுக்கு பொருத்திக் கொள்ள முயற்சிக் கிறது. மறுபுறம் சாவர்க்கரைச் சுதந்திரப் போராட்ட வீரராகக் காட்ட முனைகிறது. அதற்கு புத்தகங்களிலும், பொதுவெளியிலும் சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை சிதைத்தும், திரித்தும் கூறுகின்றனர். இந்தப் நேரத்தில், சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியை, மிகச்சரியான வரலாற்றுப் பார்வையுடன் இந்தப்படம் நமக்கு வழங்குவது பொருத்தமான எதிர்வினையாகும்.

உன் பெயர் என்ன? என்று உத்தம் சிங்கிடம் கேட்கும்போது "ராம் முஹம்மத் சிங் ஆஸாத்" என்று தன் கையில் பச்சைக் குத்தி இருப்பதை காண்பிக்கிறார். இதிலுள்ள முதல் மூன்று பெயர்களும், இந்தியத் துணைக்கண்டத்தின் முக்கிய மத அடையாளங்களைக் குறிப்பிடுவதாக உள்ளன. காலனிய மற்றும் வகுப்புவாத அரசியல்வாதிகளால், ஒன்றுக்கொன்று எதிரிகளாக நிறுத்தப்படும், இந்த மூன்று மத அடையாளங்களையும், இறுதியாக உள்ள ஆஸாத் (விடுதலை) என்னும் சொல் இணைப்பதாக உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக இருந்த ஒற்றுமை உணர்வை, வெளிப்படுத்துவதாக இந்த பெயர் உள்ளது. ஆனால் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் இன்றைய காலகட்டத்தில், இந்து மேலாதிக்க, பாசிச, மதவெறி அரசியல் ஆட்சியில் இருக்கிறது. நாடு முழுவதும் மதச் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்முறை வெறி யாட்டம் தொடர்கதையாகி வருகிறது. ஆக, உத்தம் சிங் மற்றும் அவரது தோழர்களின் போராட்டத்தை நாம் தொடர வேண்டியதின் அவசியத்தை இந்தப்படம் நமக்கு நினைவு படுத்துகிறது. 1919 ஏப்ரல் 13 அன்று, பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் நிகழ்த்தப்பட்டது ஜாலியன் வாலாபாக் படுகொலை. அதன் நேரடியான சாட்சி உத்தம் சிங்; கொலையுண்ட தனது மக்கள் மற்றும் தோழர்களின் தாங்கவொண்ணா நினைவுகளைச் சுமப்பவர்; அந்த நினைவுகளில் நிம்மதியையும், தூக்கத்தையும் தொலைத்தவர்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டு மக்கள் விடுதலை பெற வேண்டுமென்ற வேட்கை மிகுந்தவர்; கம்யூனிச லட்சியங்களும், புரட்சி பற்றிய கனவுகளும் கொண்டவர். அவரின் கதைதான், சுஜித் சர்க்கார் இயக்கியுள்ள இந்தி மொழித்திரைப்படம் "சர்தார் உத்தம்".

1931 இல் உத்தம் சிங் (விக்கி கௌஷால்) சிறையிலிருந்து விடுதலையாகும் போது, படம் துவங்குகிறது. அவர், நாட்டு விடுதலைக்காக போராடிய, இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு கழகம் (பிஷிஸிகி) என்ற புரட்சிகர இயக்கத்தின் ஒரு உறுப்பினர். பகத்சிங்கின் நண்பர். பஞ்சாப் போலீஸின் கண்காணிப்பிலிருந்து தப்பி ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக லண்டன் போய் சேருகிறார். அங்கிருந்து, ஐரிஷ் குடியரசு இராணுவம் (மிஸிகி) உள்ளிட்ட, மற்ற பல நாடுகளின் புரட்சிகர இயக்கங்களிடம் நாட்டு விடுதலைக்கு உதவி கேட்கிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலையை நேரடியாக களத்தில் நிகழ்த்தியது ஜெனரல்.ரெஜினாலட் டயர். ஆனால் அவருக்கு ஆணை பிறப்பித்த, அப்போதைய பஞ்சாப் மாநில துணைநிலை ஆளுநராக இருந்தவர் மைக்கேல் 'ட்வயர். லண்டனில் பல நேரங்களில் இந்த படு கொலையை நியாயப்படுத்தி பேசுகிறார். 1940 மார்ச் 13 அன்று மைக்கேல் 'ட்வயர், ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கிறார். அங்கே, உத்தம் சிங் அவரைப் படுகொலை செய்கிறார். கைது செய்யப்பட்டு, சிறைப் படுத்தப் படுகிறார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகிறார். நீதிமன்றத்தில் கொலை குற்றவாளியாக நிறுத்தப்படுகிறார். பாரபட்சமான நீதிமன்றம், அவரைக் கொலைகாரன்  என குற்றம் சுமத்துகிறது. “நான் கொலைகாரனல்ல; என் நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடுபவன்; இது ஒரு எதிர்ப்புப்  போராட்டம்; நீங்கள் எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்; இன்குலாப் சிந்தாபாத்என முழக்கமிடுகிறார். பிறகு, தூக்கு மேடையில் தன் இன்னுயிரை இழக்கிறார்.

நாட்டுப்பற்றை வணிகமயமாக்கி பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலா னவை, பாகிஸ்தானையும் முஸ்லிம்களையும் எதிரிகளாக சித்தரிப்பவை. மதவெறியை, தேசவெறியை ஊட்டி வளர்ப்பவை. இந்தப் படங்களின் கதாநாயகர்கள் மாவீரர்களாக, தன்னொழுக்கம் பேணுபவர்களாக மற்றும் ஆண்மையுள்ளவர்களாக காட்டப்படுகிறார்கள். தேச வெறியை ஊட்டுபவர்களாக உள்ளனர். மறுபுறம் காலனியாட்சி காலகட்ட கதைக்கருவை கொண்ட படங்கள் உள்ளன. இந்தப் படங்கள், ஏகாதிபத்திய அரசுக்கு சம்பந்தமில்லாமல், ஆங்கிலேய அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் கொடூரர்களாக, சித்தரிப்பவை. மாறாக, இந்திய நாட்டு மக்களின் உழைப்பையும், அந்த உழைப்பினால் விளைந்த செல்வத்தையும், உறிஞ்சி எடுத்துச்செல்லும் அட்டைப் பூச்சி போன்ற, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் கொடூர பண்பை, இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. மேலும், எளிய மனிதர்களின் கதாநாயகப் பண்பை வெளிப்படுத்துகிறது

புரட்சியாளர்கள் வன்முறையை நேசிப்ப வர்கள் அல்ல; வாழ்க்கையை நேசிப்பவர்கள்; கொண்டாடுபவர்கள். பகத்சிங்கும் மற்ற தோழர்களும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நாட்டு விடுதலைக்குப் பிறகு என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு, "சார்லி சாப்ளின் படம் பார்ப்பேன்; விலையுயர்ந்த பிரிட்டிஷ் ஒயினை வாங்குவேன்; ஒரு ஆங்கிலேய பெண்ணுடன் நடனமாடுவேன்; இப்படியான வாழ்வை வாழ்வேன்" என்கிறார். அதே காட்சியில் ஒரு புரட்சியாளருக்கும், தீவிரவாதிக்குமான வேறுபாட்டை சிறப்பாக விளக்குகிறார்.

நேர்கோட்டில் கதை சொல்லாமல், முன்னும் பின்னும் மாறி மாறிச் செல்லும், இடம் மற்றும் கால ஓட்டத்தின் காட்சிகளாக, உத்தம் சிங்கின் நினைவுகளிலிருந்து, இந்தக் கதை படமாக்கப் பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, கடும் நெஞ்சுரம் கொண்டவர்களையும் கலங்க வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படுகொலை நடந்த இரவில் காயமுற்றவர்களைத் தேடித்தேடி, அவர்களுக்கு மருத்துவ உதவி ஏற்பாடு செய்கிறார் உத்தம் சிங். அவரது அயராத உழைப்பைக் காட்சிகளாக காணும்போது ஏற்படும் உணர்வை, வார்த்தைகளால் வெளிப் படுத்த இயலாது. சிறையில் உத்தம்சிங்  சித்திரவதைக்குள்ளாகும் காட்சிகளும், எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மனித உறவுகளின் அடிப்படை உணர்வுகளான காதல், நட்பு போன்றவைகளை வெளிப்படுத்தும் காட்சிகள், ஒட்டுமொத்த படத்திலும் சிறு அளவே இருந்தாலும், கவித்துவமிக்கவையாக உள்ளன.

இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் போட்டிக் கான படத்தைத் தேர்ந்தெடுக்கும் குழுவினர், இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்கவில்லைஅதற்கு, "இந்தப் படம், இன்றைய உலக மயமாக்க காலகட்டத்திலும் பிரிட்டிஷாருக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த படத்தை நிராகரிக்கிறோம்" என்றனர். ஆனால், உண்மையிலேயே இந்தப் படம் பிரிட்டிஷாருக்கு எதிரான வெறுப் புணர்வைத் தூண்டுவதாக இல்லை. மாறாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடூர பண்பை வெளிப்படுத்துவதாக மட்டுமே உள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து, நூறு ஆண்டுகள் கழிந்த விட்டனஇன்றுவரையிலும், பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து அதிகார பூர்வமான மன்னிப்பு, இந்திய மக்களுக்கு சொல்லப்படவில்லை.

சுதந்திரப் போராட்டத்தில் சங் பரிவாருக்கு, எந்தப் பங்கும் இல்லை. அவர்கள் பிரிட்டி ஷாருடன் கள்ளக் கூட்டில் ஈடுபட்டிருந்தனர். சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் இன்றோ, சங்பரிவார் கூட்டம் காந்தி, அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்ற ஆளுமைகளைக் கூட தங்களது அரசியலுக்கு பொருத்திக் கொள்ள முயற்சிக் கிறது. மறுபுறம் சாவர்க்கரைச் சுதந்திரப் போராட்ட வீரராகக் காட்ட முனைகிறது. அதற்கு புத்தகங்களிலும், பொதுவெளியிலும் சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை சிதைத்தும், திரித்தும் கூறுகின்றனர். இந்தப் நேரத்தில், சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியை, மிகச்சரியான வரலாற்றுப் பார்வையுடன் இந்தப்படம் நமக்கு வழங்குவது பொருத்தமான எதிர் வினையாகும்.

உன் பெயர் என்ன? என்று உத்தம் சிங்கிடம் கேட்கும்போது "ராம் முஹம்மத் சிங் ஆஸாத்" என்று தன் கையில் பச்சைக் குத்தி இருப்பதை காண்பிக்கிறார். இதிலுள்ள முதல் மூன்று பெயர்களும், இந்தியத் துணைக்கண்டத்தின் முக்கிய மத அடையாளங்களைக் குறிப்பிடுவதாக உள்ளன. காலனிய மற்றும் வகுப்புவாத அரசியல்வாதிகளால், ஒன்றுக்கொன்று எதிரிகளாக நிறுத்தப்படும், இந்த மூன்று மத அடையாளங்களையும், இறுதியாக உள்ள ஆஸாத் (விடுதலை) என்னும் சொல் இணைப்பதாக உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக இருந்த ஒற்றுமை உணர்வை, வெளிப்படுத்துவதாக இந்த பெயர் உள்ளது. ஆனால் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் இன்றைய காலகட்டத்தில், இந்து மேலாதிக்க, பாசிச, மதவெறி அரசியல் ஆட்சியில் இருக்கிறது. நாடு முழுவதும் மதச் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்முறை வெறி யாட்டம் தொடர்கதையாகி வருகிறது. ஆக, உத்தம் சிங் மற்றும் அவரது தோழர்களின் போராட்டத்தை நாம் தொடர வேண்டியதின் அவசியத்தை இந்தப்படம் நமக்கு நினைவு படுத்துகிறது.

செந்தில்