ஏப்ரல் 21, 2022 திண்டுக்கல் மாவட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை திண்டுக்கல் மாநகர கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தோழர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் தோழர் N.K. நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள் :

  • வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் வீட்டு மனையும், அரசு நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் இலவச பட்டா வழங்கிட வேண்டும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நகர்ப்புற பகுதிகளிலும் விரிவுபடுத்தி 100 நாள் பணியை 200 நாளாக உயர்த்தி தினக்கூலி ரூபாய் 500 வழங்கிட வேண்டும்.
  • பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 1000/- நிர்ணயம் செய்திட வேண்டும்.
  • சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
  • பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்