1. இப்போது நாம் நாடாளுமன்ற சனநாயகத் தின் அரசமைப்பு அடித்தளத்தின் மீதும் இந்திய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளின் மீதும் தீவிரமான தாக்குதல் நடத்தப்படும் ஒரு காலப் பகுதியின் வழியே கடந்து கொண்டிருக் கிறோம். இவற்றோடு கூடவே, இந்தியாவின் இயற்கை வளங்கள் கார்ப்பரேட் (கூட்டாண்மை) நிறுவனங்களால் முழுமை யாகக் கொள்ளை யடிக்கப்படு கின்றன. தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கிற புதிய தாராளவாதப்பொருளியல் கொள்கைகளின் வடிவிலும் மூர்க்கத்தனமான இந்துத்துவா வடிவிலும் அல்லது இந்து மேலாதிக்க அடிப்படையில் மறுவரை யறை செய்யப்பட்ட இந்திய தேசிய வாதத்தின் வடிவிலும் முப்பதாண்டுகளுக்கு முன்பு கட்டவிழ்த்து விடப்பட்ட அந்த இரட்டைப் போக்குகள் ஒரு புள்ளியில் குவிந்து நரேந்திர மோடியை 2014ல் ஒன்றிய அரசில் அதிகாரத் துக்கு கொண்டு வந்தன. அன்று முதல் இந்த இரட்டை முனைச் செயல் திட்டத்தை முன்னெ டுத்துச் செல்வதற்காக,அரசு அதிகாரத்தை, திட்ட மிட்ட முறையில் பயன்படுத்திக் கொண்டு வருகிறது ஒன்றிய அரசாங்கம். மோடி 2019ல் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்தப் பரப்புரை கணிசமான அளவு வேகமெடுத்தது. மேலும் இப்போது, 2024 தேர்தலுக்கும் 2025 இல் நடக்கவிருக்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கும் முன்னால், அது அபாயகரமான அளவுக்கு அதிகரிப்பதைக் காண முடியும்.

2. அரசமைப்பின் மீதான தாக்குதல் முழுமையடைந்து விட்டது. அரசமைப்பின் அடிப்படை (ஆதார) உள்நோக்கம் அல்லது கட்டமைப்பு ஆகியவற்றை மீறுகிற போலியான (ஐயுறவுக்குரிய) திருத்தங்கள் வாயிலாகவோ அல்லது எந்தவொரு பாராளுமன்ற அல்லது நீதித்துறை நுண்ணாய்வுக்கும் உட்படாத நிர்வாக ஆணைகள் வாயிலாகவோ இந்தத் தாக்குதல் நடக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு ரையில் குறிப்பிடப்பட்ட (குமுகிய) சோசலிச, மதச்சார்பற்ற மற்றும் சனநாயகத்தின் தலையாய விழுமியங்கள் யாவும் திட்டமிட்ட வகையில் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் அண்டை நாடுகளிலிருந்து குடி பெயர்ந்து வருகிறவர்களை மத அடிப்படையில் பிரித்தறிவதன் வாயிலாக,குடியுரிமையை மதத்துடன் இணைத்துள்ளது. பொருளாதா ரத்தில் பின்தங்கிய பிரிவுக்கான இட ஒதுக்கீட்டுத் திருத்தம், பட்டியலின, பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவை அதிலிருந்து வெளியே ஒதுக்கி விட்டிருக்கிறது. சட்டப் பிரிவு 370ஐச் செயலிழக்க செய்ததன் வாயிலாகவும் ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி இல்லாமல் ஒழித்ததன் வாயிலா கவும் ஜம்மு காஷ்மீர் மக்களின் தன்னேரில் லாத அமைப்புச் சட்ட ரீதியாகப் பெற்ற உரிமைகளில் பெரும் பகுதியைப் பறித்து மாநிலங் களை ஒன்றிய அரசு நேரடியாக ஆளும் பகுதிகளாகக் குறுக்கும் ஒரு தீக்குறியான (கெட்டஅறிகுறி) முன்னுதாரணத்தை உண்டாக்கினர். இந்திய வங்காள தேச எல்லையிலிருந்தும் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலிருந்தும் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவு வரையுள்ள அந்தந்த மாநிலங்களின் உள்நாட்டுப் பகுதிகளின் மேல் எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சிறப்பு அதிகாரத்தை வழங்கியமை, கூட்டாட்சி உரிமைகளில் இன்னொரு பாரிய (major) தலையீடாக உள்ளது.

3. நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித் துறைகளிடையேயும் ஒன்றிய அரசுக்கும் மாநிலங் களுக்கும் இடையேயும் அதிகாரத்தைத் தனித் தனியே பிரித்து வைத்தமை நம் குடியரசின் அரசமைப்பு அடித்தளத்துக்கு மையமான ஒன்றாகும். மோடி ஆட்சியின் கீழ் நிர்வாகம் தொடர்ச்சியாகச் சட்டமன்றங்கள் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்களின் மீது இடையறாது தலையிடுகிறது. பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தாமலும் நீதித்துறையின் நுண்ணாய்வின்றி யும் அரசாங்கம் இடையறாது அவசரச் சட்டங்களைப் போடுகிறது. சட்ட முன் வரைவு களை நிறைவேற்றுகிறது. சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுகிற நாணமில்லாத துணிவும், அரசாங்கங்கள் கவிழ்க்கப்படுகிற, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசாங்கங்களை நிலைகுலையச் செய்வதும் ஆகியவற்றிற்கான நாணமில்லாத துணிவு (Brazenness) அரச மைப்புச் சட்டத்தைக் கீழறுப்பதன் இன்னொரு எச்சரிக்கை மணியாகும். உயர் கல்வித்துறைகளில் மாணவர் சேர்க்கை, வேலைக்கு ஆள் எடுத்தல் மேலாண்மை செய்தல் ஆகியவற்றின் கூட்டாட்சித் தன்மையையும் நிகழ் முறைகளையும் கொஞ்ச கொஞ்சமாகக் குறைப்பதற்கு நடுவண் முகவாண் மையகங்களைப்(Agency) பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. மாநில அரசுகளுக்கே கேடு உண்டாகும் வகையில் நடுவண் பணிகள் மையப் படுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின் வாயிலாக வருவாயை மையப்படுத்தியமையும் கூட மாநிலங்களை எதிர்மறையாகப் பாரதூரமாகப் பாதித்து விட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத் தையே தங்களுக்குப் பிடித்தமான அதிகார வர்க்கத்தினரைக் கொண்டு நிரப்பிய பிறகு, அக்கினி பாத் திட்டம் வாயிலாக இராணுவத்தின் கட்டமைப்பை மாற்றிய பிறகு, அரசாங்கம் இப்போது நீதித்துறைப் பணியமர்த்தல்களையும் கட்டுப்படுத்த விரும்புகிறது என்பதையும்கூட அது (அரசாங்கம்) தெள்ளத் தெளிவாக்கி விட்டது. சரக்கு மற்றும் சேவை வரிகளின் வாயிலாக வருவாயையும் மையப்படுத்தியமையும்கூட மாநிலங்களைப் பார தூரமாகப் (எதிர்மறையாக) பாதித்து விட்டது. பிணை மனுக்களையும் பொது நல வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் எடுத்து விசாரிப்பதை சட்ட அமைச்சர் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே வெளிப்படையாகக் குற்றாய்வு (விமர்சனம்) செய்தார்.

4. அதிகாரம் கட்டுப்பாடில்லாமல் மத்தியில் (நடுவணரசில்) குவிக்கப்படுவது சனநாயகத்தின் நாடாளுமன்ற அமைப்பை நீக்கி விட்டு அமெரிக்கப் பாணியிலான குடியரசுத் தலைவர் அமைப்பு வடிவத்திற்கு மாற்றி விட்டது. இங்கே தலைமை அமைச்சரின் (பிரதமர்) அலுவலகம் அதிகாரத்தின் தலையாய மையமாகத் தோன்றி எழுந்து வந்துவிட்டது. தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகிய மூவர் கும்பல் மோடி அரசாங்கத்தின் மிகப் மிகப் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் மூல உத்தி மையமாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது. பணமதிப் பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து பொது முடக்கம் மற்றும் வேளாண் சட்டங்கள் வரையில் தலைமை அமைச்சர், நிறுவனங்களைக் (நாடாளு மன்றம்) கலந்தாலோசிக்காமலேயே, முடிவுகளை எடுத்து அறிவித்த பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. ஜம்மு காஷ்மீர் நிலைமையில் அந்த மாநிலத்துக்கு (இந்திய) அரசமைப்பு வழங்கி யுள்ள அதிகாரங்களை எல்லாம் பறித்து விட்டு, அதை ஒன்றிய அரசின் ஆட்சியிலுள்ள மூன்று ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்து, அதன் மாநில உரிமையையும் கூடப் பறித்து, இதற்கு முன்னால் எடுத்துக்காட்டில்லாத முடிவைத் திடீரென அறிவித்து அமித்ஷா எதிர்பாராத அதிர்ச்சியூட்டினார். அக்கினிபாத்தைப் பொறுத்த வரையில், வேலை மற்றும் சமூகப் பாதுகாப் புள்ள நிலையானபடை வீரர்களின் இடத்தில் வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பற்ற தற்கா லிகப் படை வீரர்களை அமர்த்துகிற கருத்தைப் (சிந்தனையை) பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் எதிர்த்ததை அறிவோம். ஆனால், அவர் ஒரு நேர்ச்சையில் (விபத்தில்) இறந்த பிறகு, அரசு அக்கினிபாத் திட்டத்தைத் திடீரென அறிவிக்க, பொதுமுடக்கக் காலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. மோடியின் சொந்தச் சொற்களைப் பயன்படுத்தி னால் இந்த நடவடிக்கைகள் எல்லாமே நெருக் கடியை நல்வாய்ப்பாகத் திருப்புகிற அரசாங்க மூல உத்தியின் பகுதியே ஆகும்.

5. அரசமைப்பின் மீது பாஜக கொண்ட வெறுப்பு, அடிக்கடி, அரசமைப்பைக் கொண் டாடுவதாகத் தன்னை மறைத்து வெளிப் படுகிறது. 2015 முதல் அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாளின் ஆண்டு விழாவை, மேற்படி அரசாங்கம் அரசமைப்பு நாளாகக் கொண்டாடத் தொடங்கியது. மேலும் நம் அரசமைப்பின் விழுமியங்கள் மற்றும் பார்வை களுக்கு முற்றிலும் முரணாக உள்ளதன் அரசமைப்புத் தொலைநோக்குப் பார்வையைப் பரப்புவதற்கான நல்வாய்ப்பாக இதைப் பயன்படுத்துகிறது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை "ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் (சுதந்தரத்தின் அமுதப் பெருவிழா)" என்று கொண்டாடிய பிறகு, 2047 வரையிலுள்ள அடுத்த 25 ஆண்டுகளை அம்ரித்கால் (அமுத காலம்) என்று அரசாங்கம் பெயர் சூட்டியுள்ளது. மேலும் அதை நரேந்திரமோடி கர்த்தவ்யகால் (கடமையாற்றும் காலம்) என்று வரையறுத் துள்ளார். அந்தக் காலத்தில் குடிமக்களின் கடமைகள் அவர்களுக்கு அரசமைப்பு வழங்கி யுள்ள உரிமைகளைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்கிறார். 2022 அரசமைப்பு நாள் இந்தியாவை மக்கள் சனநாயகத்தின் (Democracy) தாயாக விவரிக்கும் கருப்பொருளைக் கொண்ட தாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் சுற்றுக்கு விடப்பட்ட கருத்துப்படிவக் (concept) குறிப்பு, இந்திய சனநாயகத்தை, பழமை வாய்ந்த இந்து நாகரீ கத்தின் சின்னமாக சித்தரித்தது; அதன் மூலம், ஒவ்வொரு சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளும் சமூக அடிமைத் தனமாக அடையாளம் கண்ட சாதி அமைப்பு முறையை, அத்தகைய இந்திய யதார்த்தத்தை வண்ணம் பூசி முற்றிலுமாக மறைக்க முயல்கிறது; மதப் பழமைவாதத்தின் போதையூட்டும் தாக்கத்தையும், இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லான குறுகிய மனப்பான்மையையும் அதே போல மறைத்திட முயல்கிறது. அதே சமயத்தில், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட இந்திய சமுதாயத்தின் பன்முகப்பட்ட தன்மையை இந்து மேலாதிக்க சொற்றொடர்களின் மூலம் சித்தரிக்க வெட்கம் கெட்ட முறையில் முயற்சிக்கிறது.

6. 1990களில் பாஜக முதலில் தேசிய அளவிலான கூட்டணியை அமைத்தபோது அதன் மிக மிகக் கூடுதலான, சச்சரவை உண்டாக்கும் மூன்று விடயங்களை அதன் நிகழ்ச்சி நிரலிலிருந்து அகற்றி வைக்க அது ஒப்புக் கொண்டது. அவையாவன இராமர் கோவில், சட்டப் பிரிவு 370, மற்றும் ஒரே குடிமைச் சட்டம். ஆனால் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நிரலைச் சுறு சுறுப்பாகச் செயல்படுத்துவதோடு மட்டுமின்றி, அதைத் திட்டமிட்ட முறையில் விரிவாக்கிக் கொண்டே போகிறது. பாபர் மசூதி இடிப்பை ஒரு வெறுக்கத்தக்க அரசமைப்புச் சட்ட மீறல் என்று சுட்டிக் காட்டிய பிறகும் கூட, உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்கு உள்ளான அந்த இடத்தை இடித்தவர்களுக்கே கைமாற்றி விட்டது. கோயில் 2024 தேர்தலுக்கு முன்னரே திறக்கப் படவுள்ளது. 1991இல் இயற்றப்பட்ட ஒரு சட்டம் எந்தவொரு மத வழிபாட்டு இடத்தின் பண்பைத் தீர்மானிக்கக் கடைசி நாளாக 1947 ஆகஸ்ட் 15ஐ வரையறுத்தது. பாஜக இந்தச் சட்டத்தையும் கூட நீக்க விரும்புகிறது. (அயோத்தியா இந்தச் சட்டத்திலிருந்து விலக்குப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது) இந்த 1991 சட்டத்தை நீக்கி விட்டால் பல மசூதிகளையும் பல இஸ்லாமிய நினைவுச் சின்னங்களையும் கோயில்களாக மாற்றும் சங்கப் பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரலைச் சட்டப்படியே நிறைவேற்ற முடியும். பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் முஸ்லீம்களை இலக்காக வைத்துத் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில் சங்கப் பரிவாரங்களின் குண்டர்கள் இந்த நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் பெயரால் முஸ்லிம்களுக்குத் தொல்லை அளிக்கிறார்கள். முஸ்லிம் மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களில் முகத்திரை அணிவதற்குத் தடை, மதமாற்றம் மற்றும் மதங்களுக்கிடையிலான திருமணங்கள், கால் நடை வணிகம், இறைச்சி விற்பனையும் மாட்டுக்கறி உண்பதும் அல்லது பொது இடத்தில் வழிபாடு செய்வதும் தடை செய்யப்படுவது போன்ற ஏராளமான எடுத்துக் காட்டுகளை நாம் கண்டிருக்கிறோம். மேலும் கும்பலாகச் சேர்ந்து படுகொலை செய்வது, வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவது, கூட்டங் கூட்டமாகத் தளைப் (கைது) படுத்துவது, சிறையிலடைப்பது, போலி மோதல் கொலைகள் உள்ளிட்ட அரசும் அதன் சங்கி மூர்க்க அடியாட்களும் குறி வைத்துத் தாக்கும் வன்முறைகளுக்கு, இந்தச் சட்ட நடவடிக்கைகளும் தடைகளும் சட்ட வடிவிலான அங்கீகாரம் (அறிந்தேற்பை) அளிக்கின்றன. எனினும் இத்தகைய வன்முறை, முஸ்லீம் சமுதாயத்தின் மீது ஏவப்படுவதோடு நின்றுவிட வில்லை. மற்ற சிறுபான்மைச் சமுதாயங்கள் மீதான வன்முறையும், தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையும் கருதத்தக்க அளவில் வளர்ந்துள்ளன.

7. சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான திடீர்த் தாக்குதலுடன் கூடவே, கருத்து மாறுபாடு உள்ளவர்களுக்குத் திட்ட மிட்டுத் தொல்லையும் தண்டனை கொடுத்தலும் நடக்கிறது. இதன் கூடவே மக்கள் இயக்கங்களின் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்களும் நாடாளுமன்றக் களத்தில் எதிர்ப்புக் காட்டுவதைச் சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல்கள் என சொல்வதற்கான முயற்சிகளும் வளர்ந்து கொண்டே போவதையும் காண்கிறோம். இந்த ஆட்சி வன்குடியேற்றக் (காலனியாதிக்க) காலத்தியப் பாணியில், குடிமக்களைச் சதித் திட்ட வழக்குகளில் குற்றம் சாட்டுவது, விசாரணையும் (ஊபாவில்) பிணையும் இல்லாமல் நீண்ட காலத்திற்குச் சிறையிலடைப்பது போன்ற வழிகளையும் பயன்படுத்துகிறது. பீமாகொரேகான் வழக்குகள், டெல்லி கலவர வழக்குகள் போன்றவை ஒரே அச்சில் வார்த்ததைப் போன்ற நடைமுறையை வெளிப்படுத்துகின்றன. ஐயத்திற் கிடமான வழிகளில் பொய்யான மின்னியல் (எலக்ட்ரானிக்) சான்றுகளைக் கணினிகளில் புகுத்துவது, தேசத்துரோகம் மற்றும் பயங்கர வாதக் குற்றச்சாட்டுகளைப் போலியாகக் கூறுவது, ஊபா, என்.எஸ்.ஏ. தேசத்துரோகச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களைப் போடுவது போன்றவையே இந்த அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறையாகும். நாம் அருட் தந்தை ஸ்டேன் சாமியைப் பார்த்துள்ளோம். அவர் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். ஆயிரக்கணக்கான பழங்குடி ளைஞர் களுக்காக அவர் வேலை செய்தார். அதனால் அவர் குறிவைத்துத் தாக்கப்பட்டார். அவர் நீதிக்காகவும் சனநாயகத்துக்காகவும் போராடித் தியாகியாகி விட்டார். கருத்து வேறுபாடுகள் இந்தியாவுக்குள்ளே அடக்கி ஒடுக்கப்படுவதோடு, அது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. அவர்கள், மோடி அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும் இந்தியாவின் சனநாயகத்தைப் பாதுகாக்க நினைத்தாலும் அவர்களது வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்கள் (Overseas citizens of India) என்ற உரிமை பறிக்கப்படுகிறது. குடியுரிமைச் சட்டத்தில் பாகுபாடு செய்து பிரிக்கும் திருத்தங் களை எதிர்த்த ஷாகின்பாக் பெருந்திரள் எதிர்ப்புப் போராட்டங்களை அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் (கூட்டாண்மை நிறுவனங்கள்) மேலாண்மையை நிறுவும் வேளாண் சட்டங்களுக் கெதிரான ஒன்றுபட்ட விவசாயிகள் (உழவர்) போராட்டங்களை, தேச விரோத சதிவேலைகள் எனச் சித்தரித்தனர். அந்த இயக்கத்துக்கு எதிரான பெருந்திரள் வன்முறையைத் தூண்டிவிட்டதன் வாயிலாக, அதைத் தடம் மாறச் செய்ய முயற்சித்தனர். அந்தோலன் ஜீவி, நகர்ப்புற நக்ஸலைட்டு மற்றும் கலம்தாரி நக்ஸல் போன்ற பெயர்களால் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் களுக்குத் தலைமை அமைச்சர் மோடியே கெட்ட பெயர் உண்டாக்கும் பரப்புரையைச் செய்தார்.

8. எந்தவிதமான நிறுவனரீதியான கட்டுப் பாடும் இல்லாததாலும் எக்கச்சக்கமான பண வலிமை கொண்டிருப்பதாலும் பாஜக அல்லாத கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெரிய அளவில் விலைக்கு வாங்குவதை பாஜக ஒரு கலையாகச் செய்கிறது. இவ்வாறாக, பாஜக அல்லாத அரசாங்கங்கள், கலைக்கப்படுவதற்கான (குறிவைத்து எளிதாகக் கவிழ்க்கின்ற) எளிய இலக்குகளாக்குகின்றன. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்டிரா ஆகியவை, சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, அரசாங்கங்களைக் கவிழ்த்து, அதிகாரத்துக்கு வந்தமைக்கு மூன்று அப்பட்டமான எடுத்துக் காட்டுகளாகும். ஆளுநர் அலுவலகங்களும், மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ), அமுலாக்கத்துறை, என்.ஐ.ஏ (தேசியப் புலனாய்வு முகமை) ஆகிய மத்திய முகவாண் மையகங்கள் (Central Agencies) பாஜக அல்லாத அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து, நிலைகுலையச் செய்வதற்கு வெட்கங்கெட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. காங்கிரசற்ற பாரதத்துக்காக 2014 இல் நடத்திய பரப்புரையில் தொடங்கி, இப்போது எதிர்க்கட்சி இல்லாத சனநாயகம் என்ற கருப் பொருளை நோக்கி பாஜக நகர்ந்து விட்டது. அது அடுத்த ஐந்து ஆண்டுக ளுக்கு நாடு முழுவதையுமே ஆண்டு ஆதிக்கம் செலுத்துவதற்குத் தோதாக, ஒரு கட்சி ஆட்சிக் காக, வெளிப்படையாக வக்காலத்து வாங்குகிறது.

9. குடிமக்களைத் தீவிரக் கண்காணிப்புக்கும் எங்கும் பரவிய அச்சம் மற்றும் கட்டுப்பாட்டின் ஆளுகைக்கும் உள்ளாக்கும் அதே வேளையில், மோடியின் ஆட்சிமுறை, கிட்டத்தட்ட எல்லாப் பொதுச் சொத்துக்கள் மற்றும் சேவைகளின் பெருளாதாரத்தையும் கட்டுப்பாட்டையும் தெரிவு செய்யப்பட்ட சில கார்ப்பரேட் (கூட்டாண்மை) நிறுவனங்களுக்குத் திட்டமிட்ட முறையில் கையளித்து (கைமாற்றிக்) கொண்டிருக்கிறது. தனியார்மயமாக்கல் என்பது பொதுச் சொத்து களை அப்படியே விற்றுவிடுவது அல்லது கிட்டத்தட்ட நிரந்தரமாகக் குத்தகைக்கு விடுவது என்ற வடிவத்தை எடுத்திருக்கிறது. இது முடங்கிக் கிடக்கும் பொதுச் சொத்துகளைப் பணமாக மாற்றுவது என்று கூறப்படுகிறது. பணமதிப்பிழப்பைப் போலவே இந்தப் பணமாக்கும் வழியும் கூட பேரிடர் தரும் கருத்தாகும். இது பொது மக்களின் பணத்தாலும், பொது மக்களின் உழைப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட பொதுச் சொத்துக்களைத் தனியார் சொத்தாக மாற்றுகிறது. தனியார்மயமாக்கத்திற்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள், செயல் திறனும் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் மெய்ம்மை (எதார்த்தம்), அத்தகைய சுய விருப்பத்தைப் பேசுவதற்கும் தவறாக வழிநடத்தும் பரப்புரைக்கும் எதிராக திருப்பித் தாக்குகிறது. அதிகரித்துக் கொண்டே யிருக்கும் தனியார்மயமாக்கம், பெருந்திரள் வேலை இழப்பையும் ஏழ்மையையும் அதிகரித்து வரும் சமமின்மையை (ஏற்றத்தாழ்வை) மேலும் அதிகரிக்கவும் மட்டுமே செய்கிறது. தனியார் மயமாக்கம் காரணமாக, உயர் கல்விக்கும், தரமான மருத்துவச் சேவைக்கும் (உடல் கவனிப்பு) கொடுக்க வேண்டிய விலை என்பது, ஏழைகளின், ஏன் நடுத்தர மக்களின் கைக்கும் கூட எட்டாக்கனியாகவே மாறிக் கொண்டிருக் கிறது எந்த வகையான மேல் நோக்கிய சமூக நகர்வையும் நிறுத்துகிறது . மேலும் விஞ்சிய வலிமையுள்ள, பார்ப்பன சமூகமேட்டுக் குடியின் தனியுரிமையையும் அதிகாரத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது.

10. மோடியின் ஆட்சிமுறையில் ஊக்குவிக் கப்படுகிற சலுகைசார் முதலாளியம் (Crony Capitalism) அரசியல் வகுப்புக்கும் வணிக வகுப்புக்கும் இடையிலான கள்ளக்கூட்டு முதலாளியம்) செல்வந்தருக்கும் ஏழைக்கும் டையிலான பிளவை மிகவும் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பில்லியன்(100 கோடி) டாலர் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 2013இல் 55ஆக இருந்து 2022இல் 166 ஆகத் தாவி மேலேறிவிட்டது. 2020 முதல் 2022 வரை இரண்டாண்டுகளில், கோவிட் கொள்ளை நோய், பில்லியன் கோடீஸ்வரர்கள் சுமார் 64 பேர் வரைக்கும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. பொருளாதார மறு பகிர்வையும் நியாயத்தையும் கொண்டு வருவதற்கு வரி ஏற்பாட்டைப் பயன்படுத்துவதற்கு மாறாக இந்த அரசாங்கம், ஏழைகளைக் கொள்ளையடித்துச் செல்வர்களுக்கு வெகுமதி அளிக்கும் ஒரு கருவியாகப் பயனுறு முறையில் பயன்படுகிறது. இந்தியாவில் செல்வ வரியோ வாரிசுரிமைச் சொத்துக்கான வரியோ கிடையாது. வரி விலக்கு மற்றும் வரி ஏய்ப்பும் உயர்ந்து கொண்டே போகின்றன. கார்ப்பரேட் வரி விகிதம் தொடர்ச்சியாகக் குறைந்து கொண்டே போகிறது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்ந்து ஏழைகளையும் நடுத்தர வகுப்புகளையும் அவர்களது விகிதத்துக்கு அப்பால் தொடர்ந்து பாதிக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியில் மூன்றில் இரண்டு பங்கு வரி வசூல் அடித்தட்டு இந்திய மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மூன்றில் ஒரு பங்கு, அடுத்த நாற்பது சதவீதம் பகுதியிலிருந்து கிடைக்கிறது. மூன்று முதல் நான்கு விழுக்காடு மட்டுமே உச்சத்திலுள்ள பத்து விழுக்காடு இந்திய சமூகத்திடம் இருந்து கிடைக்கிறது

11, பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு தழுவிய அளவில் மோடி அரசாங்கத்தின், விதிகளுக்குக் கட்டுப்படாத, இரக்கமற்ற, பிளவுண்டாக்கும் இயல்பை நமக்கு அறிமுகப் படுத்தியது என்றால், கோவிட் 19 கொள்ளை நோய்ப் பரவல் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மனித உயிர்களைக் காவு வாங்கி, ஒரு நீண்ட கால அனுபவத்தை நமக்கு கொடுத்தது. கொள்ளை நோயின் தொடக்க நாட்களில் வைரஸை எதிர்கொள்வதைப் பற்றி எல்லா வகையான இருண்மைவாத, பகுத்தறி வற்ற கருத்துகளையும் பரப்பியது. எந்தவொரு திட்டமிடலும் தயாரிப்பும் செய்யாமல், திடீரென பொது முடக்கம் அறிவித்தமை நாட்டைப் பேரளவிலான மனிதாபிமான நெருக்கடியில் தள்ளிவிட்டது. குடிபெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் இத்தாக்குதலின் வேகத்தைத் தாங்க வேண்டியதாயிற்று. அவரகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டரை நடந்து கடக்கவும், சாலைகளிலும் தடுப்பு முகாம் களிலும் கடினமானதும் இழிவு படுத்துவதுமான நிலைமைகளை எதிர் கொண்டு தாங்கிப் பிழைக்கவும் வேண்டியதாயிற்று. கோடிக் கணக்கான குடும்பங்கள் உணவையும் மற்ற இன்றியாமையாத நுகர்பொருட்களையும் பெறப் போராட வேண்டியதாயிற்று. தெளிவாகவே, வன்முறையால் கட்டாயப்படுத்துவதும் தொந்தரவுக்கு உள்ளாக்குவதுமான ஒரு நடவடிக் கையாகிய முழு அடைப்பு, வைரஸ் பரவலைக் காலந்தாழ்த்தவும் (தாமதப்படுத்தவும்) உடல்நலப் (சுகாதாரம்) பாதுகாப்பு ஏற்பாடு களை மேம்படுத்தவும் தேவையான காலத்தைப் பெறுவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகப் பல நாடுகளால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தியாவில் கடுமையான அரசியல் ஒடுக்கு முறையைச் செயல்படுத்தவும் பேரளவிலான மக்களைக் கீழ்ப்படிய வைக்கவுமான ஒரு தீர்மானகரமான முடிவாகத் திணிக்கப்பட்டது. அதே வேளையில், உடல்நல ஏற்பாடு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முன்னேற்பாடுகளின்றியும் நெருக்கடியின் வெங்கொடுமையை எதிர்த்து நிற்கத் தேவையான மருந்துகளும் கருவிகளும் மருத்துவர்களும் ஊழியர்களும் போதாமலும் இருந்தது. கோவிட் இரண்டாவது அலை பரவலின் போது உயிர்வளி (ஆக்சிஜன்) போதிய அளவிலும் தேவைப்படும் காலத்திலும் இல்லாததால் உண்டான, பெருமளவிலான சாவு களையும் பேரழிவுகளையும் முறையாகக் கையாளுவதற்கு மாறாக, மெய்யான நிலை மையை (எதார்த்தம்) மறைக்கவும் அடக்கி வைக்கவும் தோற்றுப்போன ஆட்சியை மக்களின் பாதுகாவலனாக முன்னிறுத்தவும் முன்னெப் போதுமில்லாத வகையில் பரப்புரைத் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது

12. கண்மூடித்தனமான தனியார்மயமாக்கலும் முற்றிலும் இரக்கமற்ற, விதிகளுக்குக் கட்டுப்படாத, பொறுப்பற்ற அரசாட்சி, நாட்டை ஒரு கீழ் நோக்கிய சமூக, பொருளியல் சூழல் கேட்டுக்குக் கடுமையாகத் தள்ளிக் கொண்டி ருக்கிறது. அது கிட்டத்தட்ட உலக அளவிலான எல்லா ஒப்பீட்டுக் குறியீடுகளிலும் வீழ்ச்சி யடைந்து கொண்டிருக்கும் நிலையில் எதிரொளிக் கிறது (பிரதிபலிக்கிறது). இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினரைப் பாதிக்கிற, பின்தங்கிய நிலை, இழப்பு ஆகிய இக்கால நிலைமைக்கு கடந்த எழுபது ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லாமையே காரணம் என்று இந்த ஆட்சி நாள்தோறும் குறை கூறிக் கொண்டிருக்கும் அதே வேளையில், தான் அதிகாரத்துக்கு வந்த பிறகு அது வாக்குறுதியளித்த இலக்குகளில் எதையும் நிறைவேற்றாமல், உண்டான வெறுக்கத்தக்க (இழிந்த) தோல்வியைப்பற்றிப் பேசாமல் அமைதி காக்கிறது. மின்சாரம், குளிப்பறை, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளுடன் உறுதி அளிக்கப்பட்ட அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டான 2022க்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது எப்போதும் போல எட்டாத தொலைவில் உள்ளது. மோடியின் ஆட்சி இப்போது இலக்குக் குறியை 2047ஆம் ஆண்டுக்குத் தள்ளி வைத்துள்ளது. அதேவேளையில் உலகத்தின் பார்வையில் இந்தியாவின் சிறப்பு உயர்ந்து விட்டதாகக் கற்பனையாக இந்தியர்களிடம் பரப்பியக்கம் நடத்துகிறது. இந்தப் பரப்பியக்கம் புதுதில்லியில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடக்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டிப் படிப்படியாக மேலெழுந்து உச்ச நிலையை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. முரண்நகையாக உலக அளவில் விசுவ (உலக) குரு என்ற சிறப்பைப் பெற்றுள்ள ஒரு புதிய இந்தியாவை நோக்கி இட்டுச் செல்வதாக அரசாங்கம் உரிமை கோரிய போதும் செல்வ வளமிக்கவர்களும் முன்னுரி மையைப் பெற்றவர்களுமாக உள்ள இந்தியர்கள் வட அமெரிக்காவுக்கும் பிற முன்னேறிய மேற்குலக முதலாளிய நாடுகளுக்கும் வெளி யேறிக் குடிபெயர்வது அதிகரித்துக் கொண்டே யுள்ளது. அதைப் போலவே, மேலை நாடுகளி லும் மத்திய கிழக்கு நாடுகளிலும் குடியேறிய தொழிலாளர்களாக வயிற்றுப்பாட்டைத் தீர்க்க வேண்டி ஒடுக்குமுறை மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளையும் பாகுபடுத்தும் குடிப்பெயர்ச்சி சட்டங்களையும் துணிந்து சமாளித்துச் செல்லும் உழைக்கும் வர்க்க மற்றும் நடுத்தர வர்க்கஇந்தியர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது. 2022இன் முதல் பத்து மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்கள் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டு விட்டனர். மோடி ஒன்றிய அரசு ஆட்சிக் கட்டிலில் ஏறியதிலிருந்து இந்தியக் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 12.5 இலட்சத்தைத் தாண்டி விட்டது.

13. கடைக்கோடி (தீவிர) சமூக சமத்துவ மின்மையை அடையாளமாகக் கொண்ட ஒரு சமூகத்தில் கல்வியும் வேலை வாய்ப்புமே மேல் நோக்கிய சமூக நகர்வுக்கான ஒரே வழியாக இருக்கின்றன. அந்தக் கல்வியும் வேலை வாய்ப்பும் மறுபடியும் பணம் படைத்தவர் களுக்கே உரியதாகிக் கொண்டுள்ளது. கடந்து செல்கிற ஒவ்வொரு நாளும் அரசாட்சியின் மேல் மேட்டுக் குடியினர் கொடுக்கிற அழுத்தம் அப்பட்டமாகக் கூடிக் கொண்டேயுள்ளது. ஏழை எளியவர்களின் தேவைகளையும் உரிமை களையும் இலவசப் பண்பாடு (கலாச்சாரம்) என்று நையாண்டி செய்கிற தலைமை அமைச்சர் 'வந்தே பாரத்' தொடர்வண்டிகளையும் 'கங்கா விலாஸ்' உயர் சொகுசுக் கப்பலையும் வளர்ச்சியின் பொழிப்பாக (அடையாளச் சின்னம்) உயர்த்திப் பிடிக்கிறார். ஏழை எளிய மக்களின் தேவைகளை முற்றாகப் புறக்கணிப்பதோடு வளர்ந்து கொண்டிருக்கும் நிச்சயமின்மை (ஐயப்பாடு), இருப்பதை இழக்கச் செய்தல் மற்றும் ஏழை எளியோரை இழிவுபடுத்துதல் ஆகியவற்றுடன் பிணைந்த நாணமில்லாத துணிவுடன் கூடிய, பணம் படைத்தவர்களுக்கு ஆதரவான கொள்கை களையும் அரசாட்சியையும் திணிப்பது எல்லாம் சேர்ந்து சமூகத்தில் அச்சம் விளைவிக்கிற அளவுக்கு ஏமாற்றத்தையும் வெற்றிடத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளது. சங்கப் பரிவாரம் இந்த ஏமாற்றத்திலிருந்து ஆதாயம் பெறுவதற்கு அதைத் தீர்க்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு வெறுப்பு, பொய்கள்மற்றும் வன்முறை ஆகிய வற்றைப் பரப்பும் இயக்கத்தை நடத்துகிறது. இளைஞர்களிடையேயும் பெண்களிடையேயும் குறிப்பாகச் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, எல்லாம் இழந்த பிரிவுகளுக்குள்ளே இருக்கிறவர்க ளிடையே சங்கப் படைப் பிரிவினர் ஊடுருவுவது வளர்ந்து கொண்டே உள்ளது. இது கவலை அளிக்கிறது. வாய்ப்பு உள்ள வழிகளிலெல்லாம் தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

14. நெருக்கடியின் கடுமை, அரசமைப்பின் மேல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற திடீர்த் தாக்குதலின் வெட்கங்கெட்ட துணிவு, மதச் சார்பற்ற கோட்பாடுகள், கூட்டாட்சிச் சட்டகம் மற்றும் கருத்து மாறுபாட்டுரிமை ஆகியவை பறிக்கப்படுதல் போன்றவை கவலை அளிக்கும் வகையில் அதிகரிக்கின்றன. இவையும் கூட திறன்மிகு எதிர்ப்புகளும் மக்கள் இயக்கங்களும் எழக் காரணமாகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான பெருந்திரள் போராட் டங்கள், குறிப்பாக முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு முஸ்லிம் பெண்கள் இதில் பங்கேற்றது தில்லி நகரின் எல்லைகளில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உழவர் இயக்கம் ஆகிய இரண்டும் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக சனநாயகத் துக்கான போர்க்களத்துக்கு ஆற்றல் கொடுத்துத் தூண்டிவிட்டுள்ள இரண்டு உச்சப் புள்ளிகளாகும். அரசாங்கம் இந்த இயக்கங்களை அடக்குவதற்கு வன்குடியேற்ற (காலனி) ஆட்சியர்கள் பயன்படுத்திய மூர்க்கமான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். மேலும் ஐயப்பாட் டுக்குரிய உளவு மென் பொருள் தொழில் நுட்பத்தை இஸ்ரேலிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துகிறது. ஆனால் தொல்லைக்கு உள்ளான செயல்வீரர்கள் இந்த ஒடுக்குமுறையைத் துணிச்சலோடும் தீர்மானத்தோடும் எதிர் கொள்ளுவது, மனஉறுதியை அழியாது காப்பாற்றி இந்தக் கொடுந்தாக்குதலுக்கு எதிரான தடுக்கும் ஆற்றலைத் தீவிரப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தி உள்ளது.

15. வளர்ந்து கொண்டிருக்கும் மக்களின் மன நிறைவின்மையும் மக்கள் இயக்கங்கள் கொடுக் கும் அதிக அழுத்தமும் அரசியல் மற்றும் வாக்காளர் களங்களில் உணரப்படலாகிறது. ஆளும் தேசிய சனநாயகக் கூட்டணிக்குள்ளே கருத்து மாறுபாடுகளின் குறிகள் தென்படுகின்றன. பாஜகவின் மிக மிகப் பழைய கூட்டாளிகளான அகாலிதளம், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன. அகாலிதளம் உழவர் இயக்கப் பின்னணியில் விலகி விட்டது. சிவசேனா, காங்கிரஸ் கட்சியுடனும் தேசியவாத காங்கிரஸ் கட்சி யோடும் சேர்ந்து பாஜக அல்லாத கூட்டணி ஆட்சியை அமைத்து இரண்டரை ஆண்டுகாலம் அரசாங்கம் அமைத்து ஆட்சி நடத்தியது. அதற்காக பாஜக சிவசேனையில் பிளவை உண்டாக்கி மாநில ஆட்சியைப் பறித்தது. அதே வேளையில் நிதிஷ்குமார் கட்சி மீண்டும் ஆகஸ்ட் 2022 இல் தேசிய சனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவை விரட்ட, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி களுடன் சேர்ந்தது. ஒரு வழியில், ஐந்தாண்டு களுக்கு முன்னர் பீகாரில் நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனும் காங்கிரஸ் கட்சியுடனும் குறுகிய காலமே வைத்திருந்த கூட்டணியிலிருந்து தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட அதே கதை மறுபடியும் தலைகீழாக நடக்கிறது.

16.அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிரான திறன்மிக்க தீர்ப்புகள் வந்ததை 2019இல் ஜார்கண்டிலும் 2021 மேற்கு வங்கத்திலும் மிக மிக அண்மையில் திசம்பர் 2022இல் இமாச்சலப் பிரதேசத்திலும் நாம் கண்டோம். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பஞ்சாபிலும் பாஜகவுக்கு ஒரு போதும் போதிய வாக்காளர்கள் இருந்ததில்லை. அங்கே பாஜக மிகக் குறைவான வாக்குகளையே பெற்றது. ஆனால் மேற்கு வங்காளத்தில் தலையாய எதிர்க் கட்சி ஆகிற அளவுக்கு அக்கட்சி பிரம்மாண்ட மாக வளர்ந்து விட்டது. உண்மையில் இகக(மா)வும் காங்கிரஸ் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத நிலையில், சட்டமன்ற எல்லைக்குள்ளே இடதுசாரிகள் ஆதரவு பெற்ற ஒரேயொரு ஐஎஸ்எப் சட்டமன்ற உறுப்பினரைத் தவிர்த்து, ஒரே எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. பஞ்சாபில் உழவர் இயக்கத்தால் உருவாக்கப் பட்ட மாற்றத்துக்கான மன நிலையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி ஆம்ஆத்மி கட்சி தேர்தலில் பெரும் பகுதி இடங்களை வென்றது. பஞ்சாபில் ஆம்ஆத்மி அடைந்த வெற்றியைத் தொடர்ந்து அது குஜராத்தில் பெற்ற கவர்ச்சிகரமான வாக்குகள் காரணமாக அங்கே நல்ல முறையில் வாக்குகளை வென்றதும் சில இடங்களைக் கைப்பற்றியதும் ப்போது அது ஒரு தேசியக் கட்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக போட்ட பல கணக்குகளையும் மீறி தில்லி மாநகராட்சி யிலிருந்த அதிகாரத்தையும் அக்கட்சி இழந்து விட்டது.

17. பல மாநிலங்களில் தோல்வி அடைந்த போதும் இன்றைக்கு பாஜக அனைத்திந்திய அளவில் ஒட்டு மொத்தமாக மேலாதிக்கம் செய்யக் கூடிய ஓர் நிலையை அடைந்து விட்டது. தேசியமட்டத்தில் தலையாய எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி எண்ணிக்கையிலும் வென்ற இடங்களின் அடிப்படையிலும் எப்போதுமில்லாத அளவுக்குத் தாழ்ந்து விட்டது. ஒரு சில மாநிலக் கட்சிகள் பாஜகவிலிருந்து விலகி நின்றாலும்கூட அவற்றில் ஒரு சிலவே நேரடியாக எதிர்க்கட்சியின் பங்கை ஆற்றுகின்றன. ஒடிசாவில் பிஜேடி, ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர்சிபி ஆகியவை எல்லா முதன்மை யான சிக்கல்களிலும் பாஜகவோடு ஒரே அணியில் நிற்க விரும்பும் மாநிலக் கட்சிகளுக் கான வகைமாதிரியான எடுத்துக்காட்டுகளாகும். காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியால் முதன்மையாக வளர்ந்து வந்த ஆம்ஆத்மி கட்சி இப்போது பாஜகவுடன் போட்டி போட வேண்டிய ஒரு நிலையில் உள்ளது. ஆனால் அது பாஜகவின் அந்த தளத்தையே எடுத்துக் கொண்டு மென்மை யான இந்துத்துவப் பண்புள்ள பாஜகவின் எதிரியாக எழுச்சி பெற முயன்று கொண்டிருக் கிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசு அரசாங்கமும் தெலுங்கானாவில் தெலுங்கான ராஷ்ட்ர சமிதியாக இருந்து இப்போது பாரத ராஷ்ட்ர சமிதியாகி விட்ட கட்சி அரசாங்கமும் மோடியின் அரசாட்சிக்கு எதிராக இருந்தபோதும், ஊழல் மற்றும் தவறான ஆட்சிச் சேற்றில் சிக்கியுள்ளன. அடையாள அரசியல் நடத்தும் பெரும்பாலான கட்சிகள் கருத்தியல் நிலைப்பாடு எடுப்பதில்லை. மேலும் அவை மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கிற அவசரக்கொள்கைச் சிக்கல்கள் மற்றும் நடவடிக்கைகளில் மௌனம் காக்கின்றன. மேலும் அவை பாஜகவின் வலிந்து மேற்சென்று தாக்குகிற அரசியல் வகுப்புவாத துருவச் சேர்க்கை (polarisation) மற்றும் அடையாள அரசியலுக்கு முற்றிலுமாக உள்ளாகக் கூடிய நிலையில் உள்ளன. உத்திரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து சிதைந்து கொண்டே போவது பாசிச வன்தாக்குதலுக்கு எதிரில் தாக்குப் பிடித்து நிற்க முடியாத, இந்தப் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய நிலைக்கான ஓர் அப்பட்டமான எடுத்துக்காட்டாகும்.

18. பாஜக, வலதுசாரியை நோக்கிய கொள்கைப் பெயர்ச்சியாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக வளர்ந்திருக்கும் இந்துத்துவப் பொதுப்புத்தியாலும் ஆதாயமடைகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புதிய தாராள வாதக் கொள்கைகளையும் இந்து மேலாதிக்க அரசியலையும் சுற்றி உண்டான கருத்தொருமிப்பு மற்றும் அரசியல் தொடர்ச்சி காரணமாக அவற்றிற்கிடையிலான எல்லைக்கோடு அடிக்கடி தெளிவற்றதாக மாறிப்போய் விடுகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் ஊமையாகிப்போய் விடுகின்றன. தங்கு தடையற்ற கார்ப்பரேட் (கூட்டாண்மைக்) கொள்ளையை, மூர்க்கத்தனமான இந்துத்துவா வுடன் பாஜக ஒன்று கலக்கச் செய்யும் என்றால், அந்த ஒன்று கலப்பை நாட்டின் மீது திணிக்கும் என்றால், அதோடு கொடூரமான அரச ஒடுக்கு முறையையும் வெட்கங்கெட்ட, சட்டத்திற்குப் புறம்பான வன்முறையையும் கலக்கும் என்றால், அந்த பாசிசத் தாக்குதலை எதிர் கொள்வதற்கான எதிர்ப்பு என்பது, ஒரு சோசலிச, மதச் சார்பற்ற, கூட்டாட்சி, சனநாயக இந்தியாவைப் படைப்ப தற்கான பார்வை குறித்த விடாப்பிடியான, துணிச்சலான அர்ப்பணிப்பால் உந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இத்தகைய நிலைமை, நவீன இந்தியாவின் நெருக்கடியான இந்தத் தருணத்தில், பொதுவுடமை இயக்கம் தனது வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றிட வேண்டும் அறைகூவல் விடுக்கிறது. என

19. கெடுவாய்ப்பாக, பாஜகவின் வாக்கு வலிமை அதன் உச்சத்தைத் தொட்டபோது இடது முகாமின் வலிமையும் கூட மிகப் பெரிய அளவில் சரிந்து விட்டது. எனினும் வாக்கு வலிமையின் சரிவு இடதுகளின் கருத்தியல் அரசியல் பொருத்தமின்மையை அல்லது அது காலாவதியாகி விட்டதைக் குறிக்கவில்லை. இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் உண்டான இந்தச் சரிவு முற்று முழுக்க இகக(மா) தலைமையிலான இடதுசாரிகள் மேற்கு வங்காளத்திலும் திரிபுராவிலும் ஆட்சியை இழந்து விலகியதால் விரைவுபடுத்தப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இகக(மா) வின் 34 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அது நிறைவேற்ற முடியாத முதன்மையான கடமைகள் மேன்மேலும் சேர்ந்து விட்ட நிலையில் பாரிய கொள்கைத் தவறு களால், மிகவும் குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகளை மேற்கொண்டமையும் அதிகாரத் திமிரும் கூட்டுச் சேர்ந்ததால் அது தன் சொந்த வாக்காளர் அடித்தளத்திலிருந்து மிகப் பெரிய அளவில் தனிமைப்பட்டு (அந்நியமாகி) விட்டது. அரசியல் களம், ஆளும் திரிணாமுல் காங்கிரசுக் கும் வன்தாக்குதல் நடத்தித் தொடர்ந்து வளர்கிற பாஜகவுக்கும் இடையில் மேன்மேலும் துருவச் சேர்க்கையடைகிற அரசியல் களத்தில் சிக்கிக் கொண்டதைக் கண்டது. முழுமையாக அதிர்ச்சி யூட்டும் வகையில் திரிபுராவில் பாஜகவிடம் அதிகாரத்தை இழந்த பிறகும்கூட குறிப்பாக மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் கண்டும் காணாமல் இருக்கிற, தற்கொலைக்கு நிகரான செயலை, மாறிய நிலைமையை, ஒப்புக் கொள்ளவும் அதை ஆராய்ந்து அதற்கேற்றபடி செயல்படவும் தவறியமை, விடயங்களை மேலும் மோசமாக்கவே செய்தது. ஆனால் அதே காலப் பகுதியில் இகக(மா) தலைமையிலான இடதுசாரிகள் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நன்றாகச் செயல்படுகின்ற அதே வேளையில், பீகாரில் இகக(மாலெ)யின் அழுத்த மான தேர்தல் அறுதியிடல், நிலைமை கோருவ தற்கு ஏற்ப இடதுசாரிகள் மீண்டும் எழுவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டிருக்கிறது.

20. நவீன இந்தியாவில் முன்னெப்போதும் கண்டிராத அளவு நெருக்கடியான இந்த தருணத்தில், இகை(மாலெ)யும் இடதுசாரி இயக்கமும், தமது முன்னுரிமைகளைப் மிகச் சரியாக வகுத்துக் கொள்ள வேண்டும். பிற் போக்கு, பேரழிவு உண்டாக்கும் பாசிச நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான, அச்சமற்ற விடாப்பிடியான, மற்றவர்களை இணங்க வைக்கக் கூடிய கருத்தியல் எதிர்ப்பு; நீடித்து நிலைக்கவல்ல உறுதிப்பாடுள்ள மக்கள் போராட்டங்களைக் கட்டுவதற்காக, சக்திவாய்ந்த, சரியான சமயத்திலான பெருந்திரள் முன்முயற்சிகள்; இகக(மாலெ) மற்றும் இடதுசாரி களின் அரசியல் உறுதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றின் மேல் கவனம் குவிக்கும் அதே சமயத்தில், சாத்தியமான பரந்த அளவிலான கருத்தியல் அரசியல் ஒத்துழைப்பு மற்றும் தேர்தல் புரிதலுக்கு முயற்சிப்பது நாம் இந்தத் திசையில் முன்னேறுவதில் உறுதியாக இருக்க வேண்டும். பாஜகவின் பாசிசத்தை நோக்கிய திட்டமிட்ட பயணம் இந்தியாவின் மூன்றடுக்கு அரசியல் கட்டமைப்பை அரசியல் கட்டாந் தரையாக்க அச்சுறுத்துகிறது. அதில் பாஜக முழு அதிகாரத்தை யும் கைப்பற்ற விரும்புகிறது. இந்த நிலையிலும் ஒவ்வொரு நிலைமை மற்றும் ஒவ்வொரு தளம் கோருவதற்கு எல்லாம் ஈடு கொடுத்து நாம் உயிர் பிழைத்து வாழ வேண்டியதுள்ளது. ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மக்கள் மட்டுமீறிய ஊழலையும், உள்ளாட்சிகளால் கிடைக்கக் கூடிய நன்மைகள் மற்றும் உரிமைகளை மறுப்பதையும் எதிர் கொள்ள வேண்டியதுள்ளது. அதே வேளையில் எல்லோருக்கும் கல்வியும் வேலை களும் கிடைக்கவும் வேலைக்கு ஆள் எடுப்பதில் வெளிப்படைத் தன்மை இருப்பதை உறுதி செய்யவும் போராடுவது கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் இளைஞர்களை மிகவும் நெருக்குகிற கவலையாக எழுந்துள்ளது. எந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் சாதி மற்றும் பாலின ஒடுக்குமுறையும் அநீதியும் ஆட்சித்துறையின் அக்கறையின்மையும் இந்தியாவுக்குரிய பண்புகளாக நிலவுகின்றன. பாசிச எதிர்ப்பில் கவனம் குவிக்க நாம் மக்களின் நலன்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். மேலும் சங்கப் படையணியின் பாசிசத் தாக்கு தலுக்கெதிரான சண்டையின் மையப் புள்ளியைப் பார்வையிலிருந்து தவறவிடாமல் ஒவ்வொரு தறு வாயிலும் மக்களது உரிமைக்கான சண்டையைத் தலைமை தாங்கி நடத்த வேண்டும்.