கன்னியாகுமரி மாவட்டத்தின் ரப்பர் தோட்டங்களின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது. ஜான், ஜோசப் மர்பி என்ற ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1902 ஆம் ஆண்டு அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் கோட்டய மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்ளை அறிமுகப்படுத்தி பயிரிட்டனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிர்கள் பயிரிடப்பட்டன. இத்தோட்டத்தில் சுமார் லட்சம் பேர் தொழிலாளர்களாகப்  பணியில் சேர்ந்தனர். இவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.

1942 ஆம் ஆண்டு முதல் தொழிற்சங்கமான அனைத்து திருவிதாங்கூர் எஸ்டேட் தொழிலாளர் சங்கம் உருவானது. அன்றைய கால கட்டத்தில் தொழிலாளர் உரிமைளை வென்றெடுப்பதில் தொழிற் சங்கங்கள் முக்கிய பங்காற்றின. நியாயமான ஊதியம் பெறத் தொழிற் சங்கங்கள் வரலாற்றுப் போராட்டங்ளை நடத்தின. தொடர்ந்து உரிமைப் போராட்டங்கள் தொழிலாளர்களால் 1942 ல் ஆங்கிலேயர்ளை உரிமையாளர்களாகக் கொண்ட ரப்பர் தோட்டங்களில் நடத்தப்பட்டன. அக்கால தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். சுதந்திரத்திற்கு முன் விபத்து, நியாயமான ஊதியம் இல்லாமை, தொற்று நோய், பாம்பு கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி எந்தத் தரவுகளும் இல்லை.

பின்னாளில் தொழிலாளர்ளை அமைப்பாக்குவதில் கம்யூனிச மற்றும் சோசலிச அமைப்புகளின் தலைவர்கள் முன் முயற்சி எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கிளை உறுப்பினரான ஜி.எஸ்.மணி 1942 ல் அனைத்து திருவிதாங்கூர் சிவலோகம் தோட்டத்தில்  உருவாக்கினார்.ரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் உள்ள விளவங்காடு தாலுகாவிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி தேவாளை தாலுகா வரை விரிவடைந்தது.

1956 மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளர் சங்கம் (கேடிஎப்டிடபிள்யுயு)உருவானது. பின்னர் இச்சங்கம்
ஏஐடியுசி சங்கத்தோடு இணைக்கப்பட்டது
1970 வாக்கில் சிஐடியு சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கங்கள் சிறந்த வேலை, சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியது.தனியார் தோட்டங்களிலும் இப்போராட்டங்கள் எதிரொலித்தன. 1960 ல் தனியார் தோட்டங்களின் பரப்பளவு கூடியது. 1962 ல் தொழிலாளர்களின் பாத யாத்திரை கடையாறு முதல் நாகர் கோவில் வரை நடந்தது. 1972 /73 ல் அம்பாடி தோட்டத்தில் நடந்த போராட்டம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமாக நடந்தது. இப்போராட்டங்களின் மையக் கோரிக்கையே சம்பள உயர்வுக்கானது தான்.

அரசு ரப்பர் கார்ப்பரேஷன் என்பது தமிழக அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் பொது நிறுவனமாகும். 20.09.1984ல் பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகளைத் தத்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்ட நிறுவனமே
அரசு ரப்பர் கார்ப்பரேஷனாகும்.இது ஐ.எஸ்.ஐ 9001 - 2008
சான்றிதழ் பெறப்பட்டது.இயற்கை ரப்பரை உற்பத்தி செய்து பதப்படுத்திய பின் நுகர்வோருக்கு மூல ரப்பராக விற்பனை செய்வதே இந் நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 4160.78 ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் சாகுபடி செய்யப்பட்டது. துவக்கத்தில் இந் நிறுவனம் பட்டியலிடப்படாத பொது நிறுவனமாகும். பின்னர் ஆகஸ்ட் 10, 1984ல் பொது நிறுவன மாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ஐ.என்.ஆர் 13.07 கோடியாகும்.

தமிழக அரசால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகவம் பின்னடைவு ஏற்பட்டது. தமிழக அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்ளை அலட்சியப்படுத்தியது. ரப்பர் மரங்கள் பலனளிக்கவில்லை எனச் சொல்லி சுமார் 1000 ஹெக்டேர் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்ளை வனத்தறையிடம் ஒப்டைத்து விட்டது, அதில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு வேலை பாதுகாப்புமின்றி கைவிடப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ரப்பர் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான விதி முறைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக தொழில்துறை பாதிப்படைந்துள்ளது. 1951ல் கொண்டு வரப்பட்ட தோட்டத் தொழிலாளர் சட்டம் மற்றும் 2006 ல் கொண்டு வரப்பட்ட வனச் சட்டம் ஆகியவற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் என்பது முறையாக கிடைக்கப்படாததால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாவே இருக்கிறது.

வனச்சட்டத்தின் அடிப்படையில் தனியார் தாங்கள் வைத்திருக்கும் 5 செண்ட் முதல் 50 செண்ட் வரை உள்ள நிலங்களில் பயிரிட்ட
ரப்பர் மரங்ளை முறையாகக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் முடியவில்லை. வனச்சட்டத்தின் படி அந்த நிலங்களை யாரிடமும் விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியாது. உற்பத்தி செய்யப்படாத மரங்ளை வெட்டக்கூட அனுமதி இல்லை. இதனால் இச்சிறு உற்பத்தியாளர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூடத் துன்பப்படுகிறார்கள். இவர்களின் பெரும்பாலனோர் மாற்றுத் தொழில் செய்யும் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

இதன் மறுபக்கத்தில் பெரும முதலீட்டாளர்களின் எஸ்டேட்டுகளில் அரசு நிர்ணயித்துள்ள ரு 720 தினக் கூலியைக் கூட வழங்காமல் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்ளைச் சுரண்டி வருகின்றனர். சம்பள உயர்வுக்காகப் போராடிய இடதுசாரி சங்கங்களும் தற்போபோது இதில் அக்கறை காட்டுவதில் மிகப்பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தனியார் முதலாளிகளின் நலனைக் கருத்தில் கொணடே அரசு ரப்பர் கழகமும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைக் கூட்டிக்கொடுப்பதில் சிரத்தையின்றி உள்ளது.

அரசின் ரப்பர் கழகத்தில் நிரந்தர வேலை மருத்துவ சிகிச்சை, பணிக்கொடை, வருங்காலவைப்பு நிதி மற்றும் ஊழியர் காப்பீடு  (இ.எஸ்.ஐ)  பிரச்சனைகள் உள்ளன. ஆனால் தனியார் முதலாளிகளின் எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை என்பது உத்திரவாதமில்லை. ஊழியர் காப்பீடு (இ.எஸ்.ஐ) ஆகியன இருந்தும் இவை அனைத்திலும் தொழிலாளர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தனியார்  முதலாளிகளின் எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை என்பது உத்திரவாதமில்லை துஅறவே இல்லை. ஊழியர் காப்பீடு (இ.எஸ்.ஐ) அறவே இல்லை. வருங்கால வைப்பு நிதி இருப்பினும் நிரந்தர வேலை என்பது இங்கு ஊசலாட்டமாக இருப்பதால் வைப்புநிதி என்பது எதிர்காலத்திற்கு ஏற்றதாக இல்லை. அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வசிப்பிடம் எந்த வசதியுமின்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது. சாலை வசதிகள் இல்லை. குடி தண்ணீர் வசதி இல்லை. சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் என்பது இவர்களுக்கு எட்டாக் கனியாவே உள்ளது.

தற்போது அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2000 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இங்கு ஊழியர் காப்பீடு (இ.எஸ்.ஐ) மற்றும் மருத்துவனை அதற்குரிய மருத்துவர், செவிலியர் இல்லை என்பதை வலியுறுத்தி புரட்சிகரத் தொழிற் சங்கமான ஏஐசிசிடியு வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் வீ.சஙகர், மாநில தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் மாநில தணைத் தலைவர் அந்தோணிமுத்து ஆகியோர் நாகர்கோவில் கீரிப்பாறையில் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகத்திற்கு சனவரி 18 ந்தேதி சென்று அங்கு பணிபுரியும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்ளைச் சந்தித்தனர்.