சென்னையில் 16.11.2023 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மூத்த தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இகக (மாலெ) விடுதலை கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில், இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, நிலைக் குழு உறுப்பினர்கள் தோழர் டி.சங்கரபாண்டியன், தோழர் இரணியப்பன், இகக(மாலெ) மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் தோழர் கிருஷ்ணவேணி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் திருநாவுக்கரசு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு செவ்வணக்கம் செலுத்தினர். சிபிஐஎம் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிபிஐஎம் கட்சித் தலைவர்களை சந்தித்து இகக (மாலெ) சார்பாக அஞ்சலியையும் ஆறுதலை யும் தெரிவித்துக் கொண்டனர். அங்கு நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி நினைவஞ்சலி உரையாற்றினார். அவர் தனது உரையில், மகத்தான முதுபெரும் தோழர் சங்கரய்யா அவர்கள் தன்னுடைய இளமைக் காலத்திலே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகச் செயல்பட்டு, எட்டு ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து, இந்தியா விடுதலை பெறுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு சிறையில் இருந்து விடுதலை பெற்று, அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து இறுதி மூச்சு வரை இந்திய மக்களின் குறிப்பாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும் அவரின் தியாக மரபை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். தோழர் சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டங்களில், பேரணிகளில் இகக (மாலெ) மத்தியக்குழு உறுப் பினர்கள் பாலசுந்தரம், பாலசுப்பிரமணியன், சந்திர மோகன் மற்றும் மாநில நிலைக்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் பல்வேறு மாவட் டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.