இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை, மே 1967 நக்சல்பாரி எழுச்சியின் விளைவாக தோன்றிய ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகும். இந்திய மக்களின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரை, இந்திய அரசியலின் வரைபடத்திலும், இந்தியப் புரட்சியின் ஓட்டுநர் இருக்கையிலும் உறுதியாக அமர்த்தியது நக்சல்பாரி எழுச்சி. அதன் மூலம், வரலற்றுச் சிறப்புமிக்க புன்னப்புரா-வயலார் மற்றும் தெலுங்கானா போன்ற, கம்யூனிஸ்டுகள் தலைமையிலான விவசாயிகள் இயக்கங்களுடனான வரலாற்று தொடர்ச்சியையும் நிறுவியது. லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22, 1969 அன்று கட்சி உருவாக்கப்பட்டது. இந்திய நிலைமைகளில் மார்க்சிய – லெனினியத்தை பொருத்துகிற கடமைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் திரிபுவாத மற்றும் அராஜகவாத நீரோட்டங்களை எதிர்த்துப் போராடிய, புரட்சிகர மரபின் உறுதியான பாதுகாவலனாக சி பி அய் எம் எல் உதித்தது. துவக்கத்திலிருந்தே, அதன் நிறுவனப் பொதுச் செயலாளர் சாரு மஜூம்தார் உள்ளிட்ட தலைவர்களின் மொத்த தலைமுறையையும் அழித்த மிகக் கொடூரமான காவல் சித்திரவதைகள் மற்றும் கொலைகளைத் துணிச்சலாக எதிர்கொண்டது. சி பி ஐ எம் எல் விடுதலை கட்சி, அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் பெண்களின் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு வர்க்கப் போராட்ட முன்மாதிரியை வளர்த்தெடுத்தது.
சி பி ஐ எம் எல் விடுதலை பீகார் மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றங்களில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது; மேலும் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு பிரிவு மக்களின் இயக்கங்களை வழிநடத்துகிறது. பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும், சி பி ஐ எம் எல் பிரதிநிதிகள் ஒரு புரட்சிகர எதிர்க்கட்சியின் பாத்திரத்தை ஆற்றியுள்ளனர், ஆற்றி வருகின்றனர். சி பி ஐ எம் எல் இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதத்தின் சிறந்த மரபுகளை உயர்த்திப் பிடிக்கிறது. அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்த விசயத்திலும் உள்நாட்டில் தேசிய இனப் பிரச்சினைகள் குறித்த விசயத்திலும், அனைத்து வகையான தேசிய பேரினவாதம் மற்றும் தேசிய வெறிக்கூச்சல்களுக்கு எதிரான விடாப்பிடியான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. போராட்டத்தை நடத்தி வருகிறது. சி பி ஐ எம் எல், அதன் பிறப்பிலிருந்தே, இந்தியாவின் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்குமான போராட்டங்களில் முன்னணியில் நிற்கிறது. சி பி ஐ எம் எல், அரச ஒடுக்குமுறையை விடாப்பிடியாக எதிர்த்து வருகிறது, கொடூரமான சட்டங்களை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து போராடுகிறது, சாதி ஒழிப்பிற்காகப் போராடுகிறது, பெண்கள் மீதான வன்முறை, இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை குறித்த வெறுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது, நிலம் மற்றும் மூலாதாரங்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதை எதிர்த்துப் போராடுகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் மதவெறி பாசிசத்தை அதன் முழு ஆற்றலுடன் எதிர்ப்பதற்கு தன்னை அர்ர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
நன்கொடை வழங்குங்கள்
நாங்கள் முழுக்க முழுக்க மக்கள் வழங்கும் நிதியையே சார்ந்து இருப்பவர்கள்.
பெருநிறுவனங்கள் மற்றும் நிதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து எந்த நிதியையும் நாங்கள் ஏற்பதில்லை. எனவே, எங்களது போராட்டங்களுக்குத் தாராளமாக
நிதியுதவி வழங்குமாறு உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
உங்களின் நேரம், திறமைகள், கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் சாத்தியமான அனைத்து வழிகளிலும்
தாராளமாக இயக்கத்திற்குப் பங்களிக்குமாறு உங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தமிழ்நாடு மாநில கட்சி வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும் விபரங்கள்
(இந்தியர்களுக்கு மட்டும்)
Account Name (கணக்கு பெயர்): Communist Party of India (Marxist – Leninist) (Liberation)
Account Number (கணக்கு எண்): 0940101025511
IFSC குறியீடு: CNRB0000940
MICR எண்: 600015008
Bank (வங்கி): Canara Bank (கனரா வங்கி)
Bank Branch (வங்கிக் கிளை): Ayanavaram (அயனாவரம்), Chennai (சென்னை) – 600 023
Cheque (காசோலை), Demand Draft (டிமாண்ட் டிராப்ட்), Pay Order (பே ஆர்டர்)
Communist Party of India (Marxist – Leninist) (Liberation)
என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
முகவரி
சிபிஐ(எம்எல்) (விடுதலை)
தமிழ்நாடு மாநில அலுவலகம்,
3/254 B, ஜீவா தெரு, வண்டலூர், சென்னை – 600 048
தொடர்புக்கு
போன்: +91 7397606777 (என் கே நடராஜன் மாநிலச் செயலாளர்)
+91 9840340741 (இரணியப்பன் அலுவலகச் செயலாளர்)
அல்லது tamilnadu@cpiml.net என்கிற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
Communist Party of India (Marxist – Leninist) (Liberation)
Tamil Nadu State Office
3/254 B, Jeeva Street Vandalur Chennai – 600 048
e-mail: tamilnadu@cpiml.net
website: tamilnadu.cpiml.net
https://www.facebook.com/cpimltamilnadu
https://twitter.com/cpimltamilnadu
www.youtube.com/c/CPIMLTAMLILNADU