புரட்சிகர இளைஞர் கழகம்-அகில இந்திய மாணவர் கழகம் நடத்திய இளைஞர்-மாணவர் மாநில சிறப்பு மாநாடு

2023 மார்ச் 31 தோழர் சந்திரசேகர் நினைவு நாள் அன்று மதுரை, நீதிபதி கிருஷ்ணய்யர் சமூக கூடத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பாக மாணவர் இளைஞர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் தனவேல், பாலஅமுதன் தலைமை தாங்கினர். தோழர்கள் பெரோஸ் பாபு, உதுமான் அலி. சேலம் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநாட்டுக் கொடியை தோழர் மங்கையர்கரசி ஏற்றினார். தோழர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் சிறப்புரையாற்றினார்.

கல்வி தனியார்மயமும் காவிமயமும் மாணவர்களைக் கொல்லும்!

மீண்டும் ஒரு மாணவியின் மர்ம மரணம். கன்னக்குரிச்சி மாவட்டம் சின்னச்சேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் என்கிற தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவர் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். மாடியில் இருந்து விழுந்து கிடந்த இடத்தில் இரத்தம் ஏதும் இல்லை. ஆனால், மாணவியின் தலையில் இரத்தம் உறைந்துள்ளது. பள்ளியின் படிக்கட்டுகளில் விடுதிச் சுவர்களில் இரத்தம் காணப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. மாடியில் இருந்து விழுந்தவர் உடலில் எந்த எலும்பு முறிவும் இல்லை.