மீண்டும் ஒரு மாணவியின் மர்ம மரணம். கன்னக்குரிச்சி மாவட்டம் சின்னச்சேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் என்கிற தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவர் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். மாடியில் இருந்து விழுந்து கிடந்த இடத்தில் இரத்தம் ஏதும் இல்லை. ஆனால், மாணவியின் தலையில் இரத்தம் உறைந்துள்ளது. பள்ளியின் படிக்கட்டுகளில் விடுதிச் சுவர்களில் இரத்தம் காணப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. மாடியில் இருந்து விழுந்தவர் உடலில் எந்த எலும்பு முறிவும் இல்லை. இரண்டு ஆசிரியர்கள் தன்னை சத்தம் போட்டதே காரணம் என கடிதம் கிடைத்தது என்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியின் கடந்த கால வரலாறு, மாணவியின் தாயார் சொல்வதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. தன் மகள் பாலியல் வன்முறைக்குன்னாக்கப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் தாய். முதலில் உங்கள் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றுதான் சொல்லியுள்ளார்கள். ஆனால், மருத்துவர்களோ வரும்போதே இறந்துதான் வந்தார் ன்கிறார்கள். பள்ளி நிர்வாகம், மாணவியின் மரணத்திற்கு ருத்தம் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவரின் பெற்றோரிடம் பேசக்கூட இல்லை. கடந்த ஜூலை12ம் தேதி மாணவி இறந்துள்ளார். இடதுசாரி மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் அமைதியான வகையில் போராடினர். நான்கு நாட்கள் கழிந்து 17ம் தேதி வன்முறை, கலவரம் நிகழ்த்தப் படுகிறது. நான்கு நாட்களாக எந்தவொரு நடவடிக்கையும் காவல் துறை எடுக்கவில்லை. காவல்துறை அமைதியாக போராடியவர் கைது கள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளது. இப்போது பள்ளியின் தாளாளர், செயலர், தலைமை செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையும் கூட, பிரச்சினையை ஆசிரியர் திசை திருப்பும் நோக்கில், திட்டமிட்டு நிர்வாகத்தினரே, சமூக விரோதக் கும்பல்களைக் கொண்டு நடத்தியிருக்கிறார்கள் என்று பொதுமக்கள் பேசுகிறார்கள். இந்த வன்முறையை சுயநலமிகள் நிர்வாகத்திற்கு ஆதரவாக நடத்தியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பள்ளியின் செயலர் வீடியோ வெளியிட்டு, மாணவியின் தாய்தான் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் என்றும் தாயும் மகளும் கடைசியில் பேசிக் கொண்டதை ஆராய வேண்டும் என்றும் நடந்த வன்முறையில் மற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார். இதில் மற்ற மாணவர்களின் வாழ்க்கை பாழாகும் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிற மிரட்டல் தொனி கேட்கிறது. இந்தப் பள்ளியின் நிர்வாகம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாதாம். ஏற்கனவே 2005ஆம் ஆண்டு இப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடியிருக்கிறது. பள்ளிக்கு எச்.ராஜா உள்ளிட்ட சங்கிகளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டாம். எடப்பாடிக்கு வேறு சொந்தக்காரர்கள் என்றும் சொல்லப்படுகிற கிறது. உடன் நடவடிக்கை எடுக்காமல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுவிட்டு, அமைதியாக போராட்டம் நடத்தியவர்களே காரணம் என்று முத்திரை குத்தி திசை திருப்பும் வேலை தெரிகிறது. காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அவர்களே, பள்ளி நிர்வாகத்தின் மீது தவறில்லை என்று பாராட்டுப் பத்திரம் கொடுக்கிறார். சங்கிகள், சாமியார்கள் நடத்திய பள்ளிகளில் நடந்தவைகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. காக்கியில் உள்ள காவிகளின் ஆசிர்வாதம் அவர்களுக்கு இருக்கிறது. சாமியார்களும் சாராயம் காய்ச்சியவர்களும் சமூக விரோதிகளும் கட்டப்பஞ்சாயத்துப் பேர் வழிகளும் கல்வித் தந்தைகளாக வலம் வருவது உடன் மாற்றப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கையில் மட்டுமே இருக்க வேண்டும். அப்போது மட்டுமே இம் மாதிரியான மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆட்சியிலிருப்பவர்கள் சொந்தமாக கல்வி நிறுவனங்களை நடத்தக் கூடாது. அரசாங்கம்தான் நடத்த வேண்டும். அப்படியொரு தீர்வுக்கு முன்வருமா திமுக அரசு?