தலையங்கம்:மோடியின் வெத்துவேட்டு மேளாக்கள்

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மெகா மேளாக்களைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பிரதமருக்கு இருக்கக் கூடிய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு 'சாலைக் காட்சிகளை' (Road Shows) நடத்தினார். கர்நாடகத்தில் இருந்த பூக்களையெல்லாம் தன் மீது அள்ளி வீசச் சொல்லி ஷோ காட்டினார். ஆனால், அந்த ஷோவுக்கெல்லாம் கர்நாடக மக்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டுள்ளார்கள். மோடி ஆட்சிக்கு வந்ததும் எல்லாருக்கும் வங்கிக் கணக்கு, ஏழைகளுக்கும் வங்கிக் கணக்கு என்று சொல்லி காசில்லாமல் வங்கிக் கணக்கை துவக்கச் சொன்னார். அதில் நான் பணம் போடுவேன் என்றார்.

கொல்கத்தாவில் மாணவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல்--கண்டனம்

மேற்கு வங்கத்தில் அரசுப் பணிகளில் வேலைக்கு ஆளெடுப்பதில் நடைபெற்ற முறைகேடு களைக் கண்டித்து, புரட்சிகர இளைஞர் கழகம்(ஆர்ஒய்ஏ) மற்றும் அகில இந்திய மாணவர் கழகம்(அய்சா) சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது மேற்கு வங்க மம்தா அரசு, சிபிஐ (எம்எல்)விடுதலை கட்சியியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் தோழர் அபிஜித் மஜும்தார், அய்சா தலைவர் நிலாஷிஸ், ஆர்ஓய்ஏ தலைவர் ரன்அஜாய் மற்றும் பல முன்னணி தோழர்களைத் தாக்கி கைது செய்தது. ஊர்வலமாக சென்றவர்களை ராம்லீலா மைதானத்தில் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி தாக்குதலில் ஈடுபட்டனர். பெண் தோழர்கள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.