ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணை முதலில் போடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவரால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், அப்போதைய எடப்பாடி அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் பல்வேறு தரப்பினர்கள் சாட்சியம் அளித்துள்ளார்கள்.