ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணை முதலில் போடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவரால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், அப்போதைய எடப்பாடி அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் பல்வேறு தரப்பினர்கள் சாட்சியம் அளித்துள்ளார்கள். இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், பண்டாரம்பட்டி மக்கள் போராட்டத்தில் முன்னணியில் நின்ற, ஏஐசிசிடியு மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சகாயம் உள்ளிட்டவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர் நடைபெற்ற காவல் துறை ஒடுக்குமுறை, கைது நடவடிக்கைகள், காயம்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் முன்பு சாட்சியம் அளித்துள்ளார்கள். பொதுவாக அரசாங்கத்தினால் அமைக்கப்படும் ஆணையம் எதுவும் ஆட்சியாளர்களையோ, அதிகாரிக ளையோ குற்றம்சாட்டியது கிடையாது மாறாக, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரித்ததுதான் கடந்த கால நிகழ்வுகளாக இருந்துள்ளது. அதற்கு மாறாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், அன்றைய மாவட்ட ஆட்சியரை, உயர் போலீஸ் அதிகாரிகளை, வட்டாட்சியர்களை, சில காவலர்களைக் குற்றம் சுமத்தியுள்ளது. அந்த ஆணையத்தின் அறிக்கை இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, சில அதிகாரிகள் மற்றும் காவலர்கள் குற்றவாளிகள். ஆனால், ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்கு முழு ஆதரவாக இருந்த மோடி அரசும் எடப்பாடி அரசும் கேள்விக் குள்ளாக்கப் படவில்லை. குற்றவாளிகளாக்கப்படவில்லை. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் படி திமுக அரசு இப்போது சில காவல் அதிகாரிகள், மூன்று வட்டாட்சியர்கள் எனச் சிலரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆணையம் குற்றம் சுமத்தியுள்ள யார் மீதும் கிரிமினல் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை. அவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு குற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்பட வேண்டும். மாறாக இது ஒப்புக்கான நடவடிக்கையாகவே உள்ளது. துறைவாரியான நடவடிக்கையால் என்ன பயன்? எல்லாம் அறிந்த எடப்பாடி, எல்லாரையும் போல் பார்த்துதான் சம்பவத்தையே அறிந்து கொண்டேன் என்று எக்காளமாகப் பேசிய டிவி எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக்கப்பட வேண்டும். அவரை ஆட்டுவித்த ஒன்றிய பாஜக-மோடி அரசும் அனில் அகர்வாலும் குற்றவாளிகளாக்கப்பட வேண்டும். இல்லை யென்று சொன்னால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை அர்த்தமற்றுப் போகும்.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை பற்றி போராட்டக்களத்தில் நின்ற சிலர் சொல்வதைப் பார்ப்போம்:-
பாத்திமா பாபு (ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்)
எந்த ஒரு கலவரத்திலும் விசாரணை ஆணையங்கள் மக்களை குற்றவாளிகளாக்கும் அரசு அதிகாரிகளை காப்பாற்றும். ஸ்டெர்லைட் விசயத்திலும் கூட சிபிஐ விசாரணை பேருக்கு ஒரு காவல் அதிகாரி மீது குற்றம் சுமத்தி விட்டு மக்கள் 100 பேர் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கை மிகத் தெளிவாக கலவரத்திற்கும் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றதோடு உயர் அதிகாரிகள் முதல் கீழ் மட்ட அதிகாரிகளின் தவறை அம்பலப்படுத்தி இருக்கிறது. அதனால் அருணா ஜெகதீசன் அறிக்கையை வரவேற் கிறோம்.தமிழக அரசிடம் கீழ்க் கண்ட கோரிக்கையை வைக்கிறோம்.
1.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மீதான வழக்குகள் திரும்பப் பெற வேண்டும்.
2.மிகப்பெரும் குற்றங்கள் செய்தவர் களுக்குத் தான் வரலாற்று ஏடு (History sheet) கொடுப்பார்கள். ஆனால் ஒரு வழக்கு கூட இல்லாத பல போராளிகளுக்கு போராட்டத்தை நீர்த்து போக கொடுக்கப்பட்டு இருக்கிறது. வரலாற்று ஏட்டில் (History sheet) இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
கிருஷ்ண மூர்த்தி (ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு)
அன்று இந்திய சுதந்திரப் போராட்டத்தை அழிக்க பிரிட்டிஷ்காரர்கள் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்தினார்கள். இன்று வேதாந்தாவால் தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்ட சுற்றுப்புற சூழல் அச்சுறுத்தலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அழிக்க இன்றைய ஆட்சியாளர்கள் இந்த படுகொலைகளை நடத்தி உள்ளனர். இது வேதாந்தா + அரசு நிர்வாகம் இணைந்து நடத்திய அரச பயங்கரவாத செயல்.
அதிகாரிகளே துப்பாக்கிச் சூடுக்கு காரணம் என்பதை அருணா ஜெகதீசன் அறிக்கை தெளிவாகச் சொல்லி இருப்பதால் இந்த அறிக்கையை வரவேற்கிறோம். போராட்டக் காரர்களை குற்றம் சுமத்திய ரஜினிகாந்த் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த அறிக் கையை 80% ஏற்றுக்கொள்கிறோம். 20% ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் இன்னும் சில குற்றவாளிகள் விடுபட்டு இருக்கிறார்கள்.
தமிழக அரசு கீழ்க் கண்ட கோரிக்கைகளைநிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம்.
1. தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் படவேண்டும்.
2.துப்பாக்கிச் சூடுக்கு காரணமாக இருந்துவிடுவிக்கப் பட்டவர்களும் சேர்க்கப்பட வேண்டும்.
3.துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட வேண்டும்
ஹரிகரன் (ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு)
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாள்கள் மக்கள் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல முனைகளிலிருந்து பல தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் பற்றிய செய்தி அப்போதைய முதல்வருக்கும் சென்றிருக்க வேண்டும். ஆனால் துப்பாக்கிச் சூடுக்கு பின் அவர் மிகச் சாதாரணமாக பொறுப்பில்லாமல் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்கிறார். அவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுவரை பல தீர்ப்புகளில் மக்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கை அதிசயமாக அதிகாரிகளே காரணம் என்று சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு தவறுக்கு காரணமானவர்கள் மீது துறைவாரி நடவடிக்கை எடுத்தால் போதாது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுஜித் (புரட்சிகர இளைஞர் முன்னணி)
அருணா ஜெகதீசன் அறிக்கை அமைதியாக போராடிய மக்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து விட்டது. எனவே மக்கள் மீது குற்றம் சுமத்திய சிபிஐ அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
துப்பாக்கிச் சூடுக்கு ஆணையிட்டது யார் என்ற கேள்விக்கு பதில் இன்னும் மர்மமாகவே உள்ளது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மீதான பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும்.
தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்றப்படவேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட வேண்டும்.
சகாயம்(ஏஐசிசிடியு மாநிலக்குழு உறுப்பினர்)
அறிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட குற்றவாளி கள் அனைவரும் தண்டிக்கப்பட இன்றைக்கும் ஸ்டெர்லைட் வேண்டும். ஆலைக்கு ஆதரவாக, ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவு நாளைக் கூட நடத்தவிடாமல் காவல்துறை கட்டுபாடுகளை விதிக்கிறது. ஸ்டெர்லைட் நிர்வாகம் காசு கொடுத்து சிலரை வைத்து ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது. ஸ்டெர் லைட் ஆலை தூத்துக்குடியில் இருந்து முற்றிலு மாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)