பரந்த அடிப்படையிலான ஒன்றுபட்ட எதிரணி ஒன்று உருவாகியதிலிருந்து, மோடி அரசாங்கமும் ஒட்டுமொத்த சங்கி- பாஜக படையணியும் கலக்கமடைந்துள்ளனர் என நன்றாகவே புலப்படுகிறது. புல்வாமா படுகொலையால் தூண்டிவிடப்பட்ட மிகை தேசியவாத அலையின் பின்னணியில், 2019இல் நடைபெற்ற தேர்தலில் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைந்த வாக்குகள் 45%ஐத் தாண்டவில்லை என்பதும், பாஜகவின் சொந்த வாக்குகள் 40%க்கும் குறைவாகவே இருந்தது என்பதும் அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்.