பரந்த அடிப்படையிலான ஒன்றுபட்ட எதிரணி ஒன்று உருவாகியதிலிருந்து, மோடி அரசாங்கமும் ஒட்டுமொத்த சங்கி- பாஜக படையணியும் கலக்கமடைந்துள்ளனர் என நன்றாகவே புலப்படுகிறது. புல்வாமா படுகொலையால் தூண்டிவிடப்பட்ட மிகை தேசியவாத அலையின் பின்னணியில், 2019இல் நடைபெற்ற தேர்தலில் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைந்த வாக்குகள் 45%ஐத் தாண்டவில்லை என்பதும், பாஜகவின் சொந்த வாக்குகள் 40%க்கும் குறைவாகவே இருந்தது என்பதும் அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அன்றிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்று முக்கிய கட்சிகளான பஞ்சாபின் அகாலி தளம், மகாராஷ்டிராவின் சிவசேனா, பீகாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை பாஜகவிடம் இருந்து பிரிந்துவிட்டன. அதே நேரத்தில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மிகத் தெளிவாக அம்பலமானது போன்று பாஜகவின் சொந்த தேர்தல் பலம் குறைந்து கொண்டே வருகிறது. பாஜக அல்லாத பல வண்ண கட்சிகளின் பரந்த அளவிலான எவ்வகை திறன்மிகு ஒன்றிணைவும், பாஜக கவலை கொள்வதற்கு வெளிப்படையான காரணமாகவே இருக்கும்.
செயல்படாத மோடி அரசாங்கத்தின் பேரழிவுமிகு ஆட்சிக்கு எதிராக பெருகிவரும் மக்களின் கோபமும், இந்த மக்களின் கோபத்திற்கும், பரிணமித்துவரும் எதிரணி ஒற்றுமைக் கட்டமைப்பின் அதிகரித்துக் கொண்டிருக்கும் இயங்காற்றலுக்கும் இடையே வளர்ந்து வரும் இசைவும் தான், தேர்தல் கணக்கு களையும் தாண்டி பாஜகவைக் கலங்க வைத்துள்ளது. இண்டியா என்று சுருக்கப்பட்ட பெயர், எதிரணியின் ஒற்றுமை செயல் முறைக்கு புத்துணர்ச்சியூட்டும் கூட்டு அடையாளத்தையும் மாறுப்பட்ட கதையாடலையும் வழங்கியது. மேலும் அது சோர்வ டைந்துள்ள மோடி அரசாட்சி வரவிருக்கும் தேர்தல்களில் நிச்சயமான ஒரு போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. அப்போதிருந்து, ஒன்றுபட்ட எதிரணியை குறிவைக்கும் முயற்சிகளில் பாஜக தீவிரமடைந் துள்ளது. இண்டியாவை கிழக்கிந்திய கம்பெனியுடனும், இந்தியன் முஜாஹிதீனுடனும் தொடர்பு படுத்துவதில் இருந்து பாரதத்திற்கு எதிராக அதனை நிறுத்துவது வரை, சாத்தியமான அனைத்து கோணங்களிலும் முயற்சி செய்து வருகிறது.
திடீரென்று அறிவிக்கப்பட்ட சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தின் உண்மையான நடவடிக்கைகள், விளைவுகளுக்காக நாடு காத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இண்டியா கூட்டணிக்கு எதிராக கெடு நோக்குடைய பரப்புரை இயக்கத்தைத் தொடங்க சங்கி பாஜக முகாம் இரண்டு சமீபத்திய வளர்ச்சிப்போக்குகளை குறிவைத்திருப்பதாகத் தெரிகிறது. கர்நாடகத் தேர்தல் பரப்புரையின் போது அவரது விரக்தி மிகுந்த 'ஜெய் பஜ்ரங்பலி' முழக்கத்தின் அதே வீரியத்துடன், முதல் பரப்புரை இயக்கம் நரேந்திர மோடியால் தலைமை தாங்கி நடத்தப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறையிலிருந்தும் பல்வேறு வகையான சமூகப் பாகுபாடுகள், அநீதிகளில் இருந்தும் மக்கள் விடுதலை பெற வேண்டுமானால் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு இம்முறை சங்பரிவாரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சனாதனம் என்பதை இந்து மதத்திற்கு இணையான வார்த்தையாகப் பயன்படுத்தி, அது சொல்லப்பட்ட பின்னணியில் இருந்து அதனை அகற்றி, இந்துக்களை இனப்படுகொலை செய்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவும், இந்திய கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகவும் பாஜக அதனைத் திரித்து முன்வைக்கிறது. குறிப்பிட்ட சில தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் குழுவால் நடத்தப்படுகிற, வெறுப்பை உமிழும் மதவாத துருவச் சேர்க்கையை உருவாக்கும் விவாதங் களில் பங்கேற்பதில்லை என்ற இண்டியா கூட்டணியின் முடிவு சம்பந்தமானது இரண்டா வது பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையிலும், அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் களைவிட, மீண்டும் பாஜக தான், இதனைக் கருத்து சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் மீதான தாக்குதல் எனவும், இது அவசரநிலைக்கு ஈடானது எனவும் கூறி, இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு உடல்ரீதியான தாக்குதல் களுக்கான சாத்தியங்களை இந்தக் கூட்டணி உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டியது. இண்டியா கூட்டணியை இந்துக்களுக்கு எதிரானது, ஊடக சுதந்திரத்திற்கு விரோதமானது என்று சித்தரித்து ஒட்டுமொத்த சங்கி - பாஜக அமைப்பும், மோடியின் செல்ல ஊடகங்களும் இப்போது திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.
இண்டியா கூட்டணியின் தலைவர்களும் செய்தித் தொடர்பாளர்களும், குறிப்பிட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற பிரச்சினையைப் பற்றிப் பார்ப்போம். அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் சுதந்திரம் எந்த வகையிலும் இதன் மூலம் கட்டுப்படுத்தப் படவில்லை. அவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்பது இண்டியா கூட்டணியின் முடிவு.
இது, வெறுப்பையும் பொய்களையும் பரப்புவதை முழு நேரப் பணியாக செய்து ஒவ்வொரு நாளும் சமூக சூழலைக் கெடுக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் குழுவை, அரசாங்கத்திற்கு நம்பகமானப் பரப்புரை இயந்திரமாக சேவை செய்பவர்கள் என அழைப்பதற்கு ஈடானதாகும். டெல்லியின் எல்லையில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை மோடியின் செல்ல ஊடகங்கள் காலிஸ்தானி பயங்கரவாதிகளாக சித்தரித்த போது, விவசாயிகள் யக்கம் அற்புதமாக அதனை எதிர்த்துப் போராடியது. மோடியின் அரசாட்சி, அதானி, அம்பானியின் கார்ப்பரேட் சக்தி ஆகியவற்றுக்கு அக்கம் பக்கமாக மோடியின் செல்ல ஊடகங்களையும் நேரடியான இலக்கு களில் ஒன்றாக ஆக்கியதன் மூலம் அவற்றை மதிப்பற்றதாக்கியது. நச்சுப் பரப்புரையை ஊடகவியல் என ஏற்றுக் கொள்ளாமல் மறுதலித்ததன் மூலம் இண்டியா முகாம் இதை முன்னெடுத்துச் சென்றுள்ளது.
சனாதனம் என்ற சர்ச்சையைப் பொறுத்த வரையில், இந்தியாவில் சாதிய அமைப்பு மிகவும் உறுதிமிக்க நிறுவனமயமாகியிருக்கிறது என்றால், அதை புனிதப்படுத்துவதிலும் ஏற்றுக் கொள்ளச் செய்திருப்பதிலும் மதம் பெரும் பங்கு வகித்துள்ளது என்பது ஒன்றும் யாரும் அறிந்திராத இரகசியமல்ல. சாதிய எதிர்ப்பு இயக்கம் இந்த நிறுவனமயமாக்கப்பட்ட அநீதிக்கும் சமத்துவ மின்மைக்கும் எதிராகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. பாபாசாகேப் அம்பேத்கர் மனுஸ்மிருதியை பொதுவெளியில் வெளிப் படையாக எரித்து, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடும் புனிதப் போராட்டத்தைத் தொடங்கினார். மேலும், அவர் மறைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, தனது கடைசிப் பெரிய எதிர்ப்பு நடவடிக்கையில், அவர் இந்து மதத்தைத் துறந்து பௌத்தத்தைத் தழுவினார். இந்த முக்கிய சாதியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் 'இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்' என்ற விளையாட்டை விளையாடு வதன் மூலம் எதிர்ப்பினை ஒடுக்க முயல்கிறது.
சனாதனம் என்பதன் நேரடி அர்த்தம் காலமற்றது அல்லது நிரந்தரமானது என்பதாகும். நமது சமீபத்திய வரலாற்றில் மத, சமூக சீர்திருத்தங்களுக்கான முயற்சிகளை தடுத்து நிறுத்த இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப் படுகிறது. மோடி ஆட்சி சனாதனம் என்ற எச்சரிக்கை பொத்தானை அழுத்தும்போது, தற்செயலாக, சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு (பகுஜன் சமாஜ்) இழைக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகால அநீதியைப் போக்குவதற்கு ஆதரவான நடவடிக்கையாக அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு இடஒதுக் கீட்டை ஏற்கத் தயாராக இருக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் முகாமை மோகன் பகவத் கேட்டுக் கொண்டார். சங்கிப் படைப்பிரிவின் தத்துவ வாதிகள் பெரும்பாலும் முகலாயர்கள் காலத்தில் புகுத்தப்பட்டு பிரிட்டிஷ் காலனியவாதிகளால் வலுப்படுத்தப்பட்ட ஒரு 'சிதைவு' என்று சாதியை முன்வைக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகால சாதிய ஒடுக்குமுறை ஆனால் பற்றி மோகன் பகவத் பேசும்போது, இந்து மதத்திற்கும் சாதியத்திற்கும் இடையே உள்ள இயற்கையான தொடர்பைக் கண்டிப்பாக மறுக்க முடியாது.
சங்கிக் குடும்பத்தினர் ஒரே நேரத்தில் பல நாக்குகளால் பேசிய வரலாறு உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகால சமூக அநீதியைப் பற்றி பகவத் பேசுகையில், சங்கிப் படை உண்மையில் வீர விழிப்புணர்வு பயணங்களை (சௌர்ய ஜாகரன் யாத்திரைகளை) நடத்தி நாடு முழுவதிலும் மூர்க்கத் தனத்தைக் கிளறி விடுவதிலும், மதக் கலப்பு மதக் கலப்பு மணங்களை, மதமாற்றத்தை தடுத்து, 'சனாதன தர்மத்தை'ப் பாதுகாக்க பல்லாயிரக்கணக்கான தர்மப் போராளிகளையோ அல்லது மதப் போராளி களையோ உருவாக்குவதிலும் மும்முரமாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. விலைவாசிகள், வேலைகள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் போன்ற அன்றாட வாழ்க்கையின் உடனடிப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும், இந்திய அரசியல் சாசனத்தின் அடித்தளத்தையும் பன்முகப்பட்ட கலாச்சாரத்தையும் பாதுகாக்கவும் இந்திய மக்கள் உறுதியாக இருக்கும்போது, அதிலிருந்து இந்தியாவை மீண்டும் தடம் புரளச் செய்து இனப்படுகொலை வன்முறையைத் தூண்டிவிட சங்கிப் படை துடிக்கிறது. இந்த செயல் திட்டம் முறியடிக்கப்பட்டேயாக வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)