கள ஆய்வு
2023 டிசம்பர் 16 அன்று மாலை துவங்கி டிசம்பர் 18 மதியம் வரை விடாது பெய்த மழையோடு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்ந்து 18ஆம் தேதி தூத்துக்குடியில் மாவட்டங் களில் பெரும் பாதிப்பைக் கொண்டு வந்தது. வரலாறு காணாத மழை. 17ந் தேதி காயல் பட்டினத் தில் 93 சென்டிமீட்டரும் திருச்செந்தூரில் 69 சென்டிமீட்டரும் ஸ்ரீவைகுண்டத்தில் 63 சென்டி மீட்டரும் அதிகபட்சம் மழை பெய்தது.
கோரம்பள்ளம், மீள விட்டான் குளத்து நீர் சூழ்ந்து தூத்துக்குடி நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. தூத்துக்குடி நகரமெங்கும் மழை வெள்ளம்.