பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுமா காவல்துறையைக் கையில் வைத்துள்ள 

மு..ஸ்டாலின் அரசு?

 

"பாலியல் வன்முறைக்கு பலியாகும் கடைசி மாணவி நானாகத்தான் இருக்க வேண்டும்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இன்னுயிரை மாய்த்துக் கொண்ட, கரூர்  பரணி பார்க் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகள் இன்றுவரை கண்டுபிடிக்கப் படவோ,கைது செய்யப்படவோ இல்லை என்பது, காவல்துறை யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கிறதா? என்ற கேள்வியை  எழுப்புகிறது.

கரூரில் உள்ள செல்வாக்குமிக்க கோடீஸ் வரர்களால் நடத்தப்படும், பரணி பார்க் பள்ளி யில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிதான் அப்படி எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவர் கனவோடு இந்தப் பள்ளியில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த இந்த மாணவி தன் கனவு நிறைவேறும் முன்பாகவே "என்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய நபரின் பெயரை எழுத பயமாக இருக்கிறது. இந்த பூமில வாழணும்னு ஆசப்பட்டேன். ஆனா பாதிலயே போறேன்பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரைவிடும் கடைசி மாணவி நானாகத்தான் இருக்க வேண்டும்" என்று  எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிவிட்டார். சம்பவம் நடந்து 25 நாட்கள் முடிந்த நிலையில், அவர் தூக்கில் தொங்க காரணமான நபரை காவல்துறை இன்று வரை கண்டுபிடிக்கவில்லை

நவம்பர் 19 அன்று பள்ளி முடிந்து அழுது கொண்டே வந்த அந்த மாணவி,வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குமாட்டிக் கொண்டார். பின்னர் மாணவியை உடல் மருத்துவக் கூராய்வுக்கு எடுத்துச்சென்ற நிலையில், மாணவியின் உறவினர்கள் வெங்க மேடு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச்  சென்றுள்ளனர். அந்த காவல்நிலையத்தில் இருந்த காவலர்ஆய்வாளர் வரும் வரை காத்திருக்குமாறு கூறி அங்குள்ள பெஞ்சில் அமரச் சொல்லியிருக்கிறார். சற்றுநேரத்தில் அங்கு வந்த ஆய்வாளர் கண்ணதாசன்  "இந்த அக்யூஸ்டுகளை ஏன் அமர வைத்தாய்" என்று சொல்லி அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் லாக்கப்பில் தள்ளியிருக்கிறார். அத்தோடு பலியான மாணவி யின் தாயாரை வரச்சொல்லி, தகாத வார்த்தைக ளால் அவரை இழிவாக பேசிய தோடுஅவர்தான் அவர் மகளை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். அவரையும் அவருடன் வந்தவர்களையும் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே  அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளார். அடுத்த நாள்மருத்துவமனையில்கூராய்வு முடிந்த உடலை பார்க்கக்கூட விடாமல் கையெழுத்து வாங்கிக் கொண்டு மின்மயானத்தில் உடலை தகனமும் செய்துள்ளனர்.  

 பின்பு பல்வேறு சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள் இந்தப் பிரச்சினை குறித்து போராட  ஆரம்பித்த  பிறகு மேற்படி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்ட வுடன்சிபிஐஎம்எல் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மு.இராமச்சந்திரன், முற்போக்கு பெண்கள் கழக தேசிய குழு உறுப்பினர் தோழர் பிலோமினா ஆகியோர் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். நடந்த  விவரங் களைக் கேட்டறிந்தனர். குற்றவாளிகளை உடனடி யாகக் கைது செய்ய தொலைக்காட்சி ஊடகத்தின் வாயிலாக வலியுறுத்தினர்.

பரணி பார்க் பள்ளி மாணவியின் தற்கொலை யும் அது தொடர்பான நிகழ்வுகளும் அப்பள்ளி மாணவர்கள், கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், 23.11.2021 ஆம் தேதியன்று, பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கரூர் பேருந்து நிலையம் அருகில் மாலை 5.00 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோழர் பிலோமினா (கிமிறிகீகி), தோழர் நிர்மல் (ஸிசீகி), தோழர் சந்திரசேகரன் (சிறிமிவிலி) ஆகியோர்  மாணவர்களுக்கு உறுதுணையாக போராட்டத்தில் கலந்துகொண்டனர். அடுத்த நாள் (24.11.2021), மாணவர்கள், கரூர் அரசு கலைக் கல்லூரியில் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணியில் தோழர் பிலோமினா, தோழர் மெஜோ (கிமிஷிகி) ஆகியோர் பங்கேற்றனர். காவல் துறையால் பேரணி இடைவழியில் மறிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரும் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப் பட்டதுகீதாஞ்சலி என்ற ஏடிஎஸ்பி தலைமை யில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த விசாரணைக்குழு கண்துடைப்பாக ஓரிரு நாட்கள் பள்ளியில் விசாரணை நடத்திய தோடு, எந்தவித முன்னேற்றமுமின்றி கிணற்றில் போட்ட கல்லாக வழக்கு இருக்கிறது.

இந்நிலையில், சிபிஐஎம்எல் கரூர் மாவட்டக்குழு சார்பாக, 29.11.2021 அன்று பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது. 30.11.2021 அன்று, அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் தலைமையில், அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் இணைந்து  கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, நீதி கேட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தில்சிபிஐ (எம்எல்தோழர்களும் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து முற்போக்கு பெண்கள் கழகத் தோழர்களும், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சாமான்ய மக்கள் நலக் கட்சி உள்ளிட்ட கரூரின் ஜனநாயக சக்திகளும்கலந்து கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர்.        அடுத்த நாள் அந்த மாணவியின் தாயாரை நமது தோழர்கள் இராமச்சந்திரன், ராஜசேகர், பிலோமினா, கிருஷ்ணவேணி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்மன ரீதியாகவும், உடல் ரீதி யாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவியின் தாயார் இருந்த நிலையில், அங்கிருந்த அவரின் உறவினர், காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாக கூறினார்நமது தோழர்கள் உடனடியாக விசாரணைக்குழு அதிகாரி கீதாஞ்சலியை சந்தித்து காவல்துறையின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டி அவர்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி  கோரினோம். நமது கோரிக்கைக்கு செவிசாய்த்த போதிலும்,வழக்கு விசாரணைப் பற்றி எதுவும் கூற மறுத்து விட்டார்

ஆனால் நமது தோழர்களின் விடாமுயற்சி காரணமாக மாணவியின் தாயாரையும் உறவினர்க ளையும் அழைத்துப்பேசி, சிஙிசிமிஞி விசார ணைக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றினை அளிக்கச்செய்திருக்கிறோம்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும், காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்ததைத் தாண்டி காவல்துறையின் விசாரணை யில் எந்த முன்னேற்றமும் இல்லாதது, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் மாவட் டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரிடமிருந்து இந்த வழக்கு தொடர்பாக நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்தி எதுவும் இல்லாதது ஆகியவை காரணமாக இந்த வழக்கு இன்னமும் ஆழமான, விரிவான போராட்டங் களைக்  கோருவதாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி "தமிழக மாணவி களே! என்னை உங்கள் பெற்ற தகப்பனாக நினைத்து இனிமேல் இதுபோன்று உங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள்" என்று  உருக்கமான உரையாற்றிய தமிழக முதல்வருக்கு நாம் விடுக்கும் செய்தியாதெனில், உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை  புகார் கொடுக்க செல்லும் அப்பாவி மக்களை குற்றவாளிகள் ஆக்காமல், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின்முன் நிறுத்தச் சொல்லுங்கள். 'ஜெய்பீம்பார்த்து  நீங்கள் தூக்கமின்றி தவித்தது ஓர் இரவுதான். ஆனால் எண்ணற்ற மக்கள் காவல் துறையின் அத்து மீறல்கள், அராஜகப் போக்குகளால் பல நூறு நாட்கள் தூக்கமின்றித் தவித்துக்கொண்டிருக் கிறார்கள். தமிழக முதல்வராக உங்கள் கீழ் இயங்கும் காவல்துறையை நேர்மையாக இயங்க செய்வதும் இனியும் இதுபோன்ற பாலியல் வன்முறை நடந்திடாதவண்ணம் வருங்கால பெண்ணினத்தை பாதுகாக்கும் நடைமுறைகளை வகுத்திடவும் கோருகிறோம்.  

 கிருஷ்ணவேணி, பிலோமினா