லட்சக் கணக்கான உறுப்பினர் பலம் கொண்ட வெகுமக்கள் அமைப்பாக அவிகிதொசவை வளர்க்க உறுதியேற்போம்!

தேசிய ஊரக வேலைத்திட்டத்தை கொல்லாமல் கொல்லும் மோடி ஆட்சி!

கொரோனா பேரழிவு காலகட்டத்தில் இந்தியப்பொருளாதாரம் மிகமோசமாக பாதிக்கப் பட்டது. பொருளாதாரம் மீண்டு வருகிறது என்று மோடி அரசாங்கம் மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் அது மிகமோசமான தேக்கப்பொருளாதார மாக மாறும் என்று பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். கொரோனாவின் போது பெருமளவு கிராமப்புர பொருளாதாரத்தை கீழேவிழாமல் தடுத்து நிறுத்தியது தேசிய ஊரக வேலைத்திட்டம். இதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2020-&21 ம் ஆண்டுக்கு 27 கோடி மனிதநாட்கள் என இலக்கு முடிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டில், 33 கோடியே 40லட்சம் மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப் பட்டிருக்கிறது. “தென்னிந்தியாவிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்த திட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளதாகதினத்தந்தி ஏடு கூறுகிறது.

ஆனால், 2020-&21 ஆண்டுக்கு இந்தியா முழுவதுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி, ரூ 1லட்சத்து 10 ஆயிரம் கோடி. 11 கோடி கிராமப்புர தொழி லாளருக்கு குறைந்த பட்ச வாழ்வாதாரத்துக்கான நம்பிக்கையை வழங்கியது இந்த திட்டம்தான். ஆனால், மோடி அரசாங்கம் இந்த 2022&-23 ஆண்டுக்கான நிதியை வெறும் 73 லட்சம் கோடியாக குறைத்துவிட்டது. சென்ற ஆண்டு கூலி பாக்கி ரூ 18 ஆயிரத்து 340 கோடி உள்ள நிலையில் மீதமுள்ள ரூ 53,000 கோடியைக் கொண்டு வெறும் 13 முதல் 16 நாட்கள் வரை மட்டுமே வேலை கொடுக்கமுடியுமென்று வேலை உறுதிக்கான மக்கள் செயல்பாட்டுக் குழு கூறுகிறது. தேவையை ஒட்டி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறினாலும் சென்ற ஆண்டின் கதை போலத்தான் இருக்கும். அதாவது, ஒரு வேளை கூடுதலாக நிதி ஒதுக்கினாலும் அதைக் கொண்டு 100 நாள் வேலை இலக்கை எட்டமுடியாது. ஏனெனில் 2020-&21 ஆண்டில் வேலை செய்த கிராமப்புர குடும்பங்களுக்கு (11 கோடி தொழிலாளர்) வேலைவழங்க வேண்டுமாயின் ரூ2.64 லட்சம் கோடி ஒதுக்க வேண்டுமென்று வேலை உறுதிக் கான மக்கள் செயல்பாட்டுக்குழு கூறுகிறது. ரூ 3.64 லட்சம் கோடி ஒதுக்க வேண்டுமென்று நரேகா சங்கார்ஷ் மோர்ச்சா கூறியுள்ளது. இந்த கோரிக்கையை ஒன்றிய அரசுக்கும் இவ்வமைப் புகள் தெரிவித்துள்ளன.

2021 நவம்பரில், ஜெயாதி கோஷ், ஜீன் ட்ரேசே, பிரபாத்பட்நாயக் உள்ளிட்ட 80 பொருளா தார வல்லுநர்களும், கல்வியாளர்களும் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுமென்று மோடிக்கு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதி யிருந்தனர். அந்த கடிதத்தில், நிதி ஒதுக்கீட்டை குறைப்பது வேலைத் தேவையைநசுக்கு வதாகும்என்றும் சுட்டிக் காட்டியிருந்தனர். அதற்குப் பிறகும் மோடி அரசு, 34% அளவுக்கு நிதியை குறைத்திருக்கிறது! அதுமட்டுமல்ல நிதியமைச்சரின் 90 நிமிட பட்ஜட் உரையில் தேசிய வேலை உறுதித் திட்டம் என்ற சொல்லைக்கூட உச்சரிக்கவில்லை. இந்த திட்டம்பற்றி ஒன்றிய அரசு கொண்டுள்ள அணுகுமுறைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை பெருமளவு குறைக்கிறது, பல்லாயிரம் கோடி கூலி பாக்கியை உடனுக்குடன் கொடுக்காமல் வைத்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்ற ஆண்டு, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ 1178 கோடி கூலி பாக்கியை (இது 5கோடி 89 லட்சம் தொழிலாளரது ஒருநாள் கூலி) ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டுமென்று கடிதம் எழுதியிருந்தார். ஒரிசா முதல்வரும் இது போன்றதொரு கடிதத்தை எழுதியிருந்தார். இந்த திட்டத்தை ஒருமாபெரும் தோல்வித்திட்டம்என்று கூறிய மோடி அரசு அதற்கேற்ப  இந்த குளறுபடிகளை செய்து வருகிறது. இதனால், மாநில அரசுகளும் ஊழல்பிடித்த அதிகார வர்க்கமும் கிராமப்புரங்களிலுள்ள ஆதிக்க சக்திகளும் சேர்ந்து பல்வேறு முறைகேடுகள் மூலம் இந்த திட்டத்தை சீர்குலைத்து வருகி றார்கள். சுழல்முறையில் வேலை என்ற பெயரால் மிகக் குறைவான நாள் வழங்கப்படுகிறது. சாதிவாரியாக, வார்டு வாரியாக வேலை வழங்கப்படுகிறது. மொத்தத்தில், 6, 7 நாட்கள் மட்டும் வேலை வழங்கப்பட்ட கிராமங்களும் உள்ளன. தேசிய அளவில் 30 நாட்களுக்கு குறைவாகவே வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றனபோலி யான பெயர்களில் என்எம்ஆர் (தொழிலாளர்) பட்டியல், இறந்தவர் பெயரில் வேலை அட்டை, ஊதியம் வழங்கல் என பல்வேறு முறைகேடுகள் தாண்டவமாடுகின்றன. இந்த திட்டத்தில் ஏழைகள் 17% பேர் வேலை பெறுவதாகவும் வசதிபடைத்தவர்கள் 24% பேர் வேலை பெறுவதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது. மதுரையிலுள்ள பூச்சம்பட்டி கிராமத்தில் இப்படி வசதிபடைத்த மிராசுதார்கள் ஊதியம் பெற்றுள்ளதை அவிகிதொசங்கத்தினர் கண்டு பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இடதுசாரி சக்திகள், ஜனநாயக சக்திகளின் நீண்ட நெடிய போராட்டத்தால் கொண்டு வரப்பட்டது தேசிய ஊரக வேலைத்திட்டம். இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை, படுமோசமான வகையில் செயல்படுத்துவதன் மூலம் அந்த திட்டத்தை கொல்லாமல் கொல்லும் வேலையை மோடி அரசாங்கம் செய்துவருகிறது. அந்த பெருந்திட் டத்துக்கு ஏற்ப ஊழல் அதிகாரத்துவ சக்திகளும் கொள்ளையடித்து சீரழித்து வருகின்றன.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தொழிலாளர் மீது மிக மோசமான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அரசின் கஜானா வீண்டிக்கப்படுகிறது என்பதிலிருந்து தொடங்கி, மரத்துநிழலில் சீட்டாடிக் கொண்டு சம்பளம் வாங்குகின்றனர் என்று மோடியின் குரலில் சீமான் போன்றவர்கள் பேசிவருகிறார்கள். சுழற்சி முறை வேலை என்ற பேரால் தொழிலாளர் ஒன்று சேருவதை தடுத்துவருவது ஒருபுறமென்றால் அவதூறு பிரச்சாரங்கள் மூலம் அவர்களது போராட்ட முயற்சியை கருத்துரீதியாக முறியடிப்பதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. சாதிவாரியாக ஊதியபட்டியல் தயாரிக்கும் முயற்சி மேற்கொண்டு, வலுவான எதிர்ப்பின்காரணமாக பின்வாங்கி விட்டது ஒன்றிய அரசு. ஆனால் எவ்விதமான சட்ட பூர்வமான உத்தரவும் இல்லாமல், தொழிலாளர் வருகையை உறுதிசெய்வது என்ற பேரால் அதிகாலை 6 மணி முதல் 2,3 முறை படம் எடுக்கும் முயற்சிகள் எடுத்து தொழிலாளரை அச்சுறுத்தி இழிவு படுத்துகிற வேலையில் இறங்கி உள்ளது. இந்த நடவடிக்கை தொழிலா ளரை ஆவேசப்படுத்தி யிருக்கிறது. மார்ச் 8, அகில உலக உழைக்கும் பெண்கள் நாளில் கந்தர்வக் கோட்டையில் திரண்ட பெண் தொழி லாளர், போட்டோ எடுக்கும் விஷயத்தில் பேச்சு வார்த்தைக்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை சட்டையைப் பிடித்து இழுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர். இவ்வாறு, மாதக் கணக்கில் ஊதியத்தை வழங்காமல் இழுத்த டிப்பது, தொழிலாளரை ஒன்று சேராமல் பிளவு படுத்துவது, இழிவு படுத்துவது ஆகிய பல வழிகளிலும் இந்த திட்டத்தை உருக்குலைத்து சீரழிக்கிற வேலையில் இறங்கியுள்ளனர். இதில் முதன்மைக் குற்றவாளி ஒன்றிய மோடி அரசாங்கமாகும். ஆண்டு நிதி ஒதுக்கீட்டை கடுமையாக குறைப்பதுதான் மேற்கூறிய சீர்குலைவுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. இதைத்தான் பிரதமருக்கு திறந்த மடல் எழுதிய பொருளாதார அறிஞர்களின் கடிதமும் சுட்டிக் காட்டுகிறது.

உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்துக்கான மாவட்டக் கூட்டங்கள்

இத்தகைய பின்னணியில் மேற்கூறிய பிரச்சனைகள் பற்றி, பிப்ரவரி 1 அன்று தஞ்சையில் கூடிய அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு விரிவாக விவாதித்தது. மேற்கூறிய பிரச்சனைகளை வலுவாக எதிர்கொண்டு முறியடிக்க வலுவான தொழிலாளர் அமைப்பின் அவசியத்தை கூட்டம் சுட்டிக்காட்டியது. வேலைத்திட்ட தொழிலாளர் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்து வதை முறியடிக்க, சட்டத்தில் கூறியுள்ளவாறு திட்டத்தை செயல்படுத்துவதற்கு அழுத்தம் தர பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டுவது அவசியமென்பதை கூட்டம் வலியுறுத்தியது. ஒன்றிய அரசிலிருந்து கீழ்வரையிலும் இந்த திட்டத்தை சீர்குலைக்கும் சக்திகளுக்கெதிராக போராடுவதற்கு, தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர் உரிமைச் சங்கம் என்ற பெயரில் அமைப்பாக்குவது என்றும் கூட்டம் முடிவு செய்தது. பீகார் போன்ற மாநிலங்களில் அமைப்பாக்கப்பட்டுள்ளது போல தமிழ் நாட்டிலும் அமைப்பாக்குவது என்று ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டதை தீவிரமாக செயல்படு வதென்றும் கூட்டம் முடிவு செய்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்ப தென்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் குறைந்தது 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.     

கள்ளக்குரிச்சி மாவட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர் சேர்ப்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து தேசிய ஊரக வேலை உத்திரவாத தொழிலாளர் உரிமை சங்கத்தின் மாநிலம்தழுவிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தீவிரப்படுத்து வதென்று முடிவுசெய்யப்பட்டது. இதற்கேற்ப கடந்த மார்ச் 6 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சங்கம் துவங்கப்பட்டது. மாவட்ட அளவில் கூட்டப்பட்டிருந்த முன்னணிகள் கூட்டத்தில் இகக(மாலெ) மாநிலக் குழு உறுப் பினர்கள் அந்தோணிமுத்து, சுசீலா ஆகியோரும் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் 100 நாள் வேலை குறித்த பிரச்சனைகளை விவாதித்தனர். தோழர் அர்ச்சுனனை மாவட்ட அமைப்பாளராகக் கொண்டு தே..வே.தி.தொ உரிமைச் சங்கம் துவங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 30 ஆயிரம் உறுப்பினர் சேர்க்க திட்டமிடப்பட்டது.

மார்ச் 7 அன்று தென்காசி, செங்கோட்டை, பகுதிகளிலிருந்தும், விருதுநகர் மாவட்டத்தி லிருந்து முன்னணி ஊழியர்கள் கலந்து கொண் டனர். இந்த மாவட்டங்களில் கிராமப்புர விவசாய அரங்க வேலையை துவங்க நல்லதொரு வாய்ப்பாக கூட்டம் இருந்ததாக தோழர்கள் உற்சாகமடைந்தனர். இந்த சங்கத்தில் தென்கா சியில் 10,000 பேரை உறுப்பினராக்கவும், விருதுநகர் மாவட்டத்தில் 10,000 பேரை உறுப்பினராக்கவும் முடிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளராக தோழர் ஆவுடையப்பன் செயல்படவும் கூட்டம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு தனி அமைப்பு கட்டமைப்பை உருவாக்குவதென்றும் கூட்டம் முடிவு செய்தது. இந்த கூட்டத்திற்கான முயற்சியை கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் செய்திருந்தார், கூட்டத்தைத் துவக்கி வைத்து உற்சாகமளிக்கும் வகையில் வாழ்த்திப் பேசினார்.

மார்ச் 8 அன்று தேனி மாவட்டத்தில் முன்னமே துவங்கப்பட்டிருந்த அவிகிதொச சார்பில் வீட்டுமனை கோரியும், 100 நாள் வேலை கோரியும், பஞ்சமி-பூமிதான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலம் கோரும் நூற்றுக்கணக்கான பயனாளிகளின் மனுக்கள் கோட்டாட்சியரிடம் கொடுக்கப் பட்டன. அதன்பின் மாவட்டச் செயலாளர் தோழர் இளையராஜா, அவிகிதொச மாவட்ட பொறுப் பாளர் தேனி தோழர் கோபால், மாவட்டத்தின் பிற பொறுப்பாளர்களைக் கொண்ட கலந்தா லோசனைக் கூட்டம் நடை பெற்றது. மாநில நிர்வாகக் குழுவில் முடிவு செய்த 50 ஆயிரம் உறுப்பினர்கள் இலக்கில் பிப்ரவரி முதல்வாரத் திலேயே ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 49 ஆயிரத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களில் சேர்த்துவிட முடியு மென்று அனைத்து தோழர்களும் நம்பிக்கையுடன் உறுதியளித்தனர்.

திண்டுக்கல்லில் இகக(மாலெ)மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன், அவிகிதொச திண்டுக்கல் மாவட்ட தோழர் எரியோடு முருகேசன் ஆகியரோடு நடந்த சந்திப்பில், மாவட்டத்தில் 10 ஆயிரம் பேரை  சங்கத்தில் உறுப்பினராக்குவது பற்றி பேசப்பட்டது. அடுத்த நாள் நடைபெற்ற மாவட்டக் கூட்டத்தில் 10000 உறுப்பினர் சேர்ப்பதென்றும் முடிவெடுக்கப் பட்டது.

அடுத்த நாள் மார்ச் 9 அன்று மணப்பாறை யில் திருச்சி மாவட்டத் தோழர்கள் கருப்பையா தலைமையில் கூடினர். மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைத்திட்ட பிரச்சனையில் நடந்த போராட்ட அனுபவங்களை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் தேசிகள் கலந்துகொண்டு 100 நாள் வேலைத்திட்ட பிரச்சனை மற்றும் அமைப்பாக்குவது குறித்து விளக்கமாக பேசினர். 20 ஆயிரம் உறுப்பினர் சேர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

மார்ச் 10 அன்று புதுக்கோட்டையில் மாவட்டம் கந்தர்வக் கோட்டையில் அவிகிதொச மாவட்ட ஊழியர் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 8 அகில உலக உழைக்கும் மகளிர் நாளில் ஏராள மான பெண்கள் பங்குபெற்ற 500 பேர்களைக் கொண்ட கிராமப்புர தொழிலாளர் அணிதிரட்டல் ஏற்படுத்திய உற்சாகத்துடன் தோழர்கள் பங்குபெற்றனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வளத்தான், அவிகிதொச மாநிலத் துணைத்தலைவர் தோழர் ரேவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத் தில் 75,000 பேரை சங்கத்தில் அமைப்பாக்க திட்ட மிடப்பட்டது. திட்டமிட்ட இலக்கை அடைய, 2 மாதங்கள்  தொடர் உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு இயக்கத்தை நடத்தி அமைப்பாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் தீவிர பிரச்சாரம், உறுப்பினர் சேர்ப்பு என வேலையை முன்னெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. உறுப்பினர் சேர்ப்பு இயக்க அனுபவங்களை பதிவுசெய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மார்ச் 11 தஞ்சை மாவட்டத்தின் அவிகிதொச மாவட்ட ஊழியர் கூட்டம் கபிஸ்தலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இகக(மாலெ) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கண்ணையன்,அவிகிதொசவின் மாநில செயலாளர் தோழர் தவச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டத்தில் 20 ஆயிரம் பேரை அமைப்பாக் கவும், அந்த வேலையை ஒன்றிய அளவிலான ஊழியர்கள் அமைப்பாக்கி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், உறுப்பினர் சீட்டு அச்சடிக்கும் செலவுக்காக ரூ.1000 சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் என். குணசேகரனி டம் அளிக்கப்பட்டது. கன்யாகுமரி தொடங்கி தஞ்சை வரையிலான அனைத்து மாவட்ட கூட்டங்களிலும் அவிகிதொச மாநிலப் பொதுச் செயலாளர் என். குணசேகரன் கலந்துகொண்டு கூட்டங்களை வழிநடத்தினார்.

கடலூர் மாவட்டத்தில் பிப்ரவரி 13 அன்று மாவட்ட அளவிலான முன்னணிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத்  தலைவர் பாலசுந்தரம் மாநிலச் செயலாளர் ராஜசங்கர் கலந்து கொண்டனர். 20,000 உறுப்பினர் இலக்கு முடிவு செய்யப்பட்டது. உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் தொடங்கி நடந்து வருகிறது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.ராஜசங்கர் தலைமையில் முன்னணி தோழர்கள் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்க உள்ள ஒன்றிய அணிதிரட்டலைத் தொடர்ந்து  உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட் டிருக்கிறது. இலக்கு 30,000.

கள்ளக்குரிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்தின் 500க்கும் மேற்பட்ட அணிதிரட்டல் வெற்றிக ரமாக முடிந்துள்ளது. ஏப்ரலில் உத்தேசி த்துள்ள மாவட்ட அணிதிரட்டலுக்கான வேலை களை ஒட்டி உறுப்பினர் இயக்கத்தை தொடர்வ தென்றும் 30,000 இலக்கை சாத்தியப் படுத்துவ தென்றும் முடிவாகியுள்ளது. இதே போல சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் தேசிய ஊரக வேலைத் திட்ட உரிமைச் சங்க உறுப்பினர் சேர்ப்பை நடத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

நடந்து முடிந்த ஊழியர் கூட்டங்கள் மூலம் இந்த ஆண்டுக்கான 5 இலட்சம் இலக்கில் மூன்று லட்சத்துக்கு அதிகமான உறுப்பினர்களை சேர்க்கமுடியுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளதுகிராமப்புர வேலைகளை முதன்மை கடமையாகக் கொண்டு அவிகிதொசவை வெகுமக்கள் வர்க்க அடித்தளம் கொண்டதாக வளர்த்திடவும், பாசிச மோடி கார்ப்பரேட் ஆட்சிக்கு முடிவுகட்டும் திசையில் இடதுசாரி அரசியலை முன்னெடுத்து செல்லும் வாகனமாக அவிகிதொசவையும் அதனோடு இணைந்த தேஊவேதிஉச வையும் உறுதிப்படுத்திட வேண்டுமென்ற ஊக்கம் பிறந்துள்ளது என்று கூறமுடியும். நமது நீண்டகால முயற்சியான அவிகிதொசவை பல லட்சக் கணக்கான கிராமப்புர தொழிலாளர்களைக் கொண்ட செயல்துடிப்புள்ள வெகு மக்கள் அமைப்பாக உறுதிப்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கை துளிர்ப்பதாக உள்ளது. அவிகிதொசவை ஒரு பலமான மக்கள் அடித்தளம் கொண்டதாக அமையவும் தனக்கே உரிய அரசியல் கடமையாற்றவும் இந்த வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த விரிந்த அளவிலான இரண்டாம் சுற்று  மாவட்ட அளவு பேரவைகள் கூட்டுவதும் அவசியமென்பது உணரப்படுகிறது. இந்த வேலைத் திட்டத்தை தளராது முன்னெடுத்துச் செல்லவும், ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள அவிகிதொச மாநில மாநாட்டின் போது லட்சக்கணக்கான உறுப்பினர் அடித்த கொண்ட தேசிய ஊரக வேலைத் திட்ட உரிமைச் சங்கம் என்ற புதிய அடையாளத்தை அறுதி யிடவும் அடுத் தடுத்த வேலை உறுதிப்பாட்டை கூட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.  & என்.குணசேகரன்