சிப்காட் தொழிற்பேட்டைக்காக, செழிப்பான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தாதே!
திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக, செழிப்பான விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தின் 50ஆவது நாளான பிப்ரவரி 09, 2022 அன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்புறம் நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் மகாசபை (AIKM) ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டது. மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சந்திரமோகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் (AIARLA) மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சிபிஐ-எம்எல் செயலாளர் தோழர் கலியமூர்த்தி மற்றும் கொளஞ்சிநாதன், கோலமுத்து, ராமசாமி, செங்கம் ரமேஷ், பச்சையப்பன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
முதலாளிகளுக்காக விவசாயநிலங்களை சூறையாடதே! விவசாயிகளுக்கான வளர்ச்சி வேண்டும்! என போராட்டத்தில் முழக்கமிட்டார்கள்.