ஜூன் 6: நாடுதழுவிய கோரிக்கை நாள்!
அனைத்து வேளாண் பயிர்களுக்கும் , குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதிப்படுத்தும் சட்டம் இயற்று!
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் மாண்சோர் படுகொலையின் 5வது ஆண்டு நினைவு தினமான ஜூன் 6 அன்று நாடு தழுவிய கோரிக்கை தினமாக அகில இந்திய விவசாயிகள் மகாசபை கடைபிடிக்கிறது.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு,
அனைவருக்கும் உணவு உரிமையை உறுதி செய்வதற்காக- பொது விநியோக முறை PDS விரிவாக்கம் பெற…
அனைத்து பயிர்களுக்கும், குறைந்தபட்ச ஆதார விலை- MSP கோரும் இயக்கம் இப்போது தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
நமது ஏஐகேஎம்- அவிமச அறைகூவல் வெற்றிகரமாக்க, ஜூன் 6 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்திட, மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன்,
சந்திரமோகன்,
மாநில பொதுசெயலாளர்