மரியாதைக்குரிய மாநாட்டு தலைவர் அவர்களே, சக பேச்சாளர்களே, சமூக நீதிக்காகப் போராடும் அனைத்து எனது நண்பர்களே!

இந்திய மக்கள் முன்னால் இருக்கக் கூடிய மிக முக்கியமான இந்த நிகழ்ச்சி நிரலில் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு எங்களை அழைத்ததற்காக எமது சிபிஐ எம் எல் கட்சியின் நன்றியையும் இந்த இரண்டாவது மாநாட்டிற்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜனநாயகத்தில், சமூக நீதி ஒரு முக்கியான பிரதானமான அம்சமாக இருந்து கொண்டிருக்க வேண்டும். அது மக்களுக்கு உத்தரவாதப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக இன்று அந்த சூழல், சமூக நீதி மதிப்புகள் மற்றும் கருத் துக்களுக்கு விரோதமாக எதிராக அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

அதன் காரணமாகவே நம் எல்லாருக்கும் அது எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகத்தை, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க பாசிசத்தின் கோரப் பிடிகளில் இருந்து இந்தியாவை விடுவிக்கவும் பரந்த அணிதிரட்டல் மற்றும் மக்கள் போராட்டங்களுடைய ஒரு மையப் பதாகையாக சமூக நீதியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இன்று, நாம் சமூக நீதியின் மீது பல முனைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதைக் காண்கிறோம். முதலாவதாக, சமூக நீதியின் அடித்தளமான அரசிலமைப்புச் சட்டத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப் படுகிறது. இரண்டாவதாக, பொருளாதாரத் தளத்தில், வளங்கள் மற்றும் மக்கள் மற்றும் மக்கள் உரிமைகளைச் சூறையாடும் கார்ப்பரேட்களின் ஆக்கிரமிப்பு ஆழப்படுவதை நாம் காண்கிறோம். 2014ல் மத்தியில் மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து, கடந்த சில ஆண்டுகளாக, இடஒதுக்கீடானது மிகவும் குறுகிய வகையில் புரிந்து கொள்ளப் படும் நிலையிலும்கூட சமூக நீதி திட்டமிட்டு கீழ்மைப் படுத்தப்படுவது பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். 

ஒரு புறம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு, இது இடஒதுக்கீட்டிற்கான அரசிலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே கீழ்மைப்படுத்துகிறது. இப்போது விஸ்வகர்மா யோஜனாவின் வாயிலாக மக்களை அவர்களின் சாதி அடிப்படையிலான பாரம்பரிய குலத் தொழில்களைச் செய்ய வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆகவே, ஒரே நேரத்தில் பல்வேறு வழிகளில் நாம் போராட வேண்டியதிருக்கும் என்பது நிச்சம். அரசியலமைப்புச் சட்ட முகவுரையானது சமூக, பொருளாதார, அரசியல் என ஒட்டுமொத்தமாக அனைவருக்குமான நீதி பற்றி பேசுகிறது. ஆதலால், சமூக நீதியைப் பலப்படுத்துவதற்கு நமக்கு பொருளாதார நீதி தேவை. நமக்கு அரசியல் நீதி தேவை. அம்பேத்கர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற ஒரு ஒருங்கிணைந்த தொகுப்பிற்கு எப்போதும் அழுத்தம் கொடுத்து வந்தார். சமூக மற்றும் பொருளாதாரத் திலும் சமத்துவம் வேண்டும்.

இன்று நாம் பொருளாதார சமத்துவமின்மை, சமூக சமத்துமின்மை வளர்ந்து கொண்டிருப் பதையும் நம்முடைய குடிமை சுதந்திரங்கள் மற்றும் குடிமக்கள் உரிமைகளும் அரித்துப்போய்க் கொண்டிருப்பதையும் காண்கிறோம். குடிமக்களை மன்னராட்சியின் கீழ் உள்ள மக்கள் என்பதுபோல் சுருக்கி பார்க்கும் போது இயல் பாகவே சமூக நீதியும் குறைத்து மதிப்பிடப் படுகிறது. ஒட்டுமொத்த குடியுரிமைகள் வரம்புக் குள்ளும் ஒட்டுமொத்த அரசியலமைப்பு உரிமைகள் வரம்புக்குள்ளும் நமது போராட்டக் களம் இருக்க வேண்டும். அதன் மூலம் சமூக நீதிக்காக ஒரு நல்ல சூழ்நிலையையும் ஒரு நல்ல அடித்தளத்தையும் உருவாக்க முடியும்.  

நாம் சாதி ரீதியான கணக்கெடுப்பையும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தவும் கோருகிறோம். விரிவுபடுத்தப்பட்ட இடஒதுக்கீட்டின் மூலம், அதாவது இடஒதுக்கீட்டின் எல்லையை அதிகரிப்பதன் மூலம், தனியார் துறைக்கும் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் மூலம் இட ஒதுக்கீடு இன்னும் அர்த்தமுள்ளதாகும். உறுதியான நடவடிக்கை இருந்தாலும் கூட இடஒதுக்கீடு ஒரு வரையறுக்கப்பட்ட தாக்கத் தைதான் ஏற்படுத்துகிறது. அதிகரித்த அளவில் சமூக அசைவும் அதிகரித்த அளவில் மக்கள் உரிமைகள் விரிவாக்கப்படுவதும்தான் தேவை. சமூக நீதிக்கான போரானது சமூக தளத்தில் நடத்தப்பட வேண்டியதை நாம் உறுதி செய்வது மிக முக்கியமானதாகும். பாஜக அல்லாத கட்சிகள், முக்கியமாக சமூகநீதியை, சமூக சமத்துவத்தை, குடிமக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை நோக்கமாகக் கொண்ட கட்சிகள் பரந்த அளவில் ஒன்றிணைவது போரை நிச்சயமாக வலுப்படுத்தும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த முக்கியமான தளத்தில் மாநாட்டினை நடத்தும் அமைப்பாளர்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் செய்தி இந்திய மக்களின் ஒவ்வொரு பிரிவினரிடமும் சென்ற சேரும் என்றும் சமூக நீதிக்கான கனவை நனவாக்க, 21ம் நூற்றாண்டிலும் முடியாட்சி வழிகளுக்கு, மனுஸ்மிருதியின் வழிகளுக்கு இந்தியாவைப் பின்னுக்குத் தள்ள முயற்சிக்கும் பாசிச சக்திகளின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்கும் கனவை நனவாக்க நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்று சேர்ந்து முன்னேறுவோம் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். 

நாம் அனைவரும் விடுதலைப் போராட் டத்தின் மதிப்புகளைப் போற்றியும் உயர்த்திப் பிடித்தும் சமூக மாற்றத்திற்கான இலக்குகள் தான் இந்தக் குறிக்கோளைப் பாதுகாக்கும் என்ற வகையில், அநீதியை, சமத்துவமின்மையை, அழிவுச் சக்திகளைத் தோற்கடித்து இலக்கை அடைவோம். மிக்க நன்றி.