இவ்வாண்டு தோழர் வினோத் மிஸ்ரா மறைந்த 25வது ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கிறோம். நக்சல்பாரிக்குப் பிந்தைய கட்டத் தில், சிபிஐஎம்எல் கட்சியை மறுசீரமைத்திட, விரிவாக்கிட, பலப் படுத்திட அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை நாம் நினைவுகூருகிறபோது, என்றென்றும் உத்வேகமூட்டும் அவரது புரட்சிகர மரபுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறபோது, இந்திய அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதலை முறியடிக்க வேண்டிய மைய சவாலின் பின்னணியில், அவரது உள்ளார்ந்த, மையமான கருத்துக்களையும் பங்களிப்புகளையும் குறித்த ஒரு மறுபார்வை என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

28 ஜூலை 1974 அன்று, தோழர் சாரு மஜூம்தார் தியாகியான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சி மத்திய கமிட்டி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, நாடு முழுவதும் மிகப்பெரும் பின்னடைவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தது சிபிஐஎம்எல் கட்சி. புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியின் மத்திய தலைவர்கள், கிட்டத்தட்ட அனைவரும், அரசால் கொல்லப் பட்டிருந்தனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆயிரக்கணக்கான கட்சி செயல்வீரர்கள் மரணத்தைத் தழுவி தியாகிகளாகி இருந்தனர் அல்லது மிகக்கடும் ஒடுக்குமுறையைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் பிறந்து, தவழ்ந்து கொண்டிருந்த கட்சி அமைப்பு அவ்வளவு பெரிய ஒடுக்குமுறையை, குழப்பங்களை, சோர்வடையச் செய்யும் சூழலை எதிர்கொள்ளத் தக்கதாக இருக்கவில்லை. இயக்கமும் அமைப்பும் பிளவுண்டு போவது வழக்கமாகியது. இத்தகைய மிகக்கடும் சவால் மிக்க சூழலில்தான், 29 நவம்பர் 1975ல் தோழர் ஜாகர் தியாகியான பிறகு, கட்சிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றார் தோழர் வினோத் மிஸ்ரா(விஎம்).

1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்ட எழுச்சியின் மத்தியில், பலதரப்பட்ட, துடிப்புமிக்க வெகுமக்கள் முன்முயற்சிகளுக்கு மத்தியில், கட்சியை மீட்டெடுப் பதற்கும் விரிவாக்குவதற்கும் இட்டுச்சென்ற மூல காரணிகள் அல்லது கருத்துக்கள் என்னவாக இருந்தன? மார்க்சியம் லெனினியத்தையும் மாவோ படைப்புகளையும் அக்கறையுடன் படிப்பது, ஆழமான சமூக ஆய்வுகள், பகுப்பாய்வுகள், புரட்சிகர சமூக மாற்றப் பார்வை மற்றும் நிலைப்பாட்டுடன் இந்திய அரசியலில் விமர்சனப்பூர்வமாக ஊடாடுவது ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புரட்சிகர செயல்தந்திர வழியை வளர்த்தெடுத்தது, கடந்த காலம் பற்றிய இயங்கியல் ரீதியான மதிப்பீடு ஆகிய இந்த இரண்டு முக்கிய காரணிகள்தான் கட்சியை வளர்ச்சிப் பாதையில் உந்தித் தள்ளியது. இந்தப் பாதையின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் தோழர் விஎம் ஆழ்ந்த கவனம் செலுத்தினார்.இயங்காற்றல் மிக்க சூழ்நிலையின் தேவைகளுக்கு செவிசாய்க்கும் விதத்தில் துணிச்சலான அரசியல் முன்முயற்சிகளை அடி மேல் அடியாக தொடர்ந்து எடுத்து வைத்தது கட்சி.

நக்சல்பாரி எழுச்சி என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு மிகப்பெரும் மைல்கல் மட்டுமல்ல, அது நவீன இந்தியாவிற்கான ஒரு மாபெரும் திருப்புமுனையாகவும் இருந்தது. நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து, உடனடியாக, மின்னல் வேகத்தில் சிபிஐஎம்எல் கட்சி வடிவம் பெற்றதும், தனது இறக்கைகளை நாடு முழுவதும் பரப்பியதும், இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான தலித் ஆதிவாசி கிராமப்புற ஏழை மக்கள் மத்தியில் மட்டுமல்ல, படித்த நகர்ப்புற இளைஞர்கள், அறிவாளிகள் மத்தியிலும் அது மாபெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியதும் அதன் தாக்கத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. சுதந்திர இந்தியாவில் நடந்த, ஒரு புரட்சிகர மாற்றத்திற்கான முதல், மிகப்பெரும் வெகுமக்கள் எழுச்சியாக அது அமைந்தது. அப்போது நிகழ்ந்த மிகமோசமான ஒடுக்குமுறையும் பின்னடைவும், ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு தவறான போக்குகளைத் தோற்றுவித்தது. தவறுகளைச் சீர்செய்வது என்ற பெயரில் அந்த மக்கள் எழுச்சியில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வது, அதோடு இருந்த தொடர்பை உதறித் தள்ளுவது, அவதூறு பரப்புவது என்பதாக ஒரு போக்கு துவங்கியது. மற்றொரு போக்கு, நக்சல்பாரி காலத்தின் போராட்ட வடிவங்களையும் முழக்கங் களையும் நிரந்தரமானதாகவும், இறுதியானதாகவும் அவற்றைப் போர்த்தந்திர மட்டத்திற்கு உயர்த்தி, ஒரு தற்காப்பு அணுகுமுறையை மேற்கொண்டது.

தோழர் வினோத் மிஸ்ரா தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட சிபிஐஎம்எல், தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வது, மாறிய நிலைமைகள், சூழல் களில் நக்சல்பாரியின் உணர்வையும் படிப்பினை களையும் முன்னெடுத்துச் செல்வது எனும் இயங்கி யல் அணுகுமுறையை மேற்கொண்டது. ஒரு குறிப் பிட்ட வரலாற்றுக் கட்டத்தின் பின்னணியில் நக்சல்பாரியைக் காண்பதில் வெற்றி கண்டவு டனேயே, போர்த்தந்திரப் பார்வை, பாதையிலிருந்து செயல்தந்திரப் பிரச்சனைகளை விடுவிக்கும் சவாலைத் தீர்க்கத் துவங்குவது நம்மால் முடிந்தது. இவ்வாறுதான் எச்சரிக்கையாகவும் அதே நேரத்தில் துணிச்சலாகவும் நம்பிக்கையோடும் நம்பிக்கையோடும் தனது அடிகளை எடுத்துவைத்து, நக்சல்பாரியின் புரட்சிகர உணர்வை ஊட்டி, வெகுமக்கள் முன்முயற்சி எனும் பரந்த அரங்கிற்கு தனது கால்களைப் பரப்பி, கட்சி முன்னேறிச் சென்றது. வெகுமக்களோடு நெருக்கமாக உறவு கொண்டு, அவர்களது நலன்களை உயர்த்திப்பிடிப்பதையே கட்சியின் உச்சபட்ச கடமையாகக் கொள்ள வேண்டும், அதன் மூலம் கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும் என்ற தோழர் சாரு மஜூம்தாரின் கடைசி வார்த்தைகள், கட்சியை மீட்டெடுக்கும், மறுசீரமைக்கும் இயக்கப் போக்கிற்கு மிகப்பெரும் விதத்தில் உதவியது.

பொருளாதாரவாதத்தை மறுதலிப்பதன், அரசியலை ஆணையில் வைப்பதன் உருண்டு திரண்டதோர் வடிவமாக, நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியைத் தொடர்ந்து உருவான சிபிஐஎம்எல் திகழ்ந்தது. உடனடி கோரிக்கைகள் பெரும்பாலும் பொருளாதார கோரிக்கைகள் வெகுமக்கள் போராட் டங்களை வளர்த்தெடுத்திட எப்போதுமே கேந்திர மானவை. ஆனால், மனிதச் சுரண்டலை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட கம்யூனிஸ்ட் அரசியல், முதலாளித்துவ அமைப்புமுறையை மாற்றியமைப் பது எனும் பரந்த நோக்க்த்தைச் சாதித்திட, போராட்ட சக்திகளை அணிதிரட்டுவது, அவற்றின் நோக்கமாக அதை மாற்றிடுவது எனும் அரசியல் கருத்தியல் சவாலோடு, வெகுமக்கள் மத்தியிலான வேலைகளை இணைத்திட வேண்டும். இங்குதான், தற்கால கடமைகளோடு எதிர்கால லட்சியத்தை இணைப்பது என்கிற மாபெரும் சவால் முன்னிற்கிறது. மறுசீரமைக் கப்பட்ட சிபிஐஎம்எல், மக்களை அவர்களது உடனடி கோரிக்கைகள் மீது அணிதிரட்டுவது என்பதற்குக் கவனம் செலுத்தும் அதே வேளையில், உடனடி கோரிக்கைகளையும் உள்ளூர் போராட்டங்களையும் ஒரு ஜனநாயக மாற்றணி என்கிற தேசியப் பார்வை யோடு இணைத்திட சிறப்பு கவனம் செலுத்தியது. அது இந்திய மக்கள் முன்னணி என்கிற ஒரு அகில இந்திய புரட்சிகர ஜனநாயக மேடை உதிப்பதற்கு இட்டுச் சென்றது.

ஒரு புரட்சிகர ஜனநாயகப் பார்வையைக் கொண்ட, துணிச்சலான, தொடர் முன்முயற்சிகளைக் கட்டவிழ்த்துவிடுகிற ஒரு அகில இந்திய அரசியல் மேடையின் உதயம், உள்ளூர்மட்ட வெகுமக்கள் செயலூக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத் தையும் ஒரு புதிய உத்வேகத்தையும் வழங்கியது. ஒரு அகில இந்திய அரசியல் உந்துதல் என்பது, பொதுவான போக்கான உள்ளூர் வாதத்திற்கு எதிரான உள்ளார்ந்ததோர் எதிர்வினையாகவும் பொருளாதார வாதத்தைக் கட்டுக்குள் வைத்திடவும் அரசியலை ஆணையில் வைத்திடவும் உதவுவதாக அமைந்தது.1980களின் பிற்பாதியில் தேர்தலில் போட்டியிட இந்திய மக்கள் முன்னணி தீர்மானித்த போது,நிலப்பிரபுத்துவ சக்திகள் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவதற்கு எதிராகப் போராடி, ஒடுக்கப்பட்ட வறிய மக்களின் வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பதற்கான கசப்பான போராட்டமாக அது மாறியது. தேர்தல் புறக்கணிப் பிலிருந்து தேர்தல் பங்கெடுப்பு வரையிலான அந்த மாறிச்செல்லும் கட்டம் என்பது ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் தேர்தல் அறுதியிடலின் தீர்மானகரமான யுத்தமாக பொருள் பெற்றது. பீகார் போன்ற மாநிலத்தில் அது மிகப்பெரும் நிலப் பிரபுத்துவ எதிர்த்தாக்குதலை (backlash) எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. தனியார் படைகளின் தொடர் படுகொலைகள், தலைவர்கள், செயல் வீரர்கள் கொலை செய்யப்படுவது, கட்சி அமைப் பாளர்களை பொய் வழக்குப் புனைந்து துன்புறுத்து வது, நீடித்த சிறைத் தண்டனைக்கு அவர்களை ஆளாக்குவது என புரட்சிகர இயக்கத்தின் முன்னேற் றத்தை, தேர்தல் அறுதியிடலைத் தடுத்து நிறுத்து வதற்கான அனைத்தும் தழுவிய முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன.

தோழர் வினோத் மிஸ்ரா தலைமையிலான சிபிஐஎம்எல், எண்ணற்ற சிரமங்களுக்கு மத்தி யிலும், அத்தகைய சவால்கள் அனைத்தையும் துணிச்சலோடும் உறுதியோடும் தாக்குப்பிடித்து நின்றது, புரட்சிகர ஜனநாயகப் பதாகையை உயர்த்திப் பிடித்தது. போர்க்குணமிக்க நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு மக்கள் போராட்டங்களின் ஆற்றலும் சமூக நீதி, சமூக மாற்றத்திற்கான பலதரப் பட்ட ஜனநாயக முன்முயற்சிகளும்தான், எதிர்மறை யான நிலைமைகளுக்கு மத்தியிலும், நிலப் பிரபுத்துவ கிரிமினல் சக்திகளின் ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு மத்தியிலும், கட்சியைத் தாக்குப் பிடித்து நிற்கச் செய்தன, கட்சியை வலுப்படுத்தின. ஆனால், 1980களின் பிற்பகுதியில், 1990களின் துவக்கத்தில், அன்றைய மத்திய பீகாரில் (மாநிலம் பிரிக்கப்பட்டதற்குப் பிறகு தெற்கு பீகார் என அழைக்கப்படுகிறது) தேர்தலில் கட்சியின் உதயம், நிலப்பிரபுத்துவ எதிர்வினையையும் கூட வலுப் படுத்தியது எனலாம். ராமர் கோவில் இயக்கத்தின் மீது சவாரி செய்த இந்துத்துவா பட்டாளத்தின் வளர்ச்சி பீகாரில் தெட்டத்தெளிவானதோர் மாற்றத்தைக் கொண்டு வந்தது. போராடும் கிராமப்புற வறியவர்களுக்கு எதிரான, அவர்களின் கட்சி சிபிஐஎம்எல்லுக்கு எதிரான நிலப்பிரபுத்துவ வன்முறை, நச்சு கலந்த பாசிச கூறுகளைப் பெறத் துவங்கின. ரன்வீர் சேனா நடத்திய, அபகீர்த்தி பெற்ற,முதல் பெரும் படுகொலையான, போஜ்பூரின் பதானிதோலா படுகொலைக்குப் பிறகு, ரன்வீர் சேனாவின் அணுகுமுறையில் திட்டவட்டமான மதவெறி இழையோடுவதை தோழர் விஎம் கண்ட றிந்தார். உண்மையில், பதானிதோலாவில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறை, 2002ல் குஜராத்தில் நாம் கண்ட கோரப்படுகொலை வெறியாட்டத்திற்கான ஒரு முன்னோடியே எனலாம்.

அத்வானியின் ரத யாத்திரை முதல் அதன் இறுதி நிறைவாக 6 டிசம்பர் 1992ல் அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது வரை, அவை அனைத்திலும் கட்டமைக்கப்பட்டவிதத்தில் குடிகொண்டிருந்த பாசிசக் கூறுகள் குறித்து தோழர் விஎம் மிகத்தெளிவாக இருந்தார். அதை அவர் மத அடிப்படைவாதத்திற்கும் அல்லது மத வெறிக்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான மோதலாகக் காணவில்லை. மாறாக, அதை மதவெறி பாசிசத் திற்கும் அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்துக்கும் இடையிலான தெட்டத் தெளிவான யுத்தமாக அவர் கண்டார். ஜனநாயகத்துக்கு எதிரான அச்சுறுத்தல், அதற்கு அக்கம்பக்கமாகவே எழுந்த இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கத்தின் காரணமாக, தீவிரமடையத் துவங்கியது. அதிகரித்து வரும் இந்த அபாயம் குறித்து தோழர் விஎம் நெருக்கமாக கவனித்து வந்தார். இந்தப் புதிய, சவால்மிக்க கட்டத்தை எதிர்கொள்ளத் தக்கதாக கட்சியைத் தயார் செய்திடவும், கூருணர்வு பெற்றதாக்கிடவும் தன்னலான அனைத்தையும் செய்தார் தோழர் விஎம். மத்தியில் மோடி அரசாங்கத்தின் இந்தப் பத்தாவது ஆண்டில், 1990களின் பிற்பகுதியில் குறுகிய காலமே ஆட்சியிலிருந்த, அடல் பிகாரி வாஜ்பேயின் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தைத் திருப்பிப் பார்க்கிறபோது, அது மிகமிக மென்மை யானதாக காணப்படலாம். பல அரசியல் நோக்கர் களும் கூட, திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட்ட வாஜ்பேயின் மென்மையான தோற்றத்தைக் கண்டு திசைதிருப்பி விட்டனர். ஆனால், தோழர் விஎம், எதிர்காலத்தில் வரவிருக்கும் விசயங்களின் வடிவம் குறித்து முன்னதாகவே தொடர்ந்து எச்சரித்து வந்தார். தோழர் விஎம் தனது கடைசி நாட்களில், இந்தியாவில் பாசிச எதிர்ப்பு அரசியல் பரப்புரை இயக்கத்தைக்கட்டி எழுப்பிடுவதற்குத் தன் முழு கவனத்தையும் செலுத்தினார்.

தோழர் விஎம்மைப் பொறுத்தளவில், ஜனநாயகத்தின் மீதான கவனம் என்பது ஒருபோதும்,தற்போது நிலவும் அமைப்புமுறையோடு சமரசம்செய்து கொள்வது குறித்தது அல்ல, மாறாக, அது சமூக, அரசியல் மாற்றத்தின் அத்தியாவசியமான உட்கூறு ஆகும். 1980களின் பிற்பகுதி முதல் சோவியத் மாதிரி சோசலிசத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பெறப்பட்ட முக்கிய படிப்பினைகள் குறித்து வலியுறுத்தி வந்தார் தோழர் விஎம். சோசலிச பொருளாதார இயங்காற்றல் மற்றும் அதிக பங்கேற் புடைய ஜனநாயகத்தின் மூலம் சோசலிசத்தை மீளுருவாக்கம் செய்திடும் சவாலை நோக்கி நம் கவனத்தைத் திருப்பினார். சோவியத் யூனியன் வீழ்ச்சி மற்றும் தகர்வு, உலகில் ஒரு துருவ நிலையை உருவாக்கியது, அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தத் தருணத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண் டது. 1990-91 வளைகுடா யுத்தம் முதல், முஸ்லீம் விரோத சவடால்களால் குறிக்கப்பட்ட, "நாகரீகங் களின் மோதல்" என்பதாக அழைக்கப்பட்ட, தன் தலைமையிலான ஒரு புதிய மேற்கத்திய கூட்ட ணியை அமெரிக்கா உருவாக்கியது. அதுவே பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலக யுத்தமாக பரிணாமம் பெற்றது. இந்தக் கூட்டணி தான், இன்று இஸ்ரேலால் காஸாவின் மீது தொடுக்கப் பட்டிருக்கும் இனப்படுகொலை யுத்தத்திற்கு ஆதரவு அஸ்திவாரமாக இருக்கும், மிகச் சமீபத்திய, தீவிர வலதுசாரி உலகக் கூட்டணியுடன் ஒன்றுகலந்து இருக்கிறது.

சோவியத் முகாமின் மறைவு, உலக முதலாளித் துவத்தின் மூர்க்கத்தனமான விரிவாக்கம் என்பதாக, தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலக மயமாக்கத்தின் ஒருங்கிணைந்த தாக்குதலாக பொரு ளாகியது. இந்த விரிவாக்கத்தினுள், மிக ஆழமான நெருக்கடியின், புதிய முரண்பாடுகளின் வித்துக்கள் புதைந்திருப்பதை தோழர் விஎம் கண்டார். கடந்த இருபது ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் சந்தித்து வரும் பன்முகப்பட்ட நெருக்கடிகள், அதனோடு பருவநிலை மாற்றத்தால் உருவாக்கப் பட்ட பேரழிவும் இணைந்திருப்பது அவரது கருத்து சரியென நிரூபித்திருக்கிறது. இது தாராளவாத ஜனநாயகமும் சேமநல அரசும் புதியதோர் நெருக் கடிக்கு ஆளாவதற்கு, பாசிசம் உலக அளவில் புத்துயிர் பெறுவதற்கு இட்டுச்சென்று இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட 150வது ஆண்டில் அதைப் பற்றி எழுதும் போது தோழர் விஎம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மிகச் சிறந்த வடிவங்களின் எல்லைகளையும் தாண்டிச்செல்லக் கூடியதாக, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் வடிவங்களைக் கண்டறிய வேண்டிய சவாலை வலியுறுத்தினார். அதன் மூலம் எதிர்காலத்தில் முதலாளித்துவத்தின் தோல்வி என்பது சோசலிசத் தின் வெற்றியாக மட்டுமல்ல, ஜனநாயகத்தின் வெற்றியாகவும் காணப்பட வேண்டும் என்றார்.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை நிறை வேற்றும் தருணத்தில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தும் தருணத்தில், புதிய அமைப்பு முறையின் முரண்பாடுகள் மற்றும் எல்லைகள் பற்றி பாபாசாகேப் அம்பேத்கர் நம்மை எச்சரித்தார். அதாவது, வெறும் வாக்குரிமை சமத்துவத்திற்கும் ஆழமாக வேரூன்றியிருக்கும் சமூக பொருளாதார சமத்துவமின்மைக்கும் இடையிலான முரண்பாடு குறித்து, இந்தியாவின் பாரம்பரியமான, ஜனநாயக மற்ற மண்ணுக்கும் மேலிருந்து அரசமைப்புச் சட்டத்தின் மூலம் மேலாடை அணிவிக்கப்பட்ட ஜனநாயகத்திற்கும் இடையிலான மோதல் குறித்து அவர் எச்சரித்தார். அவரவருக்கே உரிய பின்புலத் தில், முற்போக்கு ஜனநாயகவாதியான அம்பேதக்ரும் புரட்சிகர கம்யூனிஸ்டான வினோத் மிஸ்ராவும் இந்திய சமுதாயத்திலும் அரசியலிலும் நிலவும் அதே முரண்பாடுகளையும் குறைபாடுகளையும் கையாள (addressed) முயற்சித்தனர். ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை விரிவாக்கிடவும் அறுதியிடலை மேம்படுத்துவதற்குமான வழிகளைக் கண்டறிய முயற்சித்தனர். சோசலிச பொருளாதாரத் தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் ஒருங்கி ணைந்ததாக மாற்றிட முடியுமென அம்பேத்கர் துவக்கத்தில் நம்பினார். சோசலிசத்திற்கு ஒரு நாடாளுமன்றப் பாதையைக் கண்டறிவது குறித்த எந்தவொரு மாயையும் வினோத் மிஸ்ராவுக்கு கிடையாது என்றாலும் இந்திய மக்களின் முன்னோக் கிய அணிவகுப்பை மேலும் முன் கொண்டு சென்றிட, தற்போது எப்படிப்பட்ட ஜனநாயகம் நிலவுகிறதோ அதன் ஆற்றலைப் பயன்படுத்துவது விரிவுபடுத்து வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஒரு புதிய அரசமைப்புச் சட்டம் குறித்து வளர்ந்துவரும் கவர்ச்சி அல்லது நிலவுகிற அரசமைப்புச் சட்டத்தை, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவன கட்ட மைப்பை, எப்படியாவது ஒழித்துவிடுவது என்கிற விதத்திலான மிகக்கடும் பாசிசத் தாக்குதலை இன்று இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் எதிர்கொண் டிருக்கும் போது, பாசிசத்தைத் தோற்கடிப்பதற்கான,ஒரு உறுதியான ஜனநாயக எதிர்காலத்தை எட்டுவதற்கான இந்தியாவின் யுத்தத்தில் தோழர் விஎம்மின் கருத்துக்களும் பங்களிப்புகளும் நமக்கு எப்போதும் உத்வேக மூட்டும் வழிகாட்டியாக இருக்கும்.