மோடி 2.0வின் இறுதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பிப்ரவரி 10 அன்று முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு தன்னைத் தானே பாராட்டிக் கொண்ட தீர்மானத்தை இந்த அரசாட்சி நிறைவேற்றியது. உத்தரபிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசாங்கமும் கோவிலை கட்டியதற்கு மோடி, யோகி இருவரையும் பாராட்டி இதே போன்றதொரு தீர்மானத்தை பிப்ரவரி 5 அன்று உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றி உள்ளது. யோகி ஆதித்யநாத் அயோத்திக்கான பெருமைக்கு உரிமை கொண்டாடு வதோடு நிச்சயமாக நின்றுவிடப் போவதில்லை. அவருடைய அரசாங்கத்திற்கு தற்போது நீதிமன்றத்திடம் இருந்து கிடைக்கும் ஆதரவுடன் அடுத்த சங்கிப் போராட்டக் களமாக காசி, மதுராவின் மீது தனது கவனத்தைக் குவித்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர் களுக்கு அய்ந்து கிராமங்களை கிருஷ்ணன் கோரிய தோடு ஒப்பிட்டு, தான் மூன்று இடங்களை மட்டுமே கோருவதாக கூறுகிறார்! ஒவ்வொரு சர்ச்சைக்குரிய வழிபாட்டு இடங்கள் குறித்தும் சங்கிபாஜகவின் உரிமைகோரலை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது மகாபாரதம் போன்ற ஒரு மெய்யான போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மூன்று இடங்கள் மட்டுமே என்ற பெயரில் மக்களுக்கு அரசு விடும் எச்சரிக்கை இதுவாகும்.
இந்தத் தீர்மானங்களையும் தன்பாராட்டுக் கூச்சல்களையும் நிச்சயமாக களத்தில் இருந்து வரும் நிகழ்வுகளுடனும் சமிக்ஞைகளுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும். உத்தரகண்ட் சட்டமன்றம் பொது சிவில் சட்டம் என்னும் பெயரில் மிக மிகக் கொடுமையான, பிற்போக்கான சட்டத்தை தற்போது தான் நிறைவேற்றியுள்ளது. வர இருக்கும் தேர்தல் களுக்கு முன்னதாக பாகுபாடான குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அமித்ஷா அறிவித்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறை தடைகளுக்கும் பாதுகாப்புகளுக்கும் கொஞ்சமும் மதிப்பளிக்காமல் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றன்பின் ஒன்றாக முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், மசூதிகள், பள்ளிகள் புல்டோசர் களால் தொடர்ந்து இடித்து தரைமட்டமாக்கப் படுகின்றன. மேலும் உள்துறை அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படும் டெல்லி காவல்துறை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அனேக பாரம்பரிய நினைவுச்சின்னங்களை சட்ட விரோதமாக அழித்துக் கொண்டு வருகிறது. உத்தர்கண்டில் உள்ள ஹால்த்வானியில் இத்தகைய இடிப்பு நடவடிக் கைகள் மக்களின் கோபாவேசம் வெடித்துக் கிளம்ப வழிவகுத்தது. ஆக தற்போது மக்களின் இந்த கோபாவேசத்தை சாக்குபோக்காக கொண்டு இந்த அரசாங்கம் கண்மூடித்தனமான பயங்கர நடவடிக்கைகளையும் அடக்குமுறைகளையும் கட்ட விழ்த்து விட்டுள்ளது. கியான்வாபி மசூதியில் பூஜை செய்வதற்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்த ஆணைக்கு எதிராக 'சிறைகளை நிரப்புவோம்' என்ற அழைப்பிற்கு எதிர்வினையாக காவல்துறையினரின் அடக்குமுறையினைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரசின் உள்ளுர் தலைவர்களால் பரவலான கிராமப்புற பெண்கள் பாலியல் துன்புறுத் தலுக்கு ஆளாக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த செய்திகளில் மேற்கு வங்கத்தின் சந்தேஸ்காளி தற்போது சிக்கிக்கொண்டுள்ளது. அதனை இந்துப்பெண்கள் அதிகாரமிக்க முஸ்லிம் ஆண்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வாக முன்வைப்பதன் மூலம் அதற்கு மதவாத வண்ணம் பூசுவதற்கான முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபடுகிறது. வெகுவாக கோபத்தை தூண்டிவிடும் வகையில் ஊடகத்தினருடன் உரையாடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மத்திய அமைச்சர், மேற்கு வங்கத்தில் இந்துக்களின் மீது படுகொலை நடத்தப் படுகிறது என்று குற்றம் சாட்டினார். அறிகுறிகள் மிகத் தெளிவாகவே உள்ளன: மோடியின் 'உத்தரவாதங்கள்' எனப்படுபவை அதிகரித்த அளவிலான வெற்றுரை களாக மாறிவிட்டன. பாஜகவால் அதிகளவில் சோதிக்கப் பட்ட, நம்பகமான தேர்தல் செயல் திட்டமாக மதவெறி துருவச் சேர்க்கையும் வன்முறையும் திகழ்கிறது. மற்றுமொரு சுற்றுக்கு அத்தகைய நிகழ்வுகளை நோக்கி இந்த நாட்டை தள்ளிவிட பாஜக தீவிர முயற்சியில் ஈடுபடுகிறது.
எதிர்கட்சிகளின் மீதான இடைவிடாத தாக்குதல், பாஜக தேர்தல் செயல்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக திகழ்கிறது. இருப்பினும் 2024 தேர்தல் களுக்கு முன்பாக பீகாரிலும் ஜார்கண்டிலும் அதிகாரத்தைக் கைப்பற்ற அந்தக் கட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் முழுப்பலனையும் தரவில்லை. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு பிறகும் கூட, காங்கிரஸ், இகக(மாலெ), ஆர்ஜேடி ஆதரவுடன் ஜேஎம்எம்இன் மூத்த தலைவர் சம்பை சோரன் அவர்களை புதிய முதல்வராக தேர்ந்தெடுத்ததன் மூலம், தன்னுடைய அரசாங்கத்தை தக்க வைப்பதில் ஜேஎம்எம் வெற்றி பெற்றது. பீகாரில் பரவலாகக் கண்டிக்கப்பட்ட நிதிஷ்குமாரின் அரசியல் அந்தர் பல்டி இருந்தபோதும், சட்டமன்ற அவையில் பெரும் பான்மையை நிரூபிக்க பாஜக மிகவும் தடுமாறியது. மாபெரும் அரசியல் சித்துவிளையாட்டுகள், நிர்வாக மோசடிகள், மூன்று ஆர்ஜேடி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி என்டிஏ முகாமுக்கு தாவச் செய்திட காவல் துறையினரின் தலையீடுகள் என்பவை மூலம் நிதிஷ்குமார் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கப்பட்டது.
ஈடி, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற மத்திய நிறுவனங்களை ஆயுதமயமாக்கிய பின்பு, மோடி அரசாங்கம் இந்தியாவின் உயர்ந்த பெருமைக்குரிய விருதான பாரத் ரத்னாவை அரசியல் கொடுக்கல் வாங்கலுக்கு ஒரு கருவியாக தற்போது மாற்றியுள்ளது. நிதிஷ்குமாரின் அந்தர் பல்டியை மறைப்பதற்கான வசதியான திரையாக கற்பூரி தாக்கூர்ருக்கு வழங்கப்பட்டுள்ள பாரத் ரத்னா பயன்படுத்தப் பட்டுள்ளது. அதேபோல முன்னாள் பிரதம மந்திரியும் மாபெரும் விவசாயிகள் தலைவருமான சவுத்ரி சரண் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா, சரண் சிங்கின் பேரனும் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரியுடன் ஒப்பந்தத்தை எட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களை திருப்தி படுத்துவதற்காக அத்வானி, நரசிம்ம ராவ் ஆகியோருக்கு இந்த பெருமை வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு செலவுக்கு மேலாக 50 சதவீத அளவை கூடுதலாக வைத்து லாபகரமான ஆதரவு விலை வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்ததற்காக விவசாயிகளிடையே பரவலாக அறியப்பட்ட வேளாண் அறிவியலாளர் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கும் கூட பாரத் ரத்னா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளையில் அவர்களுடைய கோரிக்கைகளை எழுப்புவதற்காக டெல்லிக்கு வருகை தரும் விவசாயி களுக்கு தடுப்பரண்களையும் ஒடுக்குமுறை களையும் இந்த அரசாங்கம் பரிசாக வழங்குகிறது.
உண்மையிலேயே இந்த நாடாளுமன்ற அமர்வின்அறிவிக்கப்பட்ட முதன்மையாக நோக்கம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகத்தான்.மக்களவைத் தேர்தல்களுக்கு பிறகு முழுமையான நிதிநிலை அறிக்கை கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டது. சமூக நலனும் பொது சேவைக்கான செலவினங்களும் குறைந்துகொண்டே போகிற போக்கையும் பணக்காரர்களுக்கு பரிசளிக்க ஏழைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தையும் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை மறுஉறுதி செய்துள்ளது. தற்போதைய துயரத்தின் நிலையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பல ஆண்டுகளுக்கு முன்பாக 2014 லிலேயே அதிகாரத்திலிருந்து வெளியேறிவிட்ட யுபிஏ அரசாங்கத்தின் தவறான பொருளாதார மேலாண்மை குறித்த 'வெள்ளை அறிக்கை'யை நிதியமைச்சர் முன் வைத்தார்! தற்போதைய நெருக்கடி களுக்கு பதிலையும் பொறுப்புணர்வையும் கோரினால், கடந்த காலம் குறித்து அல்லது 2047இல் இந்தியாவை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம் என்ற வெற்று கூற்றுகளுடன் மக்களை திசை திருப்புகிற முயற்சியே இதுவாகும். இந்திய மக்கள் இந்த பொய்யான கூற்றுகளையும் வெற்று வாக்குறுதி களையும் போதுமான அளவு கேட்டுவிட்டார்கள். உயர பறக்கும் விலைவாசி, வீழ்ச்சி அடையும் வருமானம், மாயமாக மறைந்து போகும் வேலைகள் இவையே பற்றி எரியும் பிரச்சனைகளாகும். இவையே பெரும்பாலான இந்தியர்களை பயங்கரமான பொருளாதார நெருக் கடியில் தள்ளியுள்ளது. பரப்புரையின் பெரும் கூச்சல்களால் ஏமாற்றுகிற இந்த அரசாங்கத்தை மறுத்தும், எப்போதும் அதிகரித்துக் கொண்டே போகும் வெறுப்புணர்வு கூச்சல்களை மீறியும், ஒருசில எதிர்க்கட்சிகளாலும், அவற்றின் ஒரு பிரிவு தலைவர்களாலும் மேற்கொள்ளப்படுகிற அரசியல் துரோகத்தை தாண்டியும் அவர்களுடைய கோரிக்கைகள் மீது உறுதியாக நிற்கும் மக்களை பார்க்கும் போது மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது. ஆலைகளிலும் கிராமப்புறங்களிலும் பிப்ரவரி 16 அன்று வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்களும் தொழிற் சங்கங்களும் இணைந்து விடுத்திருக்கிற அழைப்பு; தரமான கல்வி, பாதுகாப்பான வேலை ஆகியவற்றுக்காக அதிகரித்த அளவில் அணிதிரள்கிற இளையோர் இந்தியா; பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற அரசாங்க ஊழியர்கள்; சாதிவாரி கணக்கெடுப்புக்கும் திறன்மிக்க விரிவாக்கப் பட்ட இட ஒதுக்கீட்டுக்குமான கோரிக்கை; இந்த இயக்கங்களை களத்தில் வலுமிக்கவையாக ஆக்குவதன் மூலம் மக்களுடைய செயல்திட்டங்களை 2024 தேர்தல் களுக்கான செயல்திட்டமாக அமைத்திடுவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)