2020 ஜூலை 20ல் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய கல்விக் கொள்கை 2020 ஒன்றிய கல்வி அமைச்சகத் தினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கொள் கையை முதலில் அமல் செய்த இந்திய மாநிலம் கர்நாடகம் ஆகும். ஜூன் 2021ல் உயர் கல்வியில் புதிய' கல்விக்கொள்கையைப் புகுத்துவதாக கர்நாடகம் அறிவித்தது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை அமலாக்கத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாடும் கேரளமும் தங்களின் மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கையை அமலாக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. புதிய கல்விக் கொள்கையை அமலாக்கம் செய்வதில் தனக்கு தயக்கம் இருப்பதாக மகாராஷ்டிர மாநிலமும் அறிவித் துள்ளது. மேற்கு வங்கமோ, கொள் கையை அமலாக்கம் செய்வதற்கு முன்னதாக அதனை மதிப்பீடு செய்யப் போவதாக சொல்லியிருக்கிறது.

இதற்கிடையில், புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துவங்கிய கர்நாடகம், நான்கு ஆண்டுகள் பல்கலைக்கழக படிப்பு, தேர்வின் அடிப்படையிலான மதிப்பெண் முறை, 'நுழைவுவெளியேற்றப் புள்ளிகள்', மற்றும் புதிய கல்விக்கொள்கையின் இதர அம்சங்களை வரிசையாக, அமலாக்கம் செய்யத் துவங்கி விட்டது. இவையெல்லாம், பார்த்த உடனே கண்ணுக்குத் தென்படும் சில அம்சங்கள்தான். கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. நமது கல்விமுறையின் மீது பாதகமான தாக்குதல்களைத் தொடுப் பவையாக அந்த அம்சங்கள் இருக்கின்றன. பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி முறை யிலிருந்தே விலக்கி வைக்கப்படும் அபாயம் காத்துக் கொண்டிருக்கிறது.

கோவிட் தாக்குதல், அதனைத் தொடர்ந்து டிஜிட்டல் முறையில் கல்வி அளிப்பது துவங்கிய பின்பு, ஓரங்கட்டப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் படிப்பில் இரண்டு ஆண்டு இடைவெளி விழுந்தது. இம்மாணவர்களில் பலர், கொள்ளைக் கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக, பள்ளியிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் விலக வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. கர்நாடக மாநில அரசு பாடப்புத்தகங்களை மறுமதிப்பீடு செய்யும் கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டியில் வலதுசாரி சிந்தனையாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். கல்வியை காவிமயமாக்கும் வேலையை அவர்கள் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு அது உதவியாக அமைந்தது.

கோவிட்-19 நெருக்கடியின்போது, கல்வியை டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் அளிப்பது முழுமையான ஒன்றாக்கப்பட்டது. இதன் விளைவாக கிராமப்புரங்களின் மாணவர்கள் உட்பட, ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் இரண்டு ஆண்டு படிப்பு இடைவெளியை எதிர்கொள்ள வேண்டிவந்தது. இந்த மாணவர்களில் மிகப் பலரும் கூடுதல் கட்டணக்கொள்ளையை எதிர்கொள்ள வேண்டிவந்தது; பள்ளியிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் இடையிலேயே வெளியேறும் படி ஆனது.

அப்போதிருந்த கர்நாடக மாநில அரசு பாடப்புத்தக திருத்த கமிட்டி ஒன்றை வலதுசாரி 'அறிவாளிகள்' தலைமையில் அமைத்தது. அதன் நோக்கம் கல்வியை காவிமயமாக்கும் மாநில அரசின் வேலைத்திட்டத்தை மேலும் விரைவு படுத்துவதுதான். உயர் கல்வியில் முஸ்லீம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 66 சதத்திலிருந்து 33 சதமாக வெட்டிச் சுருக்கப் பட்டது. அதேசமயம், மெளலானா ஆசாத் ஆதார ஊதிய (Fellowship) திட்டம் மத்திய  அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது. 

கர்நாடகத்தில் ஹிஜாப் தடை செய்யப்பட்டு, பல ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் கல்வி நிலையங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். இது முக்கியமான பொது தேர்வு சமயத்தில் நடந்தது. விளைவாக, முஸ்லீம் பெண் மாண வர்கள் உயர் கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது.

முஸ்லீம்களுக்கான இடவொதுக்கீட்டை லிங்காயத்துகள், ஒக்காலிக்கா என்ற இரண்டு ஆதிக்கமிக்க சாதிகளுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு, முஸ்லிம்களை, முஸ்லீம் OBC இடவொதுக்கீட்டை பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கான இடவொதுக் கீட்டினைக் கொண்டுவந்தது. முஸ்லீம் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளைக் கடுமையாகக் குறைத்தது.

எனவே, தேசிய புதிய கல்விக் கொள் கையைக் கொண்டுவந்தது கல்வியில் கொள்கை மாற்றத்தைக் கொண்டுவருவதற்கானது என்பது ஏமாற்று வேலையாகும். மாறாக, தலித் மாணவர்கள், ஆதிவாசி மாணவர்கள், முஸ்லீம் மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது என்ற தங்களின் மதவெறி, சாதி வெறி அரசியலை சங்கப் படையினர் மேலும் விரிவுபடுத்துகின்றனர் என்பதே உண்மையாகும்.

புதிய கல்விக்கொள்கை அமலாக்கம் செய்யப்படும்போது, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளாக கொள்கை மாற்றத்தின் காரணமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால், பிஜேபி தலைமையில் இயங்கும் மாநில அரசாங்கங்கள் திடீரென்று கொண்டுவரும், மனம்போன போக்கிலான, ஒரு பக்கச் சார்புள்ள மாற்றங்களின் காரணமாக ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் குறிப்பாக முஸ்லீம் மாணவர்கள் கடுமையான பாதிப்பின் தீவிரத்தை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது.

சில மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கை அமலாக்கம் செய்யப்படலாம். சில மாநிலங்கள் அதன் அமலாக்கத்தை எதிர்க்கலாம். எப்படி யிருந்தாலும், நாட்டிலுள்ள அனைத்து மாணவர் களையும் சில குறிப்பிட்ட அம்சங்கள் பாதிக்கும். அதனால், ஏற்படும் மாற்றங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும். அந்த அம்சங்களைப் பற்றி கட்டுரையில் விவாதிப் போம்.

கடன் வாங்கி கல்வி பெறும் முறை

'மானியத்தின் வழியாக உயர் கல்வி பெறுவது' என்ற முறைக்குப் பதிலாக, 'கடன் பெற்று கல்வி பெறுவது'என்ற முறையைக் கொண்டுவருகிறது என்பதுதான் தற்போதைய புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்துள்ள மாற்றமாகும். 'உயர் கல்விக்கு நிதியளிக்கும் அதிகார அமைப்பு' (Higher Education Funding Authority - HEFA) என்ற ஒன்றை, புதிய கல்விக்கொள்கை ஒரு யோசனையாக முன்வைத் துள்ளது. அந்த புதிய அமைப்பில் கனரா வங்கியும், கல்வித்துறை அமைச்சகமும் சேர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு கடன் அளிக்கும். அந்த அமைப்பு அளிக்கும் கடனைப் பெற்று புதிய வகுப்பறைகள், சோதனைச்சாலைகள், மாணவர் கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அடிக்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தப்படும்.

இப்படி மிகப் பெரிய அளவிக்கு பணம் கடன் பெற்று மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தரும் பல்கலைக்கழகம், கடனை அடைப்பதற்காக மாணவர்களிடமிருந்து மிகப்பெரிய அளவுக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டியிருக்கிறது. இதுபோன்ற பல்கலைக் கழகங்களில் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்று ஒரு மாணவர் நினைப்பார் என்றால், அதற்கான மிகப்பெரிய கட்டணத் தொகையைத் தர வேண்டியிருக்கும். அப்படித் தரமுடியவில்லை என்றால், வேறு வழியின்றி கல்விக்காக வங்கிக் கடனைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்தாக வேண்டும்.

ஆனால், படிப்பு முடிந்த பின்னர், மிக அதிக அளவுக்கு வேலையின்மை இருப்பதால், கௌரவமான சம்பளம் அளிக்கும் வேலைகள் இல்லை என்பதால், கடனை அடைப்பதற்கு மாணவர்கள் அரும்பாடு பட வேண்டியிருக்கும். எனவே, உயர் கல்விக்குள் நுழையும்போதே மாணவர்கள் கடன் வலையில் சிக்கியவர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால், கௌரவமான வாழ்க்கை அமையும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.

2019-2020ல் நடைபெற்ற உயர் கல்வி பற்றிய அகில இந்திய சர்வேயில், இந்தியாவில் உள்ள கல்லூரிகள் 78 சதம் கல்லூரிகள் தனியாருக்குச் சொந்தமானவை என்ற தகவல் உள்ளது. அவற்றில் 68 சதம் கல்லூரிகள் அரசிடமிருந்து எவ்வித உதவியும் பெறுவதில்லை. இவ்வளவு பெரிய அளவுக்கு கல்வி தனியார்மயம் ஆகியிருக்கிறது என்பதால், மாணவர்கள் துன்பத்திற்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக அதிகரித்த கல்விக் கட்டணத்தால் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

1968ஆம் ஆண்டு வெளிவந்த தேசியக் கல்விக்கொள்கை, 'கல்விக்கு ஆண்டு ஒன்றுக்கு தேசிய மொத்த உற்பத்தியில் 6 சதம் ஒதுக்கப்பட வேண்டும்', என்ற கனவை முன்வைத்தது. ஆனால், 2017-2018 ஆண்டில் கூட கல்விக்கான திட்டச் செலவு 2.7% என்ற அற்ப அளவிலேயே நின்றுகொண்டிருக்கிறது. ஜிம்பாவே, பூட்டான், கோஸ்ட்டா ரீகா, மலேசியா மற்றும் பிற நாடுகள் தங்களின் உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டு ஒன்றுக்கு 5 சதம் முதல் 7 சதம் வரை கல்விக்கென்று ஒதுக்குகின்றன என்பதை பொருளாதார வளர்ச்சி கூட்டுறவுக்கான அமைப்பு (OECD) மற்றும் யுனஸ்கோவின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆனால், பெரிய நாடான இந்தியா 68ல் நிர்ணயம் செய்த 6 சதம் என்ற இலக்கை தொட்டுப்பார்க்கவில்லை.

இந்தியாவின் இளைஞர்கள் எண்ணிக் கையோ அதிகரித்து வருகிறது. எனவே, கல்விக்காக இந்தியா செலவு செய்துவரும் தொகை தற்போதிருப்பதை விட பல மடங்கு அதிகமானதாக இருக்க வேண்டும். அப்போது மட்டும் தான் தரமான, அதேசமயம் கைக்கு எட்டும் கல்வியை நாம் நமது மாணவர்களுக்கு அளிக்க முடியும்.

கல்விக்கு அரசு பணம் செலவழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, கொடை முயற்சிகளாகவும், தனியார் பல்கலைக் கழகங்களை தொழில் நிறுவனங்கள் அமைப்ப தாகவும் இன்றைய நிலைமை உள்ளது. (அசீம் பிரேம்ஜி, ஜிந்தால், முன்ஞ்சால், மகேந்திரா, ஷிவ் நாடார் மற்றும் பிறர் பல்கலைக் கழகங்களை அமைத்துள்ளனர்.) இது ஒருபுற மிருக்க, இந்தியாவிற்கு வருகைதந்து, அவர்களின் வளாகங்களை அமைக்கும்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

சமீபத்தில், இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் வளாகங்கள் அமைப்ப தற்காக ஒழுங்குமுறைகளை இந்திய பல்கலைக் கழக மான்ய ஆணையம் (யுஜிசி) வெளி யிட்டுள்ளது (2023). இது புதிய கல்விக் கொள்கையின் நேரடி விளைவாகும். யூஜிசி வெளியிட்டுள்ள ஒழுங்கு முறைகளின்படி, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் வளாகங்களை இந்தியாவில் அமைத்துக்கொள்ளலாம். மாணவர்களைச் சேர்ப்பது குறித்த தங்களின் சொந்த கொள்கைகள் உருவாக்கிக்கொள்ளலாம். கட்டணம் என்ன என்பது பற்றியும், ஆசிரியர் களை பணிக்கமர்த்திக்கொள்வது பற்றியும் கூட அவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். இந்தியா வில் கட்டணம் வசூலிக்கப்பட்ட பணத்தை, அவர்கள் விரும்பியது போல, தங்களின் தாய்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கவும் செய்யலாம்.

இதற்குப் பொருள் என்னவென்றால், கல்வி மிகவும் செலவு பிடிக்கும் ஒன்றாக ஆகும் என்பது மட்டுமல்ல, கல்வித் துறையில் உள்ள வேலைகளும் ஒப்பந்த வேலைகளாக மாறிவிடும்; ஆய்வுகளும் போதனைகளும் ஒருங்கிணைக்கப்படாதவையாக இருக்கும்; இவை மட்டுமல்லாமல் கல்விக்குப் பாதகமான வேறுபல அம்சங்களும் முளைவிட ஆரம்பிக்கும்.

இவ்வாறாக, இந்த இரண்டு மாடல் கல்விகளும், அதாவது, 'கடன் வாங்கி கல்வி', 'வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வி' என்ற இரண்டும், உயர் கல்வி என்பது உயர்ந்தோருக்கு மட்டும் என்றாக்கிவிடும்; உயர் கல்வி தனி அந்தஸ்து உள்ளவர்கள் மட்டுமே பெறக்கூடிய ஒன்றாக ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல், கல்வியின் தரத்தில் மிகப்பெரும் சமமற்ற நிலையைக் கொண்டுவரும். அனைவருக்கும் கிட்டக் கூடிய ஒன்றாக உயர் கல்வி இருக்காது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வியிலிருந்து விளக்கி வைக்கப்படுவார்கள்.

மேற்சொன்ன இரண்டு மாடல்களுமே 'கல்வி தொழிலகங்களை வளர்த்துச் செல்லும் நோக்கம் கொண்டவை. புதிய கல்விக்கொள்கையின் நோக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்பவை. இந்தியாவில் நடப்பில் இருக்கின்ற 'பொதுப் பணத்தில் கல்வி'என்ற கோட்பாட்டுக்கு மரண அடி கொடுப்பவை.

பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test-CUET)

கல்வித் தொழிலகம்' வேலை செய்வதற்காக, தேசிய சோதனை முகமை (National Testing Agency) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை (Common University Entrance Test - CUET) நடத்தும். இந்த முகமை, மருத்துவம், பொறியியல், அல்லது சட்டத்திற்கு மட்டும் என்றில்லாமல், அனைத்துவிதமான கல்வி, தொழில்முறை படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை நடத்தும். இளநிலை பட்டப் படிப்புகளில் சேரவும், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரவும் க்யூட் (CUET) நுழைவுத் தேர்வுகளை நடத்தும். தரப்படுத்தப்பட்ட (standardised) தேர்வுகளில் பெறப்பட்ட ( மதிப்பெண்களின் அடிப்படையில்தான் உயர் கல்விக்காக சேர்க்கை நடைபெறும் என்று புதிய கல்விக்கொள்கை ஆக்கிவிட்டது. இதன் மூலம் மனப்பாடக் கல்விதான் சாத்தியமாகுமே தவிர, ஆய்வு செய்யும் திறன் மாணவர்கள் மத்தியில் வளராது. (இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள (மத்திய பல்கலைக்கழகமான) காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான க்யூட் தேர்வை மாணவர்கள் எழுதிவிட்டார்கள்.)

தமிழ்நாட்டில் நீட்டுக்கு எதிரான போராட் டங்கள் நடைபெற்றன. மத்திய பாடத்திட்டத் திற்கும்; மாநில பாடத்திட்டத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படும் என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. நீட் தேர்வுகள் மாநில மொழியில் நடத்தப்படுவதில்லை என்று மற்றொரு காரணம் சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் போதுமானவை. இதனை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து 85 சதம் மாணவர்கள் மாநில படிப்பிலிருந்தும், 15 சதம் மாணவர்கள் சிபிஎஸ்இ படிப்பிலிருந்தும் சேர்க்கப்படுவார்கள் என்று ஒரே மனதாக ஒரு தீர்மானத்தை மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தையும் நீதிமன்றங்கள் செல்லுபடி யாகாது என்று அறிவித்துவிட்டன. அனிதா என்ற பெண் மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். கிராமப்புரங்ளின் ஒடுக்கப்பட்ட ?பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வு மையங்களில் படிக்க செலவழிக்க முடியாது என்றும், அதனால், அவர்களால் நீட் போன்ற தேர்வுகளில் வெற்றிபெற முடியாது என்றும் வாதிட்டார். கிராமப்புரத்தைச் சேர்ந்த அனிதா 12ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்த போதிலும், அவரால் நீட்டில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், அனிதா விற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுமையும் போராட்டங்கள் நடந்தன.

நீட் போன்ற மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வாக வந்துள்ள க்யூட், அனைத்து விதமான படிப்புகளுக்கும், அடிப்படை அறிவியல், மானுட சமூகம் கலாச்சாரம் (humanities), கலைகள், சமூக அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும் க்யூட் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

இப்போதே, பல்கலைக்கழகங்கள் போட்டா போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் சேர வேண்டும் என்றால் மிக அதிகமான கட் ஆப் மார்க் எடுத்திருக்க வேண்டும். ஒரு லட்சம் இடம் உள்ள மருத்துவப் படிப்பிற்கு 22 லட்சம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இரண்டா யிரம் மாணவர்கள் படிக்க வாய்ப்புள்ள சட்டப் படிப்பில் சேர்வதற்கு 75 ஆயிரம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

எனவே, இடங்கள் குறைவாக இருப்பது தான் முதன்மையான பிரச்சனை. ஆனால், அதனை ஒப்புக்கொள்ள அரசு தயாராக இல்லை. அதற்குப் பதிலாக நுழைவுத்  தேர்வுகளை நுழைக்கிறது. அதன் காரணமாக, தரமான கல்வி பெறும் வாய்ப்பு மாணவர்களுக்கு மறுக்கப் படுகிறது. இப்போது பழி மாணவர்களின் மீது போடப்படுகிறது. போட்டித் தேர்வு மையங்களில் சேர்ந்து பயின்று இந்தப் போட்டித் தேர்வுகளில் அவர் வென்றாக வேண்டும் என்று சொல்லப் படுகிறது. எனவே, அனைத்து மாணவர்களுக்கும் தரமான, செலவு சிக்கனமாக கல்வியை அளிப்பது என்ற பொறுப்பினை அரசு கைகழுவி விட்டது.

விளைவாக, கண் மூடித்தனமான போட்டிப் பந்தயம் நடக்கப் போகிறது. நாடெங்கும் புதிய கோச்சிங் செண்டர்கள் உருவாகும். நீட் போல இப்போது க்யூட்டுக்கு பயிற்சி அளிக்கப் -போகிறார்கள். கோச்சிங் செண்டர்களுக்குப் போகாதவர்கள் க்யூட்டில் வெற்றிபெற முடியாது. உயர் கல்வியில் சேர முடியாது. மறுபடியும் என்ன விளைவு ஏற்படும்? ஏழை, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, தலித், பழங்குடி மாணவர்கள் நல்ல கல்வி பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.

வேறு முறையே கிடையாதா? இருக்கிறது. அதுபோன்ற ஒரு முறை நாடெங்கிலும் நடப்பில் இருந்தது. 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன், துறை/பாடம் தொடர்பான நுழைவுத் தேர்வு என்ற இரண்டின் மதிப்பெண்களின் அடிப் படையில் உயர் கல்வியில் நுழைவது மாணவர்களுக்கு எளிதான ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதனை ஒதுக்கிவிட்டுத்தான் கோச்சிங் தேவைப்படும் தேர்வுகளை அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கை திணிக்கிறது.

பள்ளிகள் கல்விகள் மூடல்

மூவாயிரத்துக்கும் குறைவான மாணவர்களை உடைய அரசுக் கல்லூரிகள் மூடப்பட்டு விடலாம் என்று ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை சொல்கிறது. நாட்டில் கல்வி உரிமைச் சட்டம் நடப்பில் இருக்கிறது. ஆனாலும், 2018-19 மட்டும் 51 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 26,000 பள்ளிகள் மூடப் பட்டன. மத்தியப்பிரதேசத்திலோ 23,000 பள்ளிகளும் ஒடிசாவில் 14,000 பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.

தேவைக்குப் பொருத்தப்பாடு உள்ளதாக் குதல், ஒன்று சேர்த்தல், அல்லது இணைத்தல் என்ற பெயர்களில் 50க்கு குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகள் மூடப்படு கின்றன. பள்ளி மூடலுக்குப் பின்னுள்ள காரணங்களில் மிகப்பெரிய காரணம் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததுதான். மொத்தமாகப் பார்த்தால் 12,54,773 ஆசிரியர் இடங்கள் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ளன. கர்நாடகத்தில் மட்டும் 1,41,358 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதான் இந்தியாவில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இவற்றின் காரணமாக, மேலும் நல்ல பள்ளிகள் இல்லை என்ற காரணத் தாலும் 9,30,531 பள்ளியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பள்ளி ஆசிரியர்கள் முறையாக நியமனம் செய்யப்பட்டு விட்டபோதும் கூட, தேர்தல் போன்ற பிற பணிகள் அவர்களின் தலையில் சுமத்தப்படுகின்றன. விளைவாக, அவர்கள் பள்ளிக்கூட அறையிலிருந்து விலகியிருக்கும் நிலை ஏற்படுகிறது. பிள்ளைகளின் கல்வி சீர் கெடும் நிலை ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளை நம்ப முடியவில்லை என்பதால், பெற்றோர்கள் தனியார் நிறுவனங்களில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். இதன் விளைவு என்றால், கிராமப்புர மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள், பெண் பிள்ளைகள், சிறப்புத் திறன் உள்ள பிள்ளைகள், வேண்டுமென்றே தற்போதைய கல்வி முறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

நிறைவாக..

இந்திய கல்வி முறையில் நெஞ்சில்  பாய்ச்சப்பட்ட மரணக் கத்தியாக தேசிய புதிய கல்விக்கொள்கை இருக்கிறது. மாணவர்கள் நல்ல கல்வியிலிருந்து விலக்கிவைக்கப்படுவார். ஒழித்துக்கட்டப்படுவார்கள். கல்விமுறையில் உள்ள சமூக நீதியை ஒழித்துக்கட்டுவதற்கென்று தேசிய புதிய கல்வி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. கிராமப்புர மாணவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் மாணவர்களுக்கும் கல்வி கிடைக்காமல் போவதற்கு திட்டமிடப் பட்ட கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், கல்வி உதவித் தொகை களை ஒழிப்பது, இடவொதுக்கீட்டை மறுப்பது போன்றவற்றையும் செய்து வருகிறது. தேசியக் கல்விக்கொள்கை ஆவணத்தின் ஒரே ஒரு இடத்தில் கூட, 'இடவொதுக்கீடு'என்ற வார்த்தை வரவில்லை என்பதே ஆவணத்தின் உண்மையான நிறம் என்னவென்பதைக் காட்டுகிறது.

தேசத்தின் மதிப்பு வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி பாரபட்சம் காரண மாகவும், கொடுமைகளின் காரணமாகவும் சமீபத்தில் ரோகித் வெமுலா, பாயல் தட்வி, தர்ஷன்சோலன்கி உள்ளிட்ட நூற்றுக் கணக்கான மாணவர்களை நாம் பறிகொடுத்தோம்.

சமூக வன்மங்களை எதிர்கொண்டு, சமத்துவமான, மலிவான, தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கு மாறாக, சமூகப் பிளவுகளை மேலும் பெரிதாக்கி, காவிமயம், கார்ப்பரேட்மயம், தனியார்மயம் என்ற திட்டத்தின் மூலம், பணக்காரர்களுக்கும் மேற்குடி மக்களுக்கு மட்டுமே கல்வி என்றாக் குவதையே புதிய தேசிய கல்விக்கொள்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தலித், பழங்குடிகள், முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வியின் மீது, பிஜேபி அரசு அனைத்துத் தாக்குதல்களையும் கட்ட விழ்த்துவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பிஜேபி யின் இலக்காக பெண் மாணவர்களும், சிறப்புத் திறன் உள்ள மாணவர்களும் உள்ளனர். இதுபோன்ற தாக்குதலை எதிர்த்து நிற்பதற்கு விவசாயிகளின் போராட்டத்திலிருந்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து நிற்கும் தொழிலாளர்களிடமிருந்தும், குடியுரிமை பறிப்பு சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களிலிருந்தும் நாம் உத்வேகம் பெற வேண்டும்.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான, கல்வி முறையின் மீது சங் பரிவார் தொடுத்துள்ள தாக்குதலுக்கு எதிரான வலுவான மாணவர் இயக்கத்தை நாம் கட்டமைத்தாக வேண்டும்.