நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும், அவையளிக்கும் கல்வியைப் படித்தரமாக்கவும்(standardise) 1956 இல் பல்கலைக்கழக நல்கைக் குழுச்(University Grants commission) சட்டம் இயற்றப்பட்டது. பல்கலைக்கழகங்களின் கற்பித்தல், தேர்வு, ஆராய்ச்சியைத் தரப்படுத்தத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் பல்கலை நல்கைக் குழு மேற்கொள்ளும். ஆசிரியர் தகுதியை வரையறுக்கும். கல்விக்காக ஒதுக்கப்படும் நடுவணரசின் நிதியைப் பிரித்தளிக்கும். இந்த வேலைகளை எல்லாம் இப்போதுள்ள நடுவணரசு,மாநில அரசுகள் இயற்றிய சட்டங்களுக்கு உட்பட்டே செய்யமுடியும்.
சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ள பல்கலை நல்கைக் குழு வரைவு அறிக்கை, மக்களாட்சிக்கும் பல தேசிய இனங்களின் ஒன்றியமாக உள்ள இந்தியா கூட்டாட்சி (federation) மெய்யியலை ஏற்காமல் ஒற்றை (unitary) ஆட்சி என்ற மக்கள்நாயக மறுப்புக்கு வழி வகுக்கிறது.
புதிய ப ந குழு விதிப்படி அமைக்கப்படும் தேடல் குழுவின் நால்வரில் இருவர் நடுவணரசின் கட்சிக்கு ஆதரவாளர்களாதலால்,பல்கலைக் கழகங்களை உருவாக்கி நிதியளிக்கும் மாநில அரசுகள் ஓரங்கட்டப்படும். இப்படி எல்லாத் துறைகளிலும் கூட்டாண்மை ( கூட்டாட்சி ) நிறுவனங்களுக்கு தனது ஆதரவாளர்களை நிரப்புவது ஆர் எஸ் எஸ் நோக்கமாக உள்ளது.
பிரிட்டிஷார் வரும் முன்பு ஒவ்வொரு சாதிக்குமுரிய முறைசாராக் கல்வியே நடைமுறையில் இருந்தது. யாரும் எதையும் கற்கலாம் என்ற பொதுக் கல்வி குமுகாயத்தில் (சமுதாயத்தில் ) எல்லாருக்கும் சமமாகக் கிடைக்கவில்லை. மெக்காலேயின் திட்டத்தாலும், பின்னர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தாலும் பொதுமக்கள் சாதி வேறுபாடின்றி கல்வி கற்று, அதிகாரத்தை நோக்கிக் கைநீட்டிக் கேள்வி கேட்கத் தொடங்கியதால் ஆட்டங்கண்ட இந்துத்துவ ஆட்கள்,அதாவது
ஆர் எஸ் எஸ், மீண்டும் கடந்த காலத்துக்குக் குமுகாயத்தைக் (சமுதாயத்தை) கொண்டுசெல்ல முயல்கிறார்கள். நூறாண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் இப்போதும் பார்ப்பனியம் ஆட்சியாளருக்கு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு தமக்கானவற்றை நிறைவேற்றி வருகிறது. நேரு அமைச்சரவையில் பேராயக் (காங்கிரஸ்) கட்சியில் சேர்ந்தோ தனியாகவோ விடுதலைப் போராட்டத்தில் வேலைசெய்யாத இந்து மகா சபைத் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி அமைச்சரானர். அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்ட புதிய சட்டங்களை ஒதுக்கித் தள்ளிப் பழைய பழக்க வழக்கங்கள் இனியும் செல்லும் என இராசேந்திர பிரசாத் சனாதனத்தை நிலைநாட்டினார். இப்படி இந்துத்துவக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தம் ஆளுகையை ஆர் எஸ் எஸ் தொடர்கிறது. இதன் வெளிப்பாடுதான் பாசக.வின் தேசிய கல்விக் கொள்கையும், கல்லூரி, பல்கலைக்கழக ஊடுருவலும் ஆகும்.
யுஜிசி யின் இந்த நடவடிக்கை நூறாண்டு களுக்கு முன் தோன்றிய ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலின்கீழ், சனாதனத்தை, அதாவது அறிவியலுக்குப் புறம்பான வைதிக மெய்யியலையும் பார்ப்பனர் மேலாண்மையையும் நிலை நிறுத்த மேற்கொள்ளப்படும் போர்த்தந்திர(நீண்டகாலத் திட்ட) நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.இந்த வரைவு ஒழுங்காற்று விதி இந்திய குமுகாயத்தில்(சமுதாயம்) புரையோடித் தேங்கிப்போன பிணியின் மேல்மட்டக் குறியே ஆகும்.
இந்திரா காந்தி அவசரநிலை அறிவித்த காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.பெரியண்ணன் ஆகிய நடுவணரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம் யுஜிசி யால் தீர்மானிக்கப்படும் நிலை வந்தது சோதிடம், வேதகாலக் கணிதம் போன்ற அறிவியலற்ற பாடங்களைத் தமிழ்நாட்டிலும் கற்பிக்கும் நிலை வந்தது. வேதகால அறிவியல் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடி என்று யுஜிசி செலவில், (அதாவது மாநில மக்களிடம் வரியாகப் பறித்து நடுவணரசு குவித்து வைத்திருக்கும் நிதியில்), கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. நடுவணரசு மறைமுகமாக அமர்த்தும் துணைவேந்தர்கள் பதவியில் அமர்ந்தால் தேசிய இனங்களின் வரலாறு, தன்னுரிமை,பண்பாடு, மொழி ,நிலம் யாவும் பறிக்கப்படும் வகையில் ஒற்றைத் தன்மையைக் கல்வி வலியுறுத்தும்.ஏற்கெனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும்,பல்கலைக் கழக வேந்தர்களாக நடுவணரசின் கங்காணிகளாக அமர்த்தப்படும் ஆளுநர்கள் இருக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களே இருக்கவேண்டும், பாடத்திட்டங்கள்,
வட்டாரங்களின் பன்மயத்தைக் காப்பதாக (கிட்டத்தட்ட கூபாவின் கல்வியமைப்பைப் போல) அமையவேண்டுமென்ற கோரிக்கைகள் கல்வியாளர்களிடையே வலுப் பெற்று வருகின்றன. இந்துத்துத்துவ-- கூட்டாண்மை (கார்ப்பரேட்) கள்ளக்கூட்டின் முயற்சிகளை அரசியல், மெய்யியல் ரீதியாகப் பரப்புரை செய்து முறியடிப்பது நம் கடமையாகும்.
இது ஒருபுறம் இருக்க, யுஜிசி யின் இந்த ஆணை சட்டப்படி செல்லுமா என்பதைக் காணலாம். இதை நம் முதல்வர் கண்டித்ததுடன் மற்ற மாநில முதல்வர்களும் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையை எதிர்க்க முன்வருமாறு கேட்டுக்கொண்டார் .'தி இந்து ' ஆங்கில இதழில் சன. 21 அன்று மக்களவையின் முன்னாள் செயலர் நாயகம் ப்பி டி ட்டி ஆச்சாரியும் சன. 22இல், தமிழ்நாட்டில் கல்வித்துறைச் செயலர் நாயகம், இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்படப் பல உயர் பொறுப்புகளை வகித்த அசோக் வரதன் ஷெட்டியும் எழுதிய ஆழமான கட்டுரைகள் வெளிவந்தன.
யுஜிசி என்றால் என்ன?
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும், அவையளிக்கும் கல்வியைப் படித்தரமாக்கவும்(standardise) 1956 இல் பல்கலைக்கழக நல்கைக் குழுச்(University Grants commission) சட்டம் இயற்றப்பட்டது. பல்கலைக்கழகங்களின் கற்பித்தல், தேர்வு, ஆராய்ச்சியைத் தரப்படுத்தத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் பல்கலை நல்கைக் குழு மேற்கொள்ளும். ஆசிரியர் தகுதியை வரையறுக்கும். கல்விக்காக ஒதுக்கப்படும் நடுவணரசின் நிதியைப் பிரித்தளிக்கும். இந்த வேலைகளை எல்லாம் இப்போதுள்ள நடுவணரசு,மாநில அரசுகள் இயற்றிய சட்டங்களுக்கு உட்பட்டே செய்யமுடியும்.ப ந குழுவின் ஒழுங்காற்று விதிகள் நாடாளு மன்றத்தின் இரு பேரவைகளின் முன் வைக்கப்பட்டது நிறைவேறினால் மட்டுமே அவை சட்டமாகும். அதுவரையில் மாநிலச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்களே செல்லும். ஒருவேளை மாநில, நடுவண் சட்டங்களுக்கிடையே பூசல் ஏற்பட்டால் எந்த அளவுக்கு அவை முரண்படுகின்றனவோ அந்த அளவுக்கு மாநிலச் சட்டங்கள் செல்லா.
மேலும் துணைவேந்தர் பதவி ஆசிரியர் பணி இல்லை. நிர்வாகப் பணியே. ஆதலால் அதில் ப ந குழு தலையிட முடியாது என வாதிடப்படுகிறது. எனினும் நீதிமன்றங்களில் இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் மும்பை நீதி மன்றமும் உச்சநீதிமன்றமும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எனினும் மாநிலங்கள் நடத்தும் பல்கலைக்கழகங்களில் ப ந குழு பரிந்துரைக்கவே முடியும், ஆணையிட முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பே செல்லும் என்று கூறுகிறது.
எனவே நாம் கீழ்க்கண்டவாறு நாம் வலியுறுத்த வேண்டும்.
1)மாநிலப் பல்கலைக் கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருக்கக்கூடாது.
முதல்வரே வேந்தர்.
2)பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களைப் பல்கலைக் கழகங்கள் தீர்மானிக்கவேண்டும்.
3)துணைவேந்தர்களாகக் கல்வியாளர்கள் மட்டுமே அமர்த்தப்பட வேண்டும். அந்த உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கே உண்டு.
இவற்றைச் சட்டப் போராட்டத்தால் செய்து முடிக்க முடியாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்குத் தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தையும் போல மீண்டும் போராட அணியமாவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)