பெண்களுக்கு தேர்வுசெய்யும் உரிமை

18 வயதானவர்கள் அரசாங்கங்களை தேர்ந்தெடுக்க முடியுமென்றால் மணந்து கொள்வதா எப்போது மணந்து கொள்வது யாரை மணந்து கொள்வது என்பதை தேர்வுசெய்யும் உரிமையை பெண்களுக்கு ஏன் மறுக்க வேண்டும்?

பெண்களது திருமணவயதை 21ஆக உயர்த்துவது என்ற அமைச்சரவை தவறான ஆலோசனை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.
வயது வந்த அனைவருக்குமான திருமணவயது 18 ஆக இருக்க வேண்டும். எனவே, ஆண்களுக்கான திருமண வயதும் 18 ஆக குறைக்கப்பட வேண்டும். 18 வயதானவர்கள் வயதுவந்தோர், அவர்கள் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க முடியும், நாட்டின் எதிர்காலத்தை முடிவுசெய்ய அந்த வயது போதுமென்றால் அவர்கள் தங்களது சொந்த எதிர்காலத்தையும் மணந்து கொள்வதா, எப்போது மணந்து கொள்வது, யாரை மணந்து கொள்வதென்பதை முடிவுசெய்துகொள்ளும் போதுமான வயது கொண்டவர்கள் என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாகவேண்டும்.
இளவயது கருவுறுதல், இளம் பெண்களது ஆரோக்கியத்தையும் அதனால், குழந்தைகளது ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கச் செய்வது உண்மையே; அது இளம் பெண்களது கல்வியிலும் குறுக்கிடுகிறது. பெண்களது விருப்பத்துக்கு மாறாக, அவர்களது பெற்றோர்களால் முன்கூட்டியே திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கவும் படுகிறார்கள். நாட்பட்ட ரத்தசோகை, ஊட்டச்சத்தின்மை, பெண்களது சீர்குலைக்கப்பட்ட கல்வி இவற்றுக்கான தீர்வு 21 வயதுக்கு குறைவான திருமணங்களை குற்றமயமாக்குவதில் இல்லை; மாறாக, முற்றிப்போன வறுமைக்கு தீர்வுகாணபதில் தான் உள்ளது.
சிறுவர் திருமணத்தை குற்றமயமாக்கும் சட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்கனவே அரசாங்கம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.. கட்டாயத்தினால் முன்கூட்டிய திருமணம் என்ற பிரச்சனைக்கு விடை, இளம் பெண்களது சுயாட்சியை மதிப்பதை, ஆதரிப்பதை வளர்த்தெடுப்பதில்தான் இருக்கிறது. வேறு சொற்களில் கூறுவதாயின், இளம் பெண்களை, அவர்களது விருப்பத்திற்கு எதிராக பெற்றோர்கள் திருமணத்துக்கு நிர்ப்பந்திக்கிறபோது, அரசாங்கம் உதவிமய்யங்களை அமைத்துக்கொடுப்பதும் ஆதரவு தருவதும் செய்திட வேண்டும். பெண்கள், தங்களது சொந்த வாழ்வின் மீது கட்டுப்பாடு கொண்டிருக்கிற, அது தொடர்பாக தங்களது சொந்த முடிவை எடுக்கக் கூடிய பெண்களது உரிமையை ஆதரிக்கிற சமூக பரப்புரையில் நம்பிக்கை கொள்ள (முதலீடு செய்ய) வேண்டும். பால் வேறுபாடின்றி, 18 வயதுக்கு மேற்பட்ட வயதுவந்த அனைவரும் தாங்கள் மணந்து கொள்ள வேண்டுமா, எப்போது மணந்து கொள்வது, யாரை மணந்து கொள்வது என்பது பற்றிய முடிவெடுக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்.
2013-14 ல் இந்து (நாளேடு) மேற்கொண்ட ஒரு ஆய்வில் தில்லி விசாரணை நீதிமன்றத்துக்கு வந்த வல்லுறவு வழக்குகளில் 40% வழக்குகள் வல்லுறவு வழக்குகள் அல்ல, மாறாக, பெற்றோர்கள், சமூகத்தினரது வன்முறை, பலவந்தத்திலிருந்து தப்பித்து தங்கள் காதலர்களை மணந்துகொள்ள இருதரப்பும் இசைந்து ஓடிப்போனதன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளாகும். இந்தியாவில் காப் பஞ்சாயத்துகள், சமூக பேரவைகள் மட்டுமின்றி சங்கி கும்பல்களும் சாதி மறுப்பு திருமணங்கள் மீதும் மத மறுப்பு திருமணங்கள் மீதும் தாக்குதல் தொடுத்து வருவது தெரியும். இது போன்ற நேர்வுகளில், வயதுவந்த பெண்கள் ‘’வயது வராதோர்’’ என்று தவறாக சித்தரிக்கப்படுவதும் அவர்கள் ‘’பாதுகாப்பு இல்லங்களில்’’ சிறைவைக்கப்படுவதும் அந்த இல்லங்களிலிருந்து அவர்கள் சுதந்திரம் பெற வேண்டுமாயின் தங்களது சாதிமறுப்பு, மதமறுப்பு உறவுகளை உதறிவிட்டு தங்கள் பெற்றோர்களது வீட்டுக்குச் செல்ல ஒத்துக் கொண்டால் மட்டுமே முடியும். மேலும், இப்பேர்ப்பட்ட பலவந்தப்படுத்தும் பெற்றோர்களும் அமைப்புகளும் திருமணம் குறித்த பிரச்சனையில் பெண்களது வயதுவந்தபருவம் குறித்து தேர்ந்தெடுத்த வகையில் மறுப்பதற்கு இப்போது ஒரு சட்டத்தைப் பெறப்போகின்றன.
அமைச்சரவை முன்மொழிதல் பெண்களை அதிகாரப்படுத்தாது, மாறாக, பெண்களது சுயாட்சியின் மீது வன்முறையை ஏவுகிற சக்திகளுக்கு அதிகாரம் அளிப்பதை மட்டுமே செய்யும்.
எனவே, அமைச்சரவை தனது முன்மோழிவை திரும்பப்பெற வேண்டுமென்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் கோருகிறது; மேலும், வயது வந்தோர் அனைவரது உரிமையை, அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தனிநபர்களும் யாரை காதலிப்பது அல்லது மணந்து கொள்வது என்பது உள்ளிட்ட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் முழு சுயாட்சியை அனுபவிக்கும் உரிமையை மதிக்கிற வகையில் இப்போதுள்ள சட்டங்கள் அனைத்தையும் திருத்திட வேண்டுமென்றும் கோருகிறது.

ரதி ராவ், தலைவர், அஇமுபெக
மீனா திவாரி, பொதுச்செயலாளர், அஇமுபெக,
கவிதா கிருஷ்ணன், செயலாளர், அஇமுபெக