Adivasi Sangharsh Morcha

பழங்குடியினர் போராட்ட முன்னணி

கார்ப்பரேட் சூறையாடலை எதிர்த்திடுவோம்; மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

பழங்குடியினரிடையே நிலமின்மைக்கு முடிவுகட்டு

5வது அட்டவணை அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பை அனைத்து பழங்குடியினர்  பகுதிகளுக்கும் விரிவுபடுத்து.

வன உரிமைச் சட்டம், 2006 ல் உள்ளதை தவறாமல்  செயல்படுத்து

பழங்குடியினர் மீதான வனத்துறை, காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு முடிவு கட்டு!

ஜனவரி 9, 1900 அன்று, டோம்பாரி புருவில் (ஜார்க்கண்ட்), பிர்சா முண்டா ஆங்கிலேயருக்கு எதிரான ஆதிவாசிகளின் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார், அந்த சமயத்தில் மக்கள் இறையாண்மையை வலியுறுத்தும் வகையில் 'அபுவா டிசம், அபுவா ராஜ்' (எங்கள் நிலம், எங்கள் ஆட்சி) என்ற உல்குலன் புரட்சிகர முழக்கத்தை எழுப்பினார்; அங்கு நூற்றுக்கணக்கான முண்டா பழங்குடியினர்  ஆங்கிலேயர் படைகளுடன் போரிட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், இன்று பழங்குடியினர் தங்கள் அடையாளம் மற்றும் உரிமைகள் மீது  மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். சுரங்கங்கள், அணைகள், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்றவற்றின் பெயரால்,
பழங்குடியினர் சொத்துக்களை இழப்பதற்கும், வெளியேற்றப் படுவதற்கும், 
பழங்குடியினர் நிலங்கள், நீர், காடுகள் மற்றும் இயற்கை வளங்களை கையகப்படுத்துவதற்கு கார்ப்பரேட் அரசு சார்பு கொள்கைகள் உதவுகின்றன. மத்திய இந்தியா முழுவதும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பழங்குடியினர்  தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களிலோ பழங்குடிகள் ஆயுதப்படைகளினால் தாக்குதல் சந்திக்கிறார்கள் ;  மற்றும் கொடூரமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்கொள்கிறார்கள்; அது நாகாலாந்தில் ஆயுதப்படைகளினால் 14 பழங்குடிகள்  படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இதுவரை இல்லாதவாறு வெளிப்பட்டது.  தென்னிந்தியாவில், பழங்குடிகளுக்கு 5வது அட்டவணையின் அரசியலமைப்பு பாதுகாப்பு மறுக்கப்படுகிறது.

நாடு முழுவதும், அடிப்படைக் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் கிடைப்பது கூட மறுக்கப்பட்ட நிலையில் நிலப்பிரபுத்துவம் மற்றும் கந்துவட்டி ஆகிய இரட்டை நிலப்பிரபுத்துவத்தை தாங்கிப்பிடிக்கும் முட்டுகள், பழங்குடியினரை அடிமைப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. எந்தவொரு ஆதிவாசி எதிர்ப்பு கிளர்ச்சியும் வளர்ச்சி விரோத, தேச விரோதச் செயலாகப் பெயரிடப்பட்டு, கடுமையான அடக்குமுறை மற்றும் திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள்
மூலமாக நசுக்கப்படுகிறது. இத்தகைய பொருளாதார ரீதியாக சொத்துக்களை இழத்தல் மற்றும் அரசு அடக்குமுறைக்கு கூடுதலாக, பழங்குடிகளை மத அடிப்படையில் பிளவுப்படுத்த ஆர்.எஸ்.எஸ் அதிகப்படியாக பணியாற்றுவதால், பழங்குடிகள் தீவிரமான பண்பாட்டுத் தாக்குதலையும் எதிர்கொள்கிறார்கள்.

இதை எதிர்கொள்ளும் வகையில், பழங்குடிகள் தங்கள் பண்பாட்டு  அடையாளத்தையும், அரசியலமைப்பு உரிமைகளையும் பாதுகாக்க, தொடரும் கார்ப்பரேட் மற்றும் வகுப்புவாத ஆக்கிரமிப்பு, நிலப்பிரபுத்துவம் மற்றும் கந்துவட்டிக்கு எதிராக, இன்று ஒரு உறுதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 


பழங்குடியினர் போராட்ட முன்னணி, பிர்சா முண்டாவின் இந்த உல்குலன் புரட்சி நாளில், அனைத்து வகையான அடக்குமுறைகள் மற்றும் அடிமைப் படுத்துதலுக்கும் எதிராக பழங்குடிகளின் உரிமைகளுக்காகப் போராடுவதாக பிரகடனம் செய்கிறது.