சிபிஐ-எம்எல் மூத்த தலைவர் தோழர் பவன் சர்மா இன்று சன. 30 மாலை 4 மணியளவில் காலமானார். வயது 74.நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. அவர் விரைவில் குணமடைவார் என நம்பினோம். ஆனால் அவரது உடல்நிலை மோசமாக இறந்துவிட்டார்.
தோழர் பவன் சர்மா பீகாரின் போஜ்பூர் மற்றும் மகத் பகுதிகளில் கிராமப்புற ஏழைகள் மற்றும் விவசாயிகளின் பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். 1980கள் மற்றும் 90களின் கால கட்டங்களில் கட்சி அமைப்பைக் கட்டியெழுப்புவதில் அவரது பங்கு முக்கியமானது. பவன் ஜி என அவர் எப்போதும் அறியப்பட்டார். கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியல் தலைமைக்குழுவில் பணியாற்றினார், அத்துடன் கட்சியின் பீகார் மாநில செயலாளராகவும், அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
அவரது உடல் பாட்னாவில் உள்ள கட்சியின் சட்டமன்ற அலுவலகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை, ஜனவரி 31 ஆம் தேதி, அவரது இறுதிப் பயணம் மதியம் 12 மணிக்கு பான்ஸ் காட் தகன மைதானத்தில் துவங்குகிறது. CPIML பொதுச் செயலாளர் தீபங்கர் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தோழருக்கு புரட்சிகர அஞ்சலி!
தோழர் பவன்ஜிக்கு செவ்வணக்கம் !