Pegasus Spyware

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை

தமிழ்நாடு

பெகாசஸ் ஊழல் திட்டத்திற்கு

பிரதம மந்திரி மோடியே பொறுப்பு!

பத்திரிகையாளர்கள், களப்பணியாளர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்கு எதிராக,

சட்ட விரோத பெகாசஸ் ஊழல் திட்டத்திற்கு,

வரி கட்டுபவர்களின் பணத்தைத் தவறாக பயன்படுத்தியதற்கு

பிரதம மந்திரி மோடியே பொறுப்பு!

புது தில்லி, 29 ஜனவரி 2022

தீவிர வலதுசாரி அரசாங்கங்கள் உள்ளிட்ட பல அரசாங்கங்களும், சட்டவிரோத கண்காணிப்பிற்கு, இஸ்ரேலிய மென்பொருள் பெகாசஸை பயன்படுத்தியது குறித்த ஆவணத்தை ஒரு விரிவான செய்தியாகநியூயார்க் டைம்ஸ் செய்தி ஏடு, இன்று வெளியிட்டுள்ளது. மோடி ஆட்சியானது இன்னும் எதைப்பற்றி தெளிவாக்கவில்லையோ அதனை இந்த செய்தி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு மோடி சென்றிருந்தபோது, மோடியும், நெதன்யாகுவும் 2 பில்லியன் டாலர் மதிப்புடைய, அதிநவீன ஆயுதங்கள், உளவு உபகரணங்கள், ஏவுகணைகள் மற்றும் மிக முக்கியமாக, பெகாசஸ் மென்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுப்பை வாங்குவதற்கு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

கைதிகளை சட்ட விரோதமாக அடைத்து வைக்கவும், அவர்களுக்கு எதிராக ஆதாரங்களை விதைப்பதற்கும் பெகாசஸை பயன்படுத்தியது, பீமா கொரேகான் விஷயத்தில் பெகாசஸை பயன்படுத்தியது, நமக்கெல்லாம் தெரியும். கண்காணிக்கப்படும் தனிநபர்களின், கைபேசிக் கேமராக்களை கட்டுப்படுத்தும் பெகாசஸ், இந்திய பத்திரிகையாளர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை, ஆளும் பிஜேபியின் சில தலைவர்களை, பல பெண்களை இலக்காகக் கொண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் பெகாசசை வாங்கியுள்ளது என நியூயார்க் டைம்ஸ் தற்போது உறுதி செய்துள்ள பின்னணியில், இந்திய சட்டங்களை மீறி, இந்திய குடிமக்கள் அனுபவித்து வந்த அரசியலமைப்பு சட்ட பாதுகாப்புகளை மீறி, குடிமக்களை கண்காணித்த குற்றத்திற்கான பொறுப்பு நிச்சயமாக, மோடி அரசாங்கத்தையே சாரும். வரி செலுத்துவோரின் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை கருவூலத்திலிருந்து எடுத்து, இந்த சட்ட விரோத, மிகவும் நுட்பமான மென்பொருளை வாங்கியது செயல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவும் இல்லை; நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் பெறப்படவில்லை. ஒன்றிய அரசாங்கம், யாரெல்லாம் தனக்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் என நினைக்கிறதோ, அவர்களை எல்லாம் தாக்குவதற்கான கருவியாக இந்த பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியது மிகப்பெரும் ஊழல் நடவடிக்கையாகும். ஆளும் பிஜேபியின் செல்வாக்குமிக்க சில தலைவர்கள், தங்களின் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக, சட்டவிரோதமாக ஊழல் செய்தது மட்டுமல்ல,  அதற்கு மக்கள் பணத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பெகாசசை பரந்து விரிந்த அளவிற்கு பயன்படுத்தி, அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் களவாடிக் கொண்ட, பிரதம மந்திரி, இதற்கு நேரடியான பொறுப்பாக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

சிபிஅய்எம்எல்

மத்தியக் கமிட்டி

Image Thanks TechniAJS