Budget 2022

பொருளாதார ஆய்வறிக்கை, நிதிநிலை அறிக்கை

குறித்து இகக(மாலெ)அறிக்கை

ட் பெருந்தொற்றின் வலி, வறுமைக்கு மத்தியில் பொருளாதார ஆய்வறிக்கையையும் நிதிநிலை அறிக்கையையும் ‘அமுத சகாப்தம்’ எனக் கூறுவது மக்களது புண்ணின் மேல் உப்பைத் தேய்ப்பதாகும்

நிதிநிலை அறிக்கை, உச்சந்தொட்ட பணக்காரர்களுக்கானது, வேலையற்றோருக்கும் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் மேலும் மேலும் துன்பம் தரக்கூடியது

புதுதில்லி, 01-02-2022

மோடி அரசாங்கம் கடந்தகாலத்தில் திரும்பத்திரும்ப அளித்த வாக்குறுதிபடி 2022, விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்கியிருக்க வேண்டும். 2022-23 நிதிநிலை அறிக்கை இது குறித்து அப்பட்டமான அமைதியைக் காட்டுகிறது. 2022 நிதிநிலை அறிக்கையில் விவசாய முதலீடு தேக்கமுற்றிருப்பது தொடர்கிறது, மேலும், அனைத்துவகைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற விவசாயிகளது மிகக் கருவான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான திசையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

நிதிநிலை அறிக்கை 2022-23 முன்வைக்கப்படுவதற்கு முந்தையநாள் வெளியிடப்பட்டுள்ள் சமத்துவமின்மை தொடர்பான ஆக்ஸ்பாம் அறிக்கை, இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மை பேரளவு அதிகரித்திருப்பதாக கூறுகிறது. நாட்டிலுள்ள 84% குடும்பங்களின் வருமானம் 2021ல் குறைந்து போயுள்ளது. ஆனால் அதேசமயம், இந்திய கோடீசுவரர்களின்(நூறுலட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள்) எண்ணிக்கை 102லிருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த சமத்துவமின்மையை இன்னும் அதிகப்படுத்துகிற வகையில் பெருந்தொழில் குழும வரியை மேலும் குறைப்பதாகவும் ஏழைகளுக்கு எவ்வித நிவாரணத்தை அளிக்காத அல்லது வருமானத்தைப் பெருக்க வழிகாட்டாத வழியையே நிதிநிலை அறிக்கை தேர்ந்தெடுத்திருக்கிறது.

சரிந்துவரும் வளர்ச்சிக்கு மத்தியில் இந்தியா பெருத்த வேலையில்லா திண்டாட்டத்தில் வதைபட்டு வருகிறது (இந்திய பொருளாதாரத்தை கண்காணித்து வருவதற்கான மய்யத்தின் தரவுகள், டிசம்பர் 2021ல் 5.2 கோடி இந்தியர்கள் வேலையின்றி இருக்கிறார்கள் என்று காட்டுகின்றன). வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றியும் சாமான்யமக்களுக்கு வருமான உறுதிப்பாட்டை அளிப்பது பற்றியும் நிதிநிலை அறிக்கை குற்றமயமான அமைதியைக் காட்டுகிறது.

மகாதேஊவேஉதி போன்ற உயிர்காக்கும் திட்டங்கள் பற்றி போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போகிற அணுகுமுறையைக்கூட தவிர்த்துவிட்ட நிதி அமைச்சர், நாடாளுமன்ற கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மகாதேஊவேஉதி போன்ற நகர்ப்புர வேலைவாய்ப்புத்திட்டத்துக்கு எவ்விதமான உறுதிப்பாட்டையும் கூட அளித்திட முனவரவில்லை. 

புதிதான, எடுப்பான தலைப்புச்செய்திகளை வியாபாரம் செய்வதில் மிகவும் நாட்டம் கொண்ட ‘மோடிக்கு வாலாட்டும்’ ஊடகங்கள், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கை உரையில் தற்போதைய காலத்தை ‘அமுத சகாப்தம்’ என்று சொல்லியதன்மீது நிலைகுத்தி நின்றுவிட்டன. கோடிக்கணக்கான சகக் குடிமக்கள் உயிர்வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும்போது எதிர்முரணாக, இந்த நிதிநிலை அறிக்கை வெறும் ஒரு ஆண்டுக்கானதல்ல, இந்தியாவுக்கு 100 ஆண்டு ஆகும் போது, அதாவது அடுத்த 25 ஆண்டுவரையிலான ஒரு தொலைநோக்கு அரசாங்கத்தின் லட்சிய தொலைநோக்கு பிரகடம் என நிதிஅமைச்சர் கூறிக் கொள்கிறார்! 

நிதிநிலை அறிக்கை உரையில், தவறிப் போயிருப்பது எவையென்றால், இந்த 2022க்கென்றே அறிவிக்கப்பட்ட பெரிய திட்டங்களான விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம் ஆகியவை பற்றிய திட்டவட்டமான (துல்லியமான) மதிப்பீடுதான். மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசிக்கு முந்திய நிதிநிலை அறிக்கை இது, ‘’2024ல் 5 ட்ரில்லியன் பொருளாதாரம்’’ என அளிக்கப்பட்ட உறுதிமொழி குறித்து நிதிநிலை அறிக்கை அமைதியாக இருக்கிறது. கிராமப்புர ஏழைகள், விவசாயத் தொழிலாளர், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர் ஆகியோருக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நிதிஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான அறிகுறியைக் கூட இந்த நிதிநிலை அறிக்கையில் காணமுடியவில்லை.

2021-22ல் உண்மையான வளர்ச்சி 9.2% என்றும் கோவிட்க்கு முந்தைய வளர்ச்சியை எட்டிப்பிடித்துவிட்டதாகவும் 67% வரிவசூல் அளவுக்கு தாவிச்சென்று விட்டதென்றும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. வரிவருவாய் உயர்ந்துவிட்டது என்று கூறப்படுவதன் உண்மை நிலவரம் என்னவெனில், மக்களது சேமிப்பு உறிஞ்சப்பட்டுவிட்டதென்பதும் அவர்களது சில்லரை சேமிப்புகளும் சூறையாடப்பட்டுவிட்டதென்பதுமே உண்மை. பொதுமுடக்கம், பெருந்தொற்றுக்கு மத்தியிலான வறுமைச் சூழலிலும் கூட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுக்கான அடிப்படை பொருட்கள் மீதான அதிகரித்த வரிவசூலின் காரணமாக, 2021-22 க்கான திருத்திய மதிப்பீட்டின்படி ஒன்றிய அரசின் வரி வருவாய், ரூ 3,94,000 கோடியாக உயர்ந்துள்ளதில் பிரதிபலிக்கிறது. இந்த கட்டத்தில் மற்றொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும், பெருந்தொற்றின் கடந்த ஆண்டில், 2020-21லும் இது அதிகம்தான், அதாவது ரூ3,91,749 கோடியாகும். ஆனால் இது, பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டான 2019-20ல் ரூ2.39 லட்சம் கோடியாக இருந்தது. வரிவருவாய்க்கான இரண்டாவது பெரிய முக்கிய ஆதாரம் இந்திய ரிசர்வ் வங்கியின் உபரிவருமானமாகும். 2021-2022க்கான திருத்த மதிப்பீட்டின்படி இது, ரூ 1,47,353 கோடியாகும் 2022-23 ஆண்டுக்கு இது ரூ 1,13,948 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கஷ்டகாலத்தில் வீட்டுத்தங்கத்தை விற்பதைப்போன்றது. மத்தியகாலத்தில், ஒன்றிய அரசின் பொதுக்கடன், 2014-15ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, ரூ58.66 லட்சம் கோடிகளாகும், ஆனால், அது தற்போது ரூ 117.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கான காரணம், பாஜக அரசாங்கம் பெருந்தொழில் குழும நிறுவனங்களுக்கும் உயர் நிகர-மதிப்புள்ள தனிநபர்களுக்கும் வரிவிதிக்க தொடர்ந்து காட்டி வரும் தயக்கம்தான்; மேலும் இவர்கள்தான் பாஜகவுக்கு தேர்தல் நன்கொடை அளிப்பவர்களாகவும் உள்ளனர். இத்தகைய நிலமை,(அரசாங்கத்தின்) பொது நிதியில் அழுத்தத்தைக் கொண்டுவருகிறது, மானுட வளர்ச்சி நோக்கிலிருந்து பொது, சமூக நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்குகிறது.

பெட்ரோல், டீசல் வரி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் மக்களது சேமிப்பை உறிஞ்சி எடுப்பது, பாரத ரிசர்வ் வங்கியின் உபரிகளை எடுத்துக்கொள்வது, பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து விற்றுத்தள்ளுவது ஆகியவற்றை மேற்கொள்ளுகிற அதே வேளை, வருகிற ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, மானியங்களை மட்டும்  வெட்டுவதற்கும் முக்கிய துறைகளான விவசாயம், கல்வி, சுகாதாரம், கிராமப்புர வளர்ச்சித்துறை ஆகியவற்றுக்கு மக்கள் நோக்குநிலையிலிருந்து அதிக ஒதுக்கீட்டை அளிப்பதற்கு மாறாக அதிகரிக்காத (தேக்கத்தை காட்டுகிற) ஒதுக்கீட்டையே அறிவிக்கிறது. 2021-22ஆண்டுக்கான திருத்த மதிப்பீட்டின் அடிப்படையிலான ஒதுக்கீடான ரூ 2,86,469 கோடியை ரூ 2,06,831 ஆக வெட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது. அதுபோலவே, உரங்கள் மானியத்திற்கான மானியத் தொகையை திருத்த மதிப்பீடான ரூ 1,04,278 கோடியை ரூ 1,05,222 கோடியாக வெட்ட திட்டமிடுகிறது.

விவசாயம் அதனோடு தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஒதுக்கீடு ரூ1,51,521(திம 2021-22 ரூ 1,47,764 கோடி), கோவிட் பெருந்தொற்றால் தாக்குண்ட சுகாதாரத்துறைக்கு வெறுமனே ரூ86,606 (திம ரூ 85,915 கோடி), கிராமப்புர வளர்ச்சிக்கு ரூ 2,06,293 (திம ரூ 2,06,948 கோடி) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணவீக்க தாக்கத்தைக் கொண்டு பார்த்தால் உண்மையான பொருளில் இது வெட்டுதானே தவிர வேறல்ல. கல்விக்கு 18% அளவில் ரூ 1,04,278 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது; ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ள கல்விக்கு துணையாக்க நடவடிக்கைகளை செய்வதற்கு பல முயற்சிகள் தேவைப்படுவதை கொண்டு பார்த்தால், கட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை.

பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினரும் சில நிவாரணங்களை எதிர்பார்த்திருந்தனர். வருமான வரி விகிதங்களில் தளர்வு என்ற வகையில் இதை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அரசாங்கமோ வருமான வரி அளவைகளை மாற்றி அமைக்கவில்லை. உலகிலேயே, இந்தியாவின் ஆகக் குறைவான பெருந்தொழில் குழும வரிகளை அனுபவித்து வருகிறார்கள் பெருந்தொழில் குழுமவாதிகள்; நேர்முக வரி அளவுக்கு மறைமுக வரிகள் வசூலிக்கப்படுவதன் மூலம் மக்களோ வருமானச் சுமையை தாங்கிக் கொள்ளுமாறு செய்யப்படுகின்றனர்.

ஏர் இந்தியா விற்கப்பட்டு விட்டபிறகு, மத்திய பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் ‘போர்த்தந்திர பங்குவிற்பனைக்’ கொள்கையானது என்அய்என்எல் (நீலாஞ்சல் இஸ்பட் நிகாம் லிமிடெட்), எல்அய்சி இன்ன பிற நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் தொடர்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் தீங்குவிளைவிக்கும் செயலாகும்.

அறுபது லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பு, அதற்குரிய திட்டவரைபடங்களை அறிவிக்காமல் கூறியிருப்பதனால் இந்த அறிவிப்பு உண்மையான வாக்குறுதி என்பதைவிட ‘சும்மா’ ஒரு பேச்சுக்கு என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகின்றன (இதனால் முக்கிய மய்ய வங்கிகள் பணப்புழக்க அளவை இறுக்கும் நிலைக்கு செல்லக்கூடும், இதனால் அந்நிய நேரடி முதலீடு, வெளிநாட்டு நிறுவனக் கடன்கள் வருவது பாதிக்கக் கூடும்’ நீடித்து தாங்கும் வளர்ச்சிக்கு மோடி இதைத்தான் மிக அதிகமாக நம்பி இருக்கிறார்). இந்தியாவின் மொத்த விலைக்குறியீடு இரட்டை இலக்க அளவில் உள்ளது, இது கூட்டுமொத்த தேவைக்குறைபாட்டை சரிசெய்ய முதலில் மிக ஆடம்பரமாக அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி கடனளிப்பு நிவாரண அறிவிப்பான செயற்கைத் திட்டமும் கூட அதன் எல்லையை தொட்டு விட்டதையேக் காட்டுகிறது. ஆனபோதும் மோடி அரசாங்கம், மக்களுக்கு நிவாரணம் அளிப்பத்தோ அல்லது பெரிய அளவில் பொதுமுதலீட்டை அதிகப்படுத்தியோ பொருளாதாரத்துக்கு நிதித்தூண்டுதலளிக்கும் நடவடிக்கையை செய்யத்தவறிவிட்டது. கடனளிக்கும் பாதைத் தேர்வும் கூட நெருக்கடியிலிருப்பதால் பொருளாதார ஆய்வறிக்கை எதிர்பார்ப்பதைப்போல் 2022-23ல் 8 முதல் 8.5% வரையிலான வளர்ச்சியை எவ்வாறு எட்டமுடியுமென்பதை எவரும் ஊகித்துக்கொள்ள முடியும்! கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டான 2019-20ல் வளர்ச்சி 5% க்கு குறைவாகவே இருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமில்லாதது என்ற சொல்ல முடியாது.

நிதிநிலை அறிக்கை 2022, இளைஞர், விவசாயிகள், தொழிலாளர், சாமான்ய மக்களுக்கு துரோகமிழைக்கிறது; கோடீசுவரர்களுக்கு துணைபோகிறது.

- இகக(மாலெ) மத்தியக் கமிட்டி,

புதுதில்லி

Image Thanks Scroll.in