குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கான விதிகள் அறிவிப்பு: 2024 தேர்தலுக்கான மிகப்பெரிய அரசியல் சதி!

2024 தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கிற இந்நேரத்தில், 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட, அநீதி, பாரபட்சம், பிளவு அரசியலை மட்டுமே உத்தரவாதப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) விதிகளை உருவாக்கி உடனடியாக அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதானது, மிகப்பெரிய அரசியல் சதிக்கான சமிக்ஞையாகும்.