சாரு மஜும்தாரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க மரபும்

கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் தோழர் சாரு மஜூம்தார் இறந்து 50 ஆண்டுகளாகி விட்டன. நக்சல்பாரியைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய புரட்சி அலைக்கு அவரது மரணம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அந்த சமயத்தில் இந்திய அரசு எதிர்பார்த்து பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி ஆட்சிக்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்புக் குரலையும் ஒடுக்கும்போதும், 'நகர்ப்புற நக்சல்' என்று சொல்ல வேண்டியதாகி விட்டது.