ரயில் பயணிகளுக்கு விரதச் சாப்பாடு! 100 நாள் வேலை தொழிலாளிக்குக் காயுது வயிறு! மோடி அரசின் வேதனை!!

பார்ப்பன வழிபாட்டுமுறையின்படி "இரயில் பயணிகளுக்கு வெங்காயம், பூண்டு சேர்க்காத விரதச் சாப்பாடு நவராத்திரியின் போது கொடுக்கப் படப்போவதாக" இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அவர்கள் கவனம் எங்கே இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்திய அரசின் திட்டமிட்ட செயல் பாட்டால், இந்தியாவில் வேலையுறுதிச் சட்ட வேலை அட்டை வைத்திருக்கும் 15.63 கோடி ஏழை குடும்பங் களுக்குச் சாதாரணச் சாப்பாடே பறிபோகிறது. பார்ப்பன இந்துப் பண்பாட்டைக் காப்பாற்றுவதில், அல்லது அதுபோல நடிப்பதில் உள்ள கவனம் சட்டக் கடமையை நிறைவேற்றுவதில் இந்த அரசுக்கு இல்லை.

தற்கொலை செய்துகொள்ளும் விவசாய தினக் கூலித் தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய
குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

தற்கொலை செய்துகொள்ளும் விவசாய தினக் கூலித் தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.