நீண்டகாலமாக தமிழக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

நீண்டகாலமாக தமிழக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையை கோரி பல தலைவர்களின், வேண்டுகோள்களும், பல ஜனநாயக அமைப்புகளின் ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. குழந்தையாக இருந்த போது தந்தையைப் பிரிந்தவர்கள், இளம் மனைவியைப் பிரிந்தவர்கள், மகனையும் சகோதரனையும் பிரிந்தவர்கள் என அவர்களின் கண்ணீர்க் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்கள் இல்லாத அந்த வீடுகளில், வாழ்வாதாரத்திற்காக பெண்கள் வேலைக்கும் சென்று, குழந்தைகள் வளர்ப்பையும் செய்து பெண்கள் அவதியுறுகிறார்கள்.