தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக.. பாட்டாளி வர்க்க விடுதலைக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகப்பெரிய விலை கொடுத்தது வரலாறு. '40 கள் தொடங்கி '60 கள் வரை செங்கொடி ஏந்திய பல தலைவர்கள், தொண்டர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
தோழர்கள் வாட்டாக்குடி ரணியன் களப்பால் குப்பு, இன்னும் பலர் நிலவுடைமை ஆதிக்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் உச்சமாக, கீழ் வெண்மணியில் பெண் கள், குழந்தைகள், ஆண்கள் என 44 விவசாயக் கூலிகள் குடிசையில் வைத்து கொளுத்தப் பட்டார்கள்.