சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள்

"காஸா இல்லாமல் பெண்ணிய போராட்டம் இல்லை! காஸா இல்லாமல் எதிர்காலம் இல்லை" என்ற முழக்கத்துடன் காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக உறுதி ஏற்று சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள் 2024 தொடங்கியது. காஸாவில் கொல்லப்பட்ட 30 ஆயிரம் பேர்களுள் பெண்களும் குழந்தைகளுமே அதிகம். அந்தப் பகுதியிலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருட்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவே செய்யும். முகாம்களில் உணவுப் பொருள் வழங்க பெரிய ட்ரக்குகள் வருகின்றன. பட்டினியால் தவிக்கும் மக்கள் அவற்றை நோக்கி ஓடுகிறார்கள்.