திருவைக்காவூர் தீண்டாமைத் தாக்குதல்

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூர் என்ற கிராமத்தில் நிலமற்ற தலித் மக்கள் சுமார் 500 பேர் வசிக்கும் அண்ணாநகரர் குடியிருப்பும் நில உடமை கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வன்னியர், உடையார் சுமார் 800 பேர் வசிக்கும் குடியிருப்பும் உள்ளன. கடந்த 16.10.2021ல் தலித் மக்கள் அங்கிருக்கும் பாலத்தின் அருகில் ஒரு பேனரை வைக்க வன்னியர் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, அரசு அதிகாரிகள் காவல் துறையினர் தலையிடுகின்றனர். பேனர் வைப்பது கைவிடப் படுகிறது. அதேவேளை, 18.10.2021ல் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் இரு சமூகத்தின ருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல் முடிவுகளில் வன்னியர் சமூகத்தினர் கையெ ழுத்திட மறுத்தது மட்டுமின்றி, தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்து இரு தரப்பினர் மீதும் வழக்கு போட்டாலும் தலித் மக்கள் குடியிருப்பு களில் தேடித் தேடி வழக்குகள் போடப்படு கின்றது. ஆண், பெண்கள் சிறையில் அடைக்கப் பட்டுளார்கள்.

இந்நிலையில், உண்மை நிலையை அறிய மக்கள் குடியுரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) பேராசிரியர் அரச.முருகுபாண்டியன், நீதிக்கான மக்கள் இயக்க மாநில அமைப்பாளர் .சிம்சன், வழக்குரைஞர் தேசிகன், வழக்குரைஞர் இரவிக்குமார் ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு 13.11.2021 அன்று திருவைக்காவூர் சென்று இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் காவல்துறையினரையும் அரசு அதிகாரிகளையும் சந்தித்தனர். அந்த உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வருமாறு.

பரிந்துரைகள்

1. எந்த நிர்ப்பந்தமுமின்றி ஊராட்சி மன்றத் தலைவர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிமன்றக் கட்டிடத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் அமர்வதற்கு தடை உள்ளது என்ற செய்தி உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்வதற்கு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

2. திருவைக்காவூர் அரசு தொடக்கப் பள்ளியில் தலித் குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கல்வி அதிகாரி உடன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

3. சலூன் கடை, மளிகை மற்றும் டீ கடைகளில் தீண்டாமை கடைப்பிடிக்கப் பட்டால், அந்தக் கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஜி.கே.வாசன் எம்.பி நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை தலித் மக்கள் உட்பட அனைத்து மக்களும் பயன்படுத்த அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்

5. பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் நிபந்தனையின்றி வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

6. வன்கொடுமைச் சட்டத்தின் படி பாதிக்கப்பட் தலித் மக்களுக்குரிய நிவாரணத் தொகையை உடன் வழங்க வேண்டும்

7. இடிந்து விழும் நிலையில் உள்ள தலித் மக்கள் வீடுகள் அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும்.

8. வீடில்லாத தலித் மக்கள் அனைவருக்கும் உடனடியாக அரசு வீடு கட்டித் தர ஆவன செய்ய வேண்டும்.

9. தலித் குடியிருப்பான அண்ணா நகருக்குச் செல்லும் சாலை சீரமைக்கப்பட் வேண்டும்.

10. தலித் குடியிருப்பில் தேங்கி நிற்கும் குப்பைகளை ஊராட்சி அதிகாரிகள் மூலம் அகற்றப்பட வேண்டும்.

11. அனைத்து மக்களும் பயன்படும் விதத்தில் திருவைக்காவூர் பேருந்து நிலையத்தில் பொதுக் கழிப்பறை கட்டிடம்  கட்டித்தரப்பட  வேண்டும்.

12. 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆண்டிற்கு 12 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இது சட்டவிரோதமானது. 100 நாள் வேலைத் திட்டத்தில் 100 நாட்கள் வேலை சட்டப்படி வழங்கப்பட வேண்டும்.  

13. அரசின் பொது நூலகத்தில் வன்னியர் மாணவர்களுக்கு நடைமுறையில் இருப்பதைப் போல, தலித் குழந்தைகள் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

14. அரசின் சமக் கூலி நிர்ணயம்  அமல் படுத்தப்பட வேண்டும்

15. சாதியாதிக்கத் தாக்குதல் மற்றும் காவல்துறையின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை யின்  காரணமான இறந்த லெனின் குடும்பத்தா ருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.