2023 மார்ச் 31 தோழர் சந்திரசேகர் நினைவு நாள் அன்று மதுரை, நீதிபதி கிருஷ்ணய்யர் சமூக கூடத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பாக மாணவர் இளைஞர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் தனவேல், பாலஅமுதன் தலைமை தாங்கினர். தோழர்கள் பெரோஸ் பாபு, உதுமான் அலி. சேலம் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநாட்டுக் கொடியை தோழர் மங்கையர்கரசி ஏற்றினார். தோழர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் குடியாத்தம் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் ப.சிவக்குமார், உயர் கல்வியைக் காப்போம் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் இரா.முரளி, சமூக வலைத் தளத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தோழர் லேகா, புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசிய துணைத் தலைவர் எம்.சுந்தர்ராஜ், சிபிஐஎம்எல் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் சி.மதிவாணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தோழர் மதன் நன்றி கூறினார்.