பகத்சிங், அம்பேத்கார் கனவு கண்ட இந்தியாவைக் கட்டி எழுப்ப உறுதியேற்ற அகில இந்திய மாணவர் கழக 10 வது தேசிய மாநாடு!

அகில இந்திய மாணவர் கழகத்தின் 10 வது தேசிய மாநாடு கொல்கத்தா நகரில் 2023 ஆகஸ்ட் 9 முதல் 11 வரை நடைபெற்றது. மாநாட்டு அரங்கம் சந்திரசேகர்-பிரசந்தா பால் நினைவாக வும் மாநாட்டு மேடை ரோகித் வெமுலா - பயல் தட்வி மன்ஞ் நினைவாகவும் பெயர் சூட்டப் பட்டிருந்தது. மாநாடு இளைய இந்தியா கல்வியையும் கவுரவமான வேலையையும் கோருகிறது, வெறுப்பு கும்பலை அல்ல'' என்பதையும் “பகத் சிங் அம்பேத்கர் கனவு கண்ட இந்தியாவை கட்டி எழுப்புவோம்” என்பதையும் முழக்கமாக கொண்டிருந்தது.

புரட்சிகர இளைஞர் கழகம் அகில இந்திய மாணவர் கழகம்

* புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக! 

* மாணவர்கள் நலன் சார்ந்த, சனாதன கொள்கைக்கு எதிரான, பகுத்தறிவு சிந்தனைகள் உள்ளடக்கிய தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்திடு!!

* கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்!

*சுயநிதி கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! *தமிழகத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக!!!

* தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 90% தமிழகத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக!!!

இந்திய கல்வியைச் சிதைத்து மாணவர்களை கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் புதிய கல்விக் கொள்கை

2020 ஜூலை 20ல் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய கல்விக் கொள்கை 2020 ஒன்றிய கல்வி அமைச்சகத் தினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கொள் கையை முதலில் அமல் செய்த இந்திய மாநிலம் கர்நாடகம் ஆகும். ஜூன் 2021ல் உயர் கல்வியில் புதிய' கல்விக்கொள்கையைப் புகுத்துவதாக கர்நாடகம் அறிவித்தது.

தமிழகத்திற்கான தனித்துவமான கல்விக்கொள்கையை நோக்கிய இரண்டு பாதைகள்

அதிமுக-பாஜக பிற்போக்குக் கூட்டணியை வென்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும், தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்' என அறிவிக்கப்பட்டது. 2022 ஜூன் 1 அன்று தமிழக அரசு அரசாணை எண் 98யை வெளியிட்டது.

புரட்சிகர இளைஞர் கழகம்-அகில இந்திய மாணவர் கழகம் நடத்திய இளைஞர்-மாணவர் மாநில சிறப்பு மாநாடு

2023 மார்ச் 31 தோழர் சந்திரசேகர் நினைவு நாள் அன்று மதுரை, நீதிபதி கிருஷ்ணய்யர் சமூக கூடத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பாக மாணவர் இளைஞர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் தனவேல், பாலஅமுதன் தலைமை தாங்கினர். தோழர்கள் பெரோஸ் பாபு, உதுமான் அலி. சேலம் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநாட்டுக் கொடியை தோழர் மங்கையர்கரசி ஏற்றினார். தோழர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் சிறப்புரையாற்றினார்.

AISA - RYA அகில இந்திய மாணவர் கழகம் புரட்சிகர இளைஞர் கழகம் நடத்தும் மாணவர் - இளைஞர் மாநில மாநாடு 31 மார்ச் 2023

மோடியின் பிஜேபி அரசு, கல்வியைத் தனியார் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் கல்வி மாஃபியாக்களுக்கு, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விலை கூவி விற்று வருகிறது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் திறக்கிரோம், வெளிநாட்டுக் கல்வியை இந்தியாவில் வழங்குகிறோம் என்ற பெயரில், மேலை நாடுகளின் கல்வி குப்பைக் கூடமாய் இந்தியக் கல்வி முறை மாற்றப்படுகிறது. மேலை நாடுகளின் தரமற்ற கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்விச் சந்தையில் இடம் அளிக்கப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏபிவிபி குண்டர்களால் தமிழ்நாடு மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய மாணவர் கழகம் பெரியார் படத்துடன் பேரணி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு மாணவர்கள் பெரியார் படத்தை தாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைத்திருந்தார்கள் என்பதற்காக சங்கிகள் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் குண்டர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கினார்கள். பல்கலைக் கழகத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். பெரியார், அம்பேக்கர், மார்க்ஸ் படங்களை இழிவுப்படுத்தியதனைக் கண்டித்து பிப்ரவரி 25ம் தேதி அகில இந்திய மாணவர் கழகம் (அய்சா) சார்பாக மாணவர்கள் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், அசபுல்லாகான், பகத் சிங், பூலே, சாவித்திரிபாய், அயோத்திதாசர், தோழர் சந்திரசேகர் போன்றோரின் படங்களுடன் பேரணி நடத்தினார்கள்.

புரட்சிகர இளைஞர் கழகத்தின் அகில இந்திய மாநாடு

புரட்சிகர இளைஞர் கழகத்தின் 7வது அகில இந்திய மாநாடு செப்டம்பர் 10-11 தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தின் நீலாம்பர் பீதாம்பர் நகர் என்று அமைப்பாளர்களால் பெயரிடப்பட்ட, மேதினி நகரில் தொடங்கியது. 1857 கிளர்ச்சியின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மாநாட்டு இடம் நீலாம்பர் பீதாம்பர் நகர் என மறுபெயரிடப்பட்டிருந்தது. மாநாட்டின் பொது அமர்வை தோழர் திபங்கர் தொடங்கி வைத்தார்.

‘பில்கிஸ் பானுவோடு நாம்' பில்கிஸ் பானுவுக்கு நீதி கேட்டு போராட்டம்

பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் என்றும் அவருக்கு அநீதி இழைத்த, ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதைக் கண்டித்தும் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!
   
கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.