சாதிய அமைப்பு முறையை, மத வெறியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் அறைகூவலை வைத்துக்கொண்டு வெறித்தனத்தை கிளறிவிடும் முயற்சியை இப்போது அவர்களுடைய திட்டத்தில் புதிய அம்சமாக பார்க்க முடிகிறது. அமைச்சரவை சகாக்கள் இந்த (உதயநிதி ஸ்டாலினின்) அறிவிப்புக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நரேந்திர மோடியே சொல்லும்போது, பாஜக பிரச்சாரகர்கள் இதை இந்துத்துவத்திற்கு எதிரான இனப்படுகொலை ஆபத்து என்று விவரிக்கின்றனர். சாதிய ஒடுக்குமுறை, பாலின அநீதி, மதத்தின் பெயரால் அமல்படுத்தப்படும் மற்றும் பாதுகாக்கப்படும் பல்வேறு பிற்போக்கு அம்சங்கள் போன்ற தீமைகளைக் குறிக்க தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் சுயமரியாதை இயக்கங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் சனாதனம் என்ற வார்த்தையை உதயநிதி பயன்படுத்தி இருந்தார். சதி வழக்கம், சாதி மற்றும் பாலின தப்பெண்ணங்களின் மோசமான வடிவங்கள், மனுஸ்மிருதி போன்ற படைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட இழிவுகள் மற்றும் அநீதிகள் போன்ற குறிப்பான மிக பிற்போக்கான நடைமுறைகளை தடுத்து நிறுத்த இந்துத்துவத்திற்குள்ளிருந்து மத சீர்திருத்தங்களுக்காக எழுந்த குரலுக்கு எதிராக, இந்து மதம் மற்றும் வேதங்களின் கால வரம்பற்ற அல்லது சாசுவத குணாம்சத்தை அறுதியிட்டு சனாதனம் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்படுகிறது. சங்படை இப்போது இந்துயிசம், இந்துத்துவா மற்றும் சனாதனம் ஆகிய சொல்லாட்சிகளை ஒன்றுக்கு பதில் இன்னொன்றாக மாற்றி மாற்றி பயன்படுத்துகிறது. சமூக நீதி, சமூக சமத்துவத்துக்கான போரை எந்த ஒரு மதத்திற்கும் எதிரான முரண்பாடாக நிலை நிறுத்த அனுமதிக்கக் கூடாது. மத வெறியை உசுப்பி விட்டு சமூக நீதி இயக்கத்தை ஒடுக்கும் திட்டத்தை முறியடித்தே ஆக வேண்டும்.